Sunday, 31 August 2014

"பயமாக இருக்கிறது அங்கிள்"...

நமது சகாப்தத்திலேயே இதுவரை கண்டிராத அளவு மிகப்பெரும் மனிதத் துயரமாக இதைக் கருதுகிறேன். இத்தனை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வீடுகளையும் உற்றார் உறவினர்களையும் இழந்து அகதிகளாக மாற்றப்பட்டிருப்பது சிரியாவில் மட்டுமே.”- ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நலனுக்கான ஆணையத்தின் தலைவர் அந்தோனியோ குடிரெஸ், இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்படி கூறியிருக்கிறார்.சிரியாவில் எண்ணெய் வளத்தை கைப்பற்றும் ஒரே நோக்கத்துடன், அந்நாட்டில் மதவெறி பிடித்த பயங்கரவாதிகளை ஆயுதங்களுடன் ஏவிவிட்டு வரலாறு காணாத உள்நாட்டு யுத்தத்தை கடந்த மூன்றாண்டுகளாக நடத்தி வருகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். அதன் கைக்கூலியான சவூதி அரேபியாவும் அதன் கூட்டாளி நாடுகளும், சிரியாவில் உள்நாட்டு யுத்தத்தின் பயங்கரம் குறையாமல் பார்த்துக் கொள்கின்றன.இதன் விளைவு...
இதுவரை 1 லட்சத்து 90ஆயிரம் அப்பாவி மக்கள் படுகொலை* 30லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடிழந்து, உறவுகள் இழந்து நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர்.உள்நாட்டிற்குள்ளேயே அவரவர் இருப்பிடங்களை இழந்து சுமார் 65 லட்சம் பேர் அகதிகளாக மாறியுள்ளனர்.மொத்தத்தில் ஒரு கோடி மக்கள் அகதிகளாக தவிக்கின்றனர்.* இது சிரியாவின் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி என்பது அதிர்ச்சிகரமானது.* நாட்டைவிட்டு வெளியேறி அகதிகளாக சிரிய மக்கள் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அப்படி வருபவர்கள் அனைவரும் உடல் அளவிலும் மனதளவிலும் கொடிய துயரத்தின் பிடியில் சிக்கியவர்களாக இருக்கின்றனர்.* துருக்கி, லெபனான், ஜோர்டான் ஆகிய நாடுகளின் எல்லைகளில் இந்த அகதிகள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மொத்தம் 30லட்சம் பேர் இந்த எல்லைகளுக்கு வந்துள்ளபோதிலும், இதுவரை வெறும் 4 லட்சம் பேருக்கு மட்டுமே .நா. சபை மற்றும் இதர அமைப்புகளால் தற்காலிக குடிசைகள் அமைத்து தரப்பட்டுள்ளன.
எஞ்சிய 26 லட்சம் பேரும் வெட்டவெளியில் கொடும் வெயிலில் உணவின்றி, நீரின்றி, உயிரைக் கையில் பிடித்து ஓடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் குழந்தைகள் மட்டும் 15லட்சம் பேர் ஜெராட்டா எனும்அகதிகள் முகாமில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் பத்திரிகையாளர்கள் உரையாடுகின்றனர்.“எங்கள் அப்பாவைக் காணோம்;வருவாராம்... அம்மா சொன்னார்கள்...”“எங்கள் பள்ளிக் கூடம் இடிந்து கிடந்தது...”“எங்கள் தெரு முனையில் ரத்தமாக இருந்தது”“பயங்கரமாக வெடிக்கும் சப்தம் வீட்டருகே கேட்டது”“பயமாக இருக்கிறது அங்கிள்...”

No comments: