Tuesday, 4 November 2014

மதுரை கணக்கு அதிகாரிகளில் CAOஅட்ஹாக்பதவி . . .

32           88298                   P. Kalavathy                  OC          AO Sr.        MA
35         88793                Tamil Selvi T              OC        AO Sr.     MA
92           88916                   Lalitha N S                     OC          AO Sr.       MA
117         88952                   Bhanumathy G               OC          AO Sr.        MA
191         88987                   Sundararajan S              OC          AO             MA
209         89009                   Vasantha K                     OC         AO              MA
276         180217                 Karuppiah. S.                SC          AO             MA
297         180317                 Suthanthira. C.              SC           AO            MA
302         180324                 Balasubramanian. M.      SC          AO            MA
304         180326                 Subbukalai. K.                SC           AO           MA
 நமது மதுரை மாவட்டத்தில் உள்ள கணக்கு அதிகாரிகளில் CAOஅட்ஹாக்பதவி உயர்விற்கான பட்டியல்  பதவி உயர்வு பெற இருக்கும் அனைவருக்கும் நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.  

BSNLEU அகில இந்திய மாநாட்டின் நிகழ்ச்சிகள் . . .


அருமைத் தோழர்களே! எதிர்வரும் 6.11.14முதல் கொல்கொத்தாவில் நடைபெற உள்ள நமது BSNLEU அகில இந்திய மாநாட்டின் நிகழ்ச்சிகள் தங்களது பார்வைக்காக . . .
  • ·       Inauguration on 6th November`14 at 10 AM sharp by Com. A K Padmanabhan, President CITU. Before that hoisting of Red Flag and paying homage to the Martyrs column will take place.
  • ·       Rally to the place of Open Session (Rani Rashmoni Avenue) will start at 2 P.M. after lunch. Another rally of employees and workers of BSNLEU and other organizations will join in the Open Session from R.N. Mukherjee Road.
  • ·         Open Session will commence at 3 P.M. The Main speaker is Com. Tapan Sen, General Secretary CITU.
  • ·         Subject Committee from 6 to 7-30 P.M. Then Cultural programme upto 8-30 P.M
  • ·         7th NOV. at 9-30 A.M. Subject Committee meeting upto 1 P.M.
  • ·         Working Women’s Convention upto 2-30 P.M. Then Subject Committee meeting after lunch..
  • ·         8th NOV. Subject Committee will start at 9-30 A.M.
  • ·         Seminar at 5 P.M. to be attended by CMD and leaders of fraternal organisations.
  • ·         9th Nov. Subject Committee meeting till conclusion of conference.

மொகரம் திருவிழா . . .





























வாகாவில் தற்கொலை படை தாக்குதல் . . .

இந்திய பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வாகாவில் ஞாயிறன்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.வாகா எல்லைப்பகுதியில் ஞாயிறன்று மாலை தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்குட்பட்ட பகுதியில் ஞாயிறன்று மாலை கொடி இறக்க நிகழ்ச்சி நடை பெற்றது. இராணுவ அணி வகுப்புடன் கூடிய நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் புறப்பட முற்படும்போது தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் அங்கிருந்த இரும்பு கேட் மீது மோதி தனது உடலில் கட்டி இருந்த வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தார். இதைத்தொடர்ந்து அங்கு இருந்த மக்கள் அலறியடித்து ஓடத்தொடங்கினர். அங்கிருந்த கடைகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து நாசமாகின. இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.மேலும் சுமார் 100 பேர் படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதுள்ள சூழ்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் என்ற உளவுத்தகவலைத்தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கோரிக்கையைத் தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் எல்லையில் 3 நாட்களுக்கு விழா எதுவும் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சீக்கியர் யாத்திரிகர்களுக்கு பாதுகாப்பு
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானின் வாகா ரயில் நிலையத்திற்கு வருகை தரும் சீக்கிய புனித பயணிகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அகதிகள் அறக்கட்டளை சொத்து வாரிய தலைவர் சித்திக்குல் பாரூக் தெரிவித்துள்ளார்.

DYFI-34 ...தியாகிகளின் லட்சியங்களை வென்றெடுப்போம்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் தன் இன்னுயிரை நீத்த இளைஞர்களின் ஒப்பற்ற நாயகனான மாவீரன் பகத்சிங்கின் லட்சியங்களான பாலுக்கு அழாத குழந்தைகளும், கல்விக்கு ஏங்காத மாணவனும், வேலையில்லா இளைஞர்களும் இல்லாத ஒரு புதிய தேசத்தை உருவாக்குவோம் என்ற முழக்கங்களை கொள்கைகளாக நெஞ்சில் ஏந்தி சுமார் 5 கோடி இந்திய இளைஞர்களை உறுப்பினர்களாக கொண்டு மாபெரும் விருட்சமாக நிமிர்ந்து நிற்கிறது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். 1970களில் மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசின் கடுமையாக அடக்குமுறைகள், வேலையில்லா திண்டாட்டம், வறுமை உள்ளிட்டவற்றை எதிர்த்து போரிட ஒரு தீரம்மிக்க இளைஞர் அமைப்பு காலத்தின் அவசியம் என்ற சூழலில் தமிழகத்தில் ஒரு புதிய விடிவெள்ளியாய் உருவானது சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி.இதன் முதல் துவக்கமாக 1972ம் ஆண்டு டிசம்பர் 16,17 தேதிகளில் அன்றைய ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த திருப்பூரில் மாநாடாக கூட்டப்பட்டது. இதில் வாலிபர் சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்பொழுது தான் இவ்வமைப்பிற்கு கோவை, நீலகிரி மாவட்ட சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியாக பரிணாமித்தது. இதன் முதல் தலைவராக ஜி.காளியப்பனும், செயலாளராக கே.சி.கருணாகரனும், பொருளாளராக ஆர்.பாலகிருஷ்ணனும் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பிறகு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி உருவாகி மக்களின் பிரச்சனைகளுக்காக தெருவில் இறங்கி போராடியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் தனித்தனியாக இயங்கி வந்த சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியை ஒருங்கிணைக்கும் பொருட்டு 1977ம் ஆண்டு கோவை விளாங்குறிச்சியில் மாநில ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர்களாக என்.நன்மாறனும், கே.சி.கருணாகரனும், ஆர்.கிருஷ்ணன், பாலதண்டாயுதபாணி, பி.ஆர்.நடராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதன்பின் 1978ம் ஆண்டு சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் முதல் மாநாடு திருப்பூரில் எழுச்சியோடு நடைபெற்றது. இம்மாநாட்டில் மாநிலத்தலைவராக கே.சி.கருணாகரனும், பொதுச்செயலாளராக என்.நன்மாறனும் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாட்டின் அறைகூவலாக அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற முழக்கத்தை முன்வைத்து மாநிலம் தழுவிய மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்தியது. மேலும், படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவை, கன்னியாகுமரி ஆகிய இரு முனைகளிலிருந்து சைக்கிள் பிரச்சாரம் துவங்கி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டது. இப்பிரச்சாரத்தின் விளைவாக அடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேலையில்லா கால நிவாரண நிதி என்ற வாக்குறுதியை வழங்கி நடை முறைக்கும் கொண்டு வந்தனர். அதோடுமட்டும் இல்லாமல் மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தி அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்கான கட்டாயத்தை உருவாக்கினர்.இதேபோல், இவ்வமைப்பு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வந்தபோதும்,ஆளும் அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்துவதில் தீரமுடன் போரிட்டது. இதைத்தொடர்ந்து இவ்வமைப்புகளை அகில இந்திய அளவில் ஒருங்கிணைக்கும் முயற்சியாக 1979-80களில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த
அமித் வாப் பாசு அகில இந்திய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். 1980 நவம்பர் 1,2 மற்றும் 3ம் தேதிகளில் பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் இதன் முதல்மாநாடு நடைபெற்றது. அதில் அகில இந்திய அளவில் இந்திய இளைஞர்களின் லட்சியங்களை உயர்த்திப் பிடிக்கும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.25ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இவ்வமைப்பு ஆளும் அரசுகளின் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்த்து இன்று வரை தீவிரமுடன் போரிட்டு வருகிறது. இக்கொள்கைகளுக்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தங்களுடைய இன்னுயிரை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான இளைஞர்கள் சிறைகொட்டடிகளுக்குள் அடைபட்டும், கடுமையான அடக்குமுறைகளை எதிர்கொண்டும் ஆளும் அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். அதேநேரம், ஆளும் அரசுகள் மாறினாலும், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்னும் வகையில் அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டே தான் உள்ளன.குறிப்பாக, பிரிட்டன் காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடி சுதந்திரம் பெற்ற நிலையில் தற்போது அமெரிக்கா ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ நாடுகளிடம் இந்திய தேசத்தை அடகு வைக்கும் பணிகளை ஆளும் அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், இந்திய மக்களின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் மத துவேஷங்களை மக்கள் மனங்களில் புகுத்தும் வேலையையும் மிகத்துரிதமாக ஆளும் பாஜக அரசு செய்து வருகிறது. இத்தகைய அபாயங்களிலிருந்து மக்களையும், தேசத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமையும், பகத்சிங்கின் லட்சியத்திற்காக தங்களுடைய இன்னுயிரை இழந்த தியாகிகளின் லட்சியங்களை வென்றெடுக்க வேண்டிய அவசர, அவசியமும் இந்திய இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது. - .ஜீவானந்தம்

Monday, 3 November 2014

தமிழ் மாநில JAC அறிவித்துள்ள புதிய விளக்க கூட்டம்...

அருமைத் தோழர்களே! எதிர்வரும் 27.11.14 ஒருநாள் வேலைநிறுத்தம், மேலும் நாம் நடத்த இருக்கும்  காலவரையற்ற வேலைநிறுத்தம் குறித்தும் அனைத்து  சங்கங்கள் சார்பாக தமிழகம் முழுவதும் போராட்ட விளக்க கூட்டத்தை நடத்த  உள்ளதால், ஏற்கனவே அறிவித்திருந்த கூட்ட பங்கேற்கும் தலைவர்களின் பட்டியலை தற்போது புதிதாக மாற்றி  தமிழ் மாநில JAC அறிவித்துள்ள புதிய விளக்க கூட்டம்...
  நமது மதுரையில் போராட்ட விளக்க கூட்டம்  19.11.14 அன்று நடைபெறும்.

இதுவரை மின்சாரமே கண்டிராத தமிழக கிராமம்...

மீனாட்சி ஊத்து கிராமத்தில் உள்ள ஒரு வீடு. சூரிய ஒளி மின்சக்தி விளக்கின் உதவியுடன் சமைக்கும் பெண். |
இதுவரை மின்சாரத்தைக் கண்டிராத கிராமம் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மீனாட்சி ஊத்து என்ற கிராமத்திற்கு இன்னும் மின்சார வசதி வந்தபாடில்லை.கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள பெரும்பாறை அருகே மணலூர் பஞ்சாயத்தின் கீழ் வரும் கிராமம் மீனாட்சி ஊத்து. இந்த கிராமத்தை இதுவரை மின்சாரம் வந்தடையவில்லை.தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால் முரணாக அவர் சார்ந்த மாவட்டத்தில் ஒரு கிராமம் இதுவரை மின்சாரப்  பயன்பாட்டையே அடைந்ததில்லை.

அந்தக்கிராமத்தைச் சேர்ந்த பண்ணைத் தொழிலாளி, கே.தங்கையா இது குறித்துக் கூறும்போது, “சூரியன் மறைவதற்குள் எங்களது அனைத்து பணிகளையும் முடித்து விடுவோம். பள்ளியில் படிக்கும் எனது 2 குழந்தைகளும் மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கின்றனர். ரூ.30 விலையில் 2 லிட்டர் கெரசின் ரேஷன் கடை மூலம் கிடைக்கிறது. ஆனால் மாதம் முழுதும் அது போதவில்லை. வெளிச்சந்தையில் கெரசின் விலை லிட்டருக்கு ரூ.60 என்று விற்கப்படுகிறது.” என்றார்.கெரசின் வாங்கப் பணமில்லாமல் கொடிய பூச்சிகளுடன் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் இந்த கிராம மக்கள்.மேலும் சமீபத்திய பெய்த மழையினால் வீட்டுச் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. நிலச்சரிவின் அபாயத்தை எதிர்கொண்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இவர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.திமுக மற்றும் அதிமுக அரசுகள் கலர் டெலிவிஷன், மின்விசிறிகள், மிக்சிகள், கிரைண்டர்களை இலவசமாக அளித்தனர். ஆனால் இவர்கள் வீட்டில் இது அலங்காரத்திற்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது. "மின்சாரம் இல்லாமல் எங்கிந்து இவற்றைப் பயன்படுத்துவது?”என்று கேட்கிறார் முருகன் என்ற மற்றொரு பண்ணைத் தொழிலாளிமணலூர் பஞ்சாயத்தின் அனைத்து கிராமத்திலும் மின்சாரம் உள்ளது. மீனாக்ஷி ஊத்து கிராமத்தில் மட்டும் இல்லை.
மணலூர் பஞ்சாயத்துத் தலைவர் எம்.சி.ரத்தின குமார் இது பற்றி கூறும்போது, “அரசுக்கு இது பற்றி விவரங்கள் அனுப்பியுள்ளோம். சூரிய ஒளிசக்தி தெரு விளக்குக் கம்பங்களை பஞ்சாயத்து அமைத்துள்ளது. மீனாக்ஷி ஊத்திற்கு மின்சாரம் வழங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்இந்நிலையில், ஐதராபாத், தேசிய ஊரக வளர்ச்சி அமைப்புடன் இணைந்து காந்திகிராம அறக்கட்டளை மீனாக்ஷி ஊத்தில் உள்ள 27 குடும்பங்களுக்கு சூரிய விளக்குகளை வழங்கியுள்ளது.

புகை பிடிப்பதால் வரும் மாரடைப்பு . . .

40 வயதிற்குக்   கீழே உள்ள நபர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு புகைபிடித்தலே காரணமாக இருக்கிறது. புகைபிடிப்பதால் நுரையீரலில் புற்றுநோய் வரும் என்பது தெரியும். ஆனால், புகைபிடிக்கும் பழக்கம் இதயத்தை பாதிக்கும் என்பது தெரிவதில்லை.மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலாஸ்டிரால் ஆகியவை இருந்தால் வரும். 50-55 வயது காலகட்டத்தில் பொதுவாக மாரடைப்பு வரும். 40 வயதிற்கு கீழே மாரடைப்பு வருவதற்கு புகைபிடித்தலே காரணமாக இருக்கிறது. பெண்களுக்கு நீரிழிவு நோய் காரணமாக மாரடைப்பு வருகிறது. எனவே, உயிர்கொல்லியான புகைபிடிப்பதைக் கைவிட வேண்டும்.
     சிலர் 40 வயதில் புகைபிடித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் அவருக்கு எந்த நோயும் வரவில்லையே என்று கேட்பார்கள். புகைபிடிக்கும் பழக்கத்தால் 40-50 வயது நபர்கள் பலர் இறந்திருப்பார்கள். அவர்களது இறப்பு தெரியாமல் போய்விடுகிறது.புகைபிடிக்கும் நபர்களில் தப்பிப் பிழைத்தவர்களைப் பார்த்து தவறாக எடைபோடுகிறோம். புகைபிடிப்பது என்பது சட்டைப்பையில்  வெடிகுண்டை வைத்து நடமாடுவது போல ஆகும். அது எப்போது வெடிக்கும் என்று கூற முடியாது. பேருந்தில் மாணவர்கள் தொங்கிக் கொண்டு செல்வார்கள். எனவே, அவர்கள் பேருந்தில் தொங்கிக் கொண்டு வருவதை ஏற்க முடியுமா?
     புகைபிடிப்பவர்கள் தங்கள் குழந்தைகளை பேருந்தில் தொங்கிக் கொண்டு வருவதை அனுமதிப்பார்களா? புகைபடிப்பதை நிறுத்த வேண்டும் என்றால் படிப்படியாக நிறுத்த வேண்டும் என்பார்கள். இதில் உண்மை இல்லை. நிறுத்த வேண்டும் என்று முடிவு எடுத்தால் உடனடியாக நிறுத்துவது தான் இந்தப் பழக்கத்திலிருந்து மீளுவதற்கான வழியாகும்.
     பின்னர் புகைபிடிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்போது சூடமிட்டாய், சுவிங்கம் போட்டு மெல்லலாம். புகைப்டிப்பவர்கள் 10 % புகையைத்தான் உள்ளுக்குள் இழுக்கி றார்கள். மீதம் 90 சதவீதம் புகையை வெளியே விடுகிறார்கள். இதனால் புகைபிடிப்பதின் தீமை அருகில் உள்ளவர்களையும் (Passive smoking) பாதிக்கும். ஆகையால் புகைப்டிப்பவர்கள் அருகில் இருந்தால் அவர்களை விட்டு விலகி இருங்கள். புகை பிடிக்க ஆரம்பித்தால் 10-15 ஆண்டுகளில் இதய நோய் வரும் வாய்ப்பு உள்ளது.   
     கல்லூரிப் பருவத்தில் புகைபிடிக்கும் பழக்கம் தொடங்கினால் 30-35 வயதில்  அந்தப் பழக்கம் உயிர்கொல்லியாக மாறி விடுகிறது. மேலும் ஒருவர் புகைபிடிப்பதை நிறுத்தினாலும் அதன் தீங்கு உடலை விட்டு வெளியேற 4-5 ஆண்டு ஆகிறது.
      நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்றவை வருவது நமக்குத் தெரிவதில்லை. புகைபிடிப்பது என்பது நம் கையில்தான் உள்ளது. எனவே, இதை இன்றே கைவிடுவது நல்லது.