Thursday 5 November 2015

மனித உரிமைப் போராளி ஆஸி பெர்னாண்டஸ் மறைவு . . .

தமிழகத்தில் மனித உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவந்த ஆஸி பெர்னாண்டஸ் நேற்று காலமானார். அவருக்கு வயது 58.ஆங்கிலோ இந்தியரான ஆஸி பெர்னாண்டஸ், சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் போதே, சமூகப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டினார். கத்தோலிக்க மாணவர் சங்கத்தின் அகில இந்தியப் பொறுப்பாளர்களில் ஒருவராக செயல்பட்டார். சில ஆண்டுகள் சமூகப் பிரச்சினைகளுக்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டார்.மனித உரிமை களுக்கு போராடும் வகையில்ஹெச்ஆர்எப்என்ற அமைப்பை 1994-ல் உருவாக் கினார். இந்த அமைப்பு கல்வி உரிமை உட்பட பல்வேறு உரிமைகளுக்கான மாற்றுக் கொள்கைகள், மாற்றுச் சட்டங்களை உருவாக்கும் மையமாக மாறியது.குழந்தை உரிமைகள் பாதுகாப்பு, கருக்கொலை, காவல்நிலைய சித்ர வதைகள், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான உரிமைகள் என பல களங்களில் மனித உரிமைக்கு குரல் கொடுத்தார். மணல்கொள்ளை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பட்டியல் சாதியினர் மீதான தாக்குதல் உள்ளிட்டவை தொடர்பாக, முன்னாள் நீதிபதி களைக் கொண்டு பொது விசாரணைகளை நடத்தினார்.காவல்துறை சீர்திருத்தம், தகவல் உரிமை உள்ளிட்டவை தொடர்பாக பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.இவரது 32 ஆண்டுகால மனித உரிமைப் பணிகளைப் பாராட்டி, சோக்கோ அறக்கட்டளை அமைப்பு சார்பில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் பெயரி லான விருது இவருக்கு கடந்த அக்டோபர் மாதம்தான் அறிவிக்கப் பட்டது.இதற்கிடையில், வெரிகோஸ் நரம்புப் பிரச்சினையால் ஆஸி பெர்னாண்டஸின் கால்கள் பாதிக்கப்பட்டிருந்தது.சமீபத்தில் உடல்நிலை மோசமானதை அடுத்து, அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார். இந்நிலையில், அவர் நேற்று மதியம் காலமானார். மறைந்த ஆஸி பெர்னாண்டஸுக்கு மனைவி, மகன் உள்ளனர்.அன்னாருக்கு நமது ஆழ்ந்த அஞ்சலி....

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா