Friday, 6 November 2015

எச்சரித்த ஆய்வறிக்கை: மத்திய அரசின் நிராகரிப்பும் மூடீஸின் உறுதிப்பாடும்.

இந்தியாவை எச்சரித்த ஆய்வறிக்கை முடிவுகளை, 'மூடீஸ் நிறுவனத்தின் ஜூனியர் ஆய்வாளர் ஒருவரின் சொந்தக் கருத்து' என்று மத்திய அரசு காட்டமாகக் கூறியிருப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் பதில் அளித்துள்ளது.தங்களின் ஆய்வறிக்கையில் கூறப்பட்ட அனைத்து அம்சங்களும் நம்பகத்தன்மை மிக்கதே என்று மூடீஸ் நிறுவனம் தமது நிலைப்பாட்டை உறுதியானதாகப் பதிவு செய்துள்ளது.
என்னதான் சொல்கிறது ஆய்வறிக்கை?
எழுத்தாளர் கல்புர்கி கொலை, மாட்டிறைச்சி விவகாரம், 'சகிப்பின்மை' உள்ளிட்ட பிரச்சினைகளின் பின்னணியில், 'சர்ச்சையை தடுத்து நிறுத்துங்கள்; இல்லை யெனில், இந்தியா அளவிலும் சர்வதேச அளவிலும் இந்தியா தனது மதிப்பை இழக்க நேரிடும்' என்று சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் வெளியிட்ட அறிக்கை இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.பொதுவாக தர மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை. பொருளாதாரத்தை பாதிக்கும் அளவுக்கு நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டத்தான் இந்த அறிக்கை வெளிவந்துள்ளதாக தெரிகிறது. அதையொட்டித்தான் வளர்ச்சி என்ற ஒற்றை முழக்கத்தை வைத்து ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி அரசு எந்தப் பாதையில் செல்கிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழத் தொடங்கியிருக்கிறது. | மூடீஸ் ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் அடங்கிய அலசல் கட்டுரைக்கு - எதை நோக்கிச் செல்கிறது இந்தியாவின் வளர்ச்சி?மூடீஸ் அனலிடிக்ஸை மேற்கோள் காட்டி, பல்வேறு செய்திகளும் அலசல் கட்டுரைகளும் பத்திரிகைகளில் வெளியாகின. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மூடீஸ் ஆய்வறிக்கையை நிராகிரித்த பிரதமர் அலுவலகம், அந்தக் கட்டுரையின் நம்பகத்தன்மை மீது சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியது.
பிரதமர் அலுவலகம் மறுப்பு...
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில், "மூடீஸ் அனலிடிக்ஸில் பணியாற்றும் ஜூனியர் அசோசியேட் பொருளாதார ஆய்வாளர் ஒருவரின் சொந்தக் கருத்தை இந்திய ஊடகங்களின் சில பகுதியினர் திரித்து பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிட்டது வருந்தத்தக்கது.ஊடகத்தினர் மூடீஸ் அனலிடிக்ஸ் என்பது ஒரு தரவு மற்றும் ஆய்வு நிறுவனம் மட்டுமே என்பதையும் மூடீஸ் இன்வெஸ்டார் சர்வீசஸ் என்ற நிறுவனமே தரநிலைகளை வழங்கும் நிறுவனம் என்பதையும் வேறுபடுத்திப் பார்க்காதது ஆச்சரியமளிக்கிறது.மேலும், எந்த வித உரிய சிரத்தையுமில்லாமல், மூடீஸ் அனலிடிக்ஸ் என்பதற்கும் மூடீஸ் இன்வெஸ்டார் சர்வீசஸ் என்பதற்குமான வித்தியாசத்தை வாசகர்களுக்கு தெரிவிக்கவில்லை. மூடீஸ் அனலிடிக்ஸ் நிறுவனத்தின் ஜூனியர் ஆய்வாளர் ஒருவரின் கருத்து மூடீஸ் கருத்தாக ஊடகம் நெடுக அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளது.ஜூனியர் ஆய்வாளர் ஒருவரின் சொந்தக் கருத்து தர நிர்ணய நிறுவனத்தின் இந்தியாவை பற்றிய வருணனையாக, தாங்கள் விரும்பும் கதையாடலை சித்தரிக்க பயன்படுத்தப்பட்டதை அரசு துயரத்துடன் பார்க்கிறது" என்று அந்த செய்திக் குறிப்பில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மூடீஸ் நிலைப்பாட்டில் உறுதி
மத்திய அரசின் நிராகரிப்பு குறித்து மூடீஸ் நிறுவனத்திடம் கேட்டதற்கு, அந்நிறுவனம் -மெயில் மூலம் 'தி இந்து' (ஆங்கிலம்) இதழுக்கு விளக்கக் குறிப்பு அனுப்பியுள்ளது.அதில், தங்களது தொடர்ச்சியான பகுப்பாய்வுகளின் அடிப்படையில்தான் மூடீஸ் அனலிட்டிக்ஸ் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது என்று, அது தனிப்பட்ட நபரின் கருத்து அல்ல என்றும் மூடீஸ் தெரிவித்துள்ளது.மேலும், தங்கள் ஆய்வறிக்கையில், அரசியல் நிகழ்வுகளையொட்டிய பொருளாதார விளைவுகள் பற்றியும் கருத்தில்கொள்ளப்பட்டு, அதைக் குறிப்பிடும் பிரிவு ஒன்றும் சேர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.அத்துடன், தனிப்பட்ட கருத்துகளையும், அரசியல் நோக்கத்தையும் கொண்டு ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லை என்றும் மூடீஸ் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் S.I ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி! . . .

தமிழகத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி எஸ்.. பதவிக்கு முழு தகுதி உடையவராக இருப்பதாகவும், எனவே அவருக்கு அந்த பதவியை வழங்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுசேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர். பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக் கொண்டார்.கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம். இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார் பிரித்திகா. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கறார் காட்டியது நீதிமன்றம்இதன் பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டு, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார்.இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட  100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.இந்நிலையில்பிரித்திகா யாசினி குறித்த வழக்கு இன்று (5-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. 'இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ''தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர். அவருக்கு எஸ்.. பணி வழங்க வேண்டும். அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார்.எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இந்தியாவில் எஸ்ஐ ஆகப்போகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி ஆவார்.இதற்கு முன் இந்திய அளவில் 2 திருநங்கைகள் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, 5 November 2015

மனித உரிமைப் போராளி ஆஸி பெர்னாண்டஸ் மறைவு . . .

தமிழகத்தில் மனித உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவந்த ஆஸி பெர்னாண்டஸ் நேற்று காலமானார். அவருக்கு வயது 58.ஆங்கிலோ இந்தியரான ஆஸி பெர்னாண்டஸ், சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் போதே, சமூகப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டினார். கத்தோலிக்க மாணவர் சங்கத்தின் அகில இந்தியப் பொறுப்பாளர்களில் ஒருவராக செயல்பட்டார். சில ஆண்டுகள் சமூகப் பிரச்சினைகளுக்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டார்.மனித உரிமை களுக்கு போராடும் வகையில்ஹெச்ஆர்எப்என்ற அமைப்பை 1994-ல் உருவாக் கினார். இந்த அமைப்பு கல்வி உரிமை உட்பட பல்வேறு உரிமைகளுக்கான மாற்றுக் கொள்கைகள், மாற்றுச் சட்டங்களை உருவாக்கும் மையமாக மாறியது.குழந்தை உரிமைகள் பாதுகாப்பு, கருக்கொலை, காவல்நிலைய சித்ர வதைகள், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான உரிமைகள் என பல களங்களில் மனித உரிமைக்கு குரல் கொடுத்தார். மணல்கொள்ளை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பட்டியல் சாதியினர் மீதான தாக்குதல் உள்ளிட்டவை தொடர்பாக, முன்னாள் நீதிபதி களைக் கொண்டு பொது விசாரணைகளை நடத்தினார்.காவல்துறை சீர்திருத்தம், தகவல் உரிமை உள்ளிட்டவை தொடர்பாக பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.இவரது 32 ஆண்டுகால மனித உரிமைப் பணிகளைப் பாராட்டி, சோக்கோ அறக்கட்டளை அமைப்பு சார்பில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் பெயரி லான விருது இவருக்கு கடந்த அக்டோபர் மாதம்தான் அறிவிக்கப் பட்டது.இதற்கிடையில், வெரிகோஸ் நரம்புப் பிரச்சினையால் ஆஸி பெர்னாண்டஸின் கால்கள் பாதிக்கப்பட்டிருந்தது.சமீபத்தில் உடல்நிலை மோசமானதை அடுத்து, அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார். இந்நிலையில், அவர் நேற்று மதியம் காலமானார். மறைந்த ஆஸி பெர்னாண்டஸுக்கு மனைவி, மகன் உள்ளனர்.அன்னாருக்கு நமது ஆழ்ந்த அஞ்சலி....

Wednesday, 4 November 2015

எழுச்சிமிகு 4.11.15 பெருந்திரள் ஆர்ப்பாட்டம். . .NO-1

ஆகா. . .வென எழுந்தது யுகப்புரட்சி என்று அன்று பாரதி பாடினார்... அவ்வரிகளுக்கு இணையாக 4.11.15 அன்று மதுரை பொதுமேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இப்போராட்டத்திற்கு சிறப்பு சேர்க்க வந்து பங்கேற்ற நமது மாநில செயலர் தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், நமது மாவட்டத்தின் அனைத்து கிளைகளில் இருந்தும் திரளாக கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் மனப்பூர்வமான நன்றியையும், வாழத்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்...என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் D/S-BSNLEU.

எழுச்சிமிகு 4.11.15 பெருந்திரள் ஆர்ப்பாட்டம். . .


அருமைத் தோழர்களே ! கடல் சிறுத்ததோ என்ற அளவிற்கு , மதுரை  பொது மேலாளர் அலுவலகத்தில்  4.11.15  புதன் அன்று காலை எழுச்சிமிகு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மிக மிக சக்தியாக நடைபெற்றது . . .ஆர்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தோழர்.சி .செல்வின் சத்தியராஜ் தலைமை தாங்கினார்.  மாவட்ட செயலர் தோழர். எஸ். சூரியன் வரவேற்புரை நிகழ்த்தினார்,நிகழ்சியைதோழர்.எஸ். ஜான்போர்ஜியா, மாநில துணைத்தலைவர் துவக்கி வைத்து உரையாற்றினார். தமிழ் மாநில செயலர் தோழர் .A. பாபு ராதாகிருஷ்ணன் எழுச்சியான சிறப்புரை நிகழ்த்தினார். தோழர் .N.சோனைமுத்து ,D/S-TNTCWU வாழ்த்துரை வழங்கினார். ஆர்பாட்டத்தை முடித்துவைத்து, மாநில அமைப்பு செயலர் தோழர்.பி. சந்திர சேகர் உரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளர் தோழர்.எஸ். மாயாண்டி நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
  

அடுத்த கட்ட நடவடிக்கைக்காக 4.11.15அவசர செயற்குழு...

அருமைத் தோழர்களே ! பிரச்சனைகளின் தீர்விற்காக 4.11.15 காலை நடைபெற்ற சக்திமிக்க ஆர்பாட்டத்திற்கு பின், அடுத்த கட்ட நடவடிக்கை திட்டமிடலுக்காக  4.11.15 மாலை நடை பெற்ற   அவசர செயற்குழு கூட்ட காட்சிகள் . . .

கார்ட்டூன் . . . கார்னர் . . .

கேடர் பெயர் மாற்றம் குறித்த தகவல் மாநில சங்கம் . . .


Sunday, 1 November 2015

'செல்பி' மோடியால் பாரதிய ஜனதாவுக்கு ஒரு கோடி ரூபாய் செலவு!

கடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலின் போது 'மோடியுடன் செல்பி ' என்ற புதிய பாணியிலான தேர்தல் பிரச்சார யுக்தியை பாரதிய ஜனதா கட்சி கையில் எடுத்தது.ஆனால் 'மோடியுடன் செல்பி என்ற இந்த நவீன பிரச்சார யுக்தி டெல்லி சட்ட மன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சிக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் டெல்லியில் ஆட்சியை பிடித்தது.இந்நிலையில் டெல்லி சட்டமன்ற தேர்தல் கணக்குகளை பாரதிய ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது. அதில்,  'மோடியுடன் செல்பி' என்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக மட்டும் ஒரு கோடியே 6 லட்ச ரூபாய்  செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஏழு சுற்றுகளாக நடந்த இந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல் சுற்றுக்காக மட்டும் 86 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கணக்கில் கூறப்பட்டுள்ளதுஇந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது டெல்லியின் பல்வேறு இடங்களில், பிரதமர் மோடியின்  படம் வைக்கப்பட்டது. அதனுடன் மக்கள் செல்பி எடுத்துக் கொள்ள வைப்பதுதான்  இந்த பிரச்சாரத் திட்டம். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காததால், தற்போதைய பிகார் தேர்தலில் 'மோடியுடன் செல்பி' பிரச்சாரத் திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி கைவிட்டது.

99 ஆண்டுகளுக்கு குத்தகை 3,600 ரூபாய்தான் : பெப்சிக்கு தாமிரபரணியை தாரை வார்க்கும் அரசு!

தென் தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரும் பெப்சி கோலாவாக மாறப்போகிறது. இதற்காக நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் ஆலை அமைக்கும் பணியை பெப்சி நிறுவனம் தீவிரப்படுத்தி வருகிறது.இந்நிலையில்  கங்கை கொண்டானில் பெப்சி ஆலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு  கிளம்பி வருகிறதுபெப்சி ஆலை அமைப்பது குறித்து, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களை பெற்றுள்ளார். அவர் திரட்டிய தகவல்கள் அதிர்ச்சியை தருகின்றன.கங்கை கொண்டானில் சிப்காட் வளாகத்தில்,  36 ஏக்கர் பரப்பளவில் பெப்சி ஆலை அமையவுள்ள நிலத்தின் அரசு மதிப்பு ரூ. 5.40 கோடி ஆகும். சந்தை மதிப்புப்படி பார்த்தால், 15 கோடிக்கும் மேல். ஆனால் இந்த நிலத்துக்கு ஆண்டுக்கு 36 ரூபாய் மட்டும்தான் பெப்சி நிறுவனம் குத்தகையாக  அரசுக்கு செலுத்தும். அப்படியென்றால்  இவ்வளவு மதிப்புள்ள நிலத்துக்கு 99 ஆண்டுகளுக்கு  வெறும் 3,600 ரூபாய்க்கும் குறைவாகத்தான்குத்தகையாக பெப்சி நிறுவனம் அரசுக்கு செலுத்தப் போகிறதுஅது மட்டுமல்ல, தாமிரபரணி நதியில் இருந்து தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கவும், தமிழக அரசுடன் பெப்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு 37 ரூபாயை அரசுக்கு பெப்சி நிறுவனம் வழங்கும்அப்படி தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து அதனை சுத்திகரிக்கப்பட்ட குடிநீராகவோ, கோலாவாகவோ மாற்றி  பெப்சி நிறுவனம் எத்தனை ரூபாய்க்கு நுகர்வோர்க்கு விற்கும்  என்று யோசித்து பார்த்தால் தலை சுற்றுகிறதுதாமிரபரணியில் இருந்து பல லட்சம் லிட்டர் ஊற்றுநீர் உறியப்பட்டால், நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில்,விளை நிலங்கள் பாதிக்கப்படும் நிலை  ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் கங்கை கொண்டானில் பெப்சி நிறுவனம் அமைய பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் போராடி வருகின்றனர். எனினும் இவர்கள் போராட்டத்தையெல்லாம் கண்டு கொள்ளாமல் பெப்சி நிறுவனம் ஆலை அமைக்கும் பணியை தீவிரப்படுத்தி வருகிறதுதமிழத்திலேயே உற்பத்தியாகி  தமிழகத்திலேயே கடலில் இணையும் ஒரே நதி தாமிரபரணிதான். பாபாநாசம் மலையில் உற்பத்தியாகி தூத்தூக்குடி மாவட்டம், புன்னக்காயல் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது தாமிரபரணி. இந்த இரு மாவட்டங்களின் ஒரே நீராதாரமும் கூடஅத்தகைய பெருமை வாய்ந்த ஜீவ நதியும் பெப்சி கோலாவுக்கு தாரை வார்க்கப்படுவதுதான் வேதனை

புத்தக அறிமுகம்: இந்தியா ஏன் மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும்?

ஆன்மிக நோக்கில் ஒரு புரட்சிகரமான பார்வையை, விரிந்தளாவிய மனப் பக்குவத்தை இந்தியாவுக்கு வழங்கிய விவேகானந்தரின் சிந்தனைகளின் தொடர்ச்சியாக நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர் திகழ்கிறார். இந்தியா ஏன் ஒரு மதச்சார்பின்மை நாடாக இருந்தாக வேண்டும் என்பதற்கு இந்த இருவருமே இந்திய ஆன்மிக மரபைத் துணைகொண்டு விளக்கம் தருகிறார்கள்.இந்திய வரலாற்றை மதமோதல்களின் வரலாறாக மாற்றுவதற்குப் பல்வேறு தரப்புகளிலுமுள்ள சிறிய பகுதியினர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பெரும் மனத் தடைகளை ஆன்மிக, சமூக மரபின் வழியாகவே உருவாக்குகிறது இந்த நூல்.
புரட்சிகர மனிதாபிமானியான எம்.என். ராய், “மரபுச் செல்வங்களின் பெருமையை உணர்ந்து போற்ற இயலாமைதான் நம் கால கட்டத்தின் மகத்தான நெருக்கடிஎன்று சாடிவிட்டு, மதச்சார்பின்மை நவீன அறிவியல் உலகின் சமூகக் கலாச்சாரத் தேவை என வரையறுக்கிறார். மதச்சார்பற்ற நாடு எனும்போது பலரும் எதிர்கொள்ளும் சிக்கல், தம் மதத்தைத் தானும் தனது நாடும் துறந்துவிட வேண்டும் என்று இந்தக் கருத்து வலியுறுத்துகிறதோ என்கிற அச்சம் மேலிடுவதால்தான். ஆனால் இந்தியச் சமூகப் பார்வை கொண்ட ராய், மதத்தை அதன் உண்மையான லட்சியத்தை வளர்க்கும் கருவியாகப் பயன்படுத்த ஊக்கமளிக்க வேண்டும், அறம் சார்ந்து செயல்படும் சுதந்திரமும் பகுத்தறிவும் கொண்டதாக இருக்க வேண்டுமென வரையறுக்கிறார்.இதன் வழியாக இந்தியா தனது சுதந்திரத்தை மதச்சார்பின்மை எனும் மாமருந்துகொண்டே எட்ட முடியும் என கிருஷ்ணய்யர் கூறுகிறார். இதன் மறுபக்கம் சிறுபான்மை மதவாதத்துக்கு ஆதரவாய் இருப்பதுவும் அல்ல. இங்கு நேரும் குழப்பத்தை அகற்ற அவர் மூன்று வகைகளில் முயற்சி செய்கிறார். அறிவியல், ஜனநாயகம், இந்திய ஆன்மிக மரபு எனும் முப்பெரும் பார்வைகளால் தன் கருத்துக்களைச் செம்மை செய்து அறிவும் மனிதநேயமும் இணைந்து நிற்கிற பகுதியாக ஆக்குகிறார்.அறிவியலிலும் ஜனநாயக சோஷலிசத்திலும் இன்னும் கைப்பக்குவம் இல்லாத இந்திய உளவியலைச் சமைப்பதற்காக அவர் இந்திய ஆன்மிக மரபை முன்வைக்கிறார். இதன் வாயிலாக மதச்சார்பின்மை ஓர் இயற்கையான முகிழ்ப்பு என நிறுவப்படுகிறது; அது வலிந்து இந்திய அரசமைப்புச் சட்டத்துக்குள் சொருகப்படவில்லை.
இந்தியாவின் தனித்த அரசியல் மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஒவ்வொருவரின் பங்களிப்பும் தேவை. இதற்கு கிருஷ்ணய்யர் முன்வைக்கும் வாதம் அருமையானது. நம்மை ஒருவர் வழிநடத்திச் செல்வதைவிட நாமே நம்மை வழிநடத்தக் கோருகிறார்: “நாம் வெறும் பயணிகள் அல்ல; நாமே மாலுமிகள்; நமது கப்பல் எந்தக் கரையைச் சேரவேண்டும் என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும்.”மதச்சார்பின்மையைச் சட்டமன்றத் தீர்மானத்தாலோ அரசின் ஆணைகளாலோ வளர்த்துவிட முடியாது. இதைத் தெரிந்துகொண்ட நிலையில் மதச்சார்பின்மைத் தத்துவத்துக்கு நாடு, நாட்டின் ஐக்கியம், வளர்ச்சி, பின் அதற்கான ஆன்மிக உள்ளுறை என்று நாலா பக்கங்களிலும் அதனைச் செப்பமுறச் செதுக்குகிறார் கிருஷ்ணய்யர். இவை சமூக விஞ்ஞானத்தின் கண்ணிகளாக நம்மைச் சூழ்கின்றன.இங்கு மதம் சார்ந்த வெறுப்புகள் ஏன் விதைக்கப்படுகின்றன, அவற்றின் உண்மையான நோக்கம் என்ன, இவற்றால் ஆதாயம் அடைகிற சக்திகள் எவை, அவை எங்கே இருக்கின்றன என்றெல்லாம் கிருஷ்ணய்யர் எழுப்பும் கேள்விகள் நம் மனசாட்சிக்கு அழைப்பு விடுக்கின்றன. “செத்த பன்றியும் பசுவும்கூட நம் குடியரசை நடுநடுங்கச் செய்கிறதே, இதைக் கண்டு சிரியுங்கள்என்று கிருஷ்ணய்யர் சொல்கிறார். அது சிரிப்பதற்கான வாய்ப்பு அல்ல, நம் மனசாட்சிக்கு விடுக்கப்படும் சவால்...

"மூடு டாஸ்மாக்கை மூடு " பாடல் இயற்றி பாடிய கோவன் கைது .....

"மூடு டாஸ்மாக்கை மூடு "  பாடல் இயற்றி கைதாகியுள்ள கோவன், சமூக மாற்றம் குறித்தும் அதன் அத்தியாவசியம் குறித்தும் பல ஆண்டுகளாகப் பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருபவர். கோவன் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124- (தேச துரோகம்), 153- (சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல்), 505 (1) பி, சி (வதந்திகளை பிரசுரித்து, பரப்பி மக்களை அரசுக்கு எதிராக செயல்படும்படி தூண்டுவது) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மத்திய கிரைம் பிராஞ்சு வட்டாரம் தெரிவிக்கின்றது. அணைத்து ஜனநாயக சக்திகளும் அரசின் இந்  நடவடிக்கையை  கண்டித் துள்ளார்கள்.

M.S.S.ராவ் மாற்றம் -உச்ச நீதிமன்றம் அனுமதி . . .

அருமைத் தோழர்களே ! கேரள  மாநிலத்தில் பல மாதங்களாக தொடர்ந்து நமது தொழிற் சங்கங்களுக்கு பிரச்சனை கொடுத்துவந்த, CGM - M.S.S.ராவ் அங்கிருந்து மாற்றல் செய்யப் பட்டதை தொடர்ந்த செய்திகள்  குறித்து நமது BSNLEU மத்திய சங்கம் அளித்துள்ள தகவல் பற்றி மாநிலசங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது . . . இங்கே கிளிக் செய்யவும்.