Monday, 16 November 2015

நவம்பர் 15-உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி V.R கிருஷ்ணய்யர் பிறந்தநாள்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வீ. ஆர். கிருஷ்ணய்யர் பிறந்தநாள் நவம்பர் 15, 1914. தன்னுடைய பள்ளி மாணவப் பருவத்தில் துவங்கி கல்லூரி சட்ட மாணவராக, வழக்கறிஞராக, மக்கள் சேவகராக சிறந்த அமைச்சராக, உயர்நீதி மன்ற நீதிபதியாக, சட்டக்கமிஷன் உறுப்பினராக, உச்சநீதிமன்ற நீதிபதியாக பணி நிறைவு பெற்ற பின்னர் அவர் ஆற்றிய பணிகள் போற்றத்தக்கன. அதே சமயத்தில் அவர் வாழ்கையில் கிடைத்த அத்துனை தருணங்களின் போதும் ஏழை எளிய உழைப்பாளி மக்களின் வாழ்வுக்காக, உரிமைக்காக வாதாடியும், போராடியும் வாழ்ந்துள்ளார். வி.ஆர். கிருஷ்ணய்யர் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு அக்கொடுமையையும் அனுபவித்துள்ளார். 1957ஆம் ஆண்டு வாக்குசீட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் உள்துறை, சிறைத்துறை, பாசனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். மனிதர்களை நேசித்த அந்த மாமனிதன் வாயில்லா ஜீவன்கள் மீதும் தம்முடைய பறிவைக்காட்டத் தவறவில்லை. நோயாளிகள், அடித்தட்டு மக்களின் துன்பங்களில் உடன் நின்று பாதுகாத்த உத்தமர். தனது நூறாண்டு வாழ்க்கையை நிறைவு செய்தவர்.

No comments: