1974-ஆம் ஆண்டு நவம்பர் 23,24 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்ற செம்மலர் இலக்கிய இதழ் எழுத்தாளர்களின் கூட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (தமுஎச) என்ற பெயரில் ஒரு இலக்கிய அமைப்பைத் துவக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 1975-ஆம் ஆண்டு ஜூலை 12,13 ஆகிய தேதிகளில் மதுரை தமுக்கம் அரங்கில் இதன் முதலாவது அமைப்பு மாநாடு நடைபெற்றது.இந்த அமைப்பின் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில், அது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கமாக (தமுஎகச) பரிணமித்தது.
முதல் மாநாடு நடைபெற்ற அதே தமுக்கத்தில் அமைப்பின் 40-ஆவது ஆண்டு மாநில சிறப்பு மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது.தோழர் கே.முத்தையா நினைவுச் சுடர்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் களில் ஒருவரான தோழர் கே.முத்தையா நினைவுச்சுடர், அவர் ஆசிரியராகப் பணியாற்றிய செம்மலர் இலக்கிய மாத இதழ் வளாகத்தில் இருந்து புறப்பட்டது.நினைவுச்சுடரை, தமுஎகச மூத்த தலைவர்களில் ஒருவரும் செம்மலர் துணை ஆசிரியருமான தி.வரதராசன் எடுத்துக் கொடுத்தார்..சுடரை லட்சுமிகாந்தன் தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த என்.முத்துப்பாண்டி, பி.பாலசுப்பிரமணியன், வி.நம்புராஜன், K.R.ராமலிங்கம், வி.ராமச்சந்திரன், என்.யோகேஷ், சி.கௌசிக், ஆர்.கஜோல்ராம், ஜி.சுனந்தா, என்.யோகதர்ஷினி ஆகியோர் கொண்டு சென்றனர்.துவக்க நிகழ்வுமாநாட்டின் துவக்கத்தில் மதுரை தமுக்கம் மைதானத்தில் அமைந்துள்ள தமிழன்னை சிலைக்கு தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெருமாள், சங்கரதாஸ் சுவாமிகள் சிலைக்கு சுந்தா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த தமுஎகச வரலாற்றுக் கண்காட்சியை இரா.தெ.முத்து, ஓவியர் வெண்புறா, எஸ்.கருணா, ஈஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர். அதைத் தொடர்ந்து மாநாட்டு அரங்கில் தோழர். கே.முத்தையாவின் படத்தை மூத்த தலைவர் ப.ரத்தினம் திறந்து வைத்தார்.தொடர்ந்து பல்வேறு அமர்வுகளில் தலைவர்கள் உரையாற்றினர். முதலாவது அமர்விற்கு மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். வரவேற்புக் குழு தலைவர் இசையறிஞர் ந.மம்முது பிரதிநிதிகளை வரவேற்றார். எழுத்தாளர் பிரபஞ்சன் துவக்க உரையாற்றினார்.முன்னோடிகளுக்குபாராட்டி மாநாட்டில் தமுஎகச முன்னோடிகள் பேரா.அருணன், டி.செல்வராஜ், ச.செந்தில்நாதன், தி.வரதராசன், எஸ்.ஏ.பெருமாள், ப.ரத்தினம், வேல.ராமமூர்த்தி, புலவர் பாலு ஆகியோர் கௌரவிக்கப் பட்டனர். இந்நிகழ்விற்கு மாநில பொதுச்செயலாளர் சு.வெங்கடசேன் தலைமை வகித்தார்.நூல் வெளியீடு“காலத்தின் குரல் தமுஎகச நாற்பது ஆண்டு” வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. நூலை நந்தலாலா வெளியிட சு.ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.தமுஎகச வழங்கும் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது வரலாற்று ஆய்வாளர் முனைவர் ஆ.சிவசுப்ரமணியனுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக விருதாளரை அறிமுகம் செய்து உதயசங்கர் பேசினார்.
‘கலை இலக்கிய உலகில் நாம் பதித்த தடங்கள்’ என்ற தலைப்பில் தமுஎகச கௌரவத் தலைவர் பேரா.அருணன் கருத்துரையாற்றினார். இந்த அமர்விற்கு சிகரம் ச.செந்தில்நாதன் தலைமை வகித்தார்.‘உலகமயமும் பண்பாட்டுக் களமும்‘ என்ற தலைப்பில் பிரளயன், ‘சாதி-மதம்: இன்றைய சவால்கள்’ என்ற தலைப்பில் மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் உரையாற்றினர். இந்த அமர்விற்கு ஆர்.நீலா தலைமை வகித்தார்.கருத்துரிமை காக்க கரங்கள் கோர்ப்போம் என்ற நிகழ்வில் கவிக்கோ அப்துல் ரகுமான், பிரபஞ்சன், பொன்னீலன், வண்ணதாசன், டி.செல்வராஜ் உள்ளிட்ட படைப்பாளிகள் கலந்துகொண்டனர்.கரிசல் கிருஷ்ணசாமி, கரிசல் கருணாநிதி, திருவுடையான், அன்புமணி, வைகறை கோவிந்தன், உமா, வசந்தி, ராயப்பன், சுகந்தி ஆகியோர் பாடல்கள் பாடினர். தமுஎகச மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் அ.ந.சாந்தாராம் நன்றி கூறினார்.வாழ்த்துதமுஎகச-வின் 40-வது ஆண்டு மாநில சிறப்பு மாநாடு வெற்றிபெற முன்னோடி எழுத்தாளர்கள் கு.சின்னப்பபாரதி, மேலாண்மை பொன்னுச்சாமி, காஸ்யபன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.கலை இலக்கிய இரவுதொடர்ந்து கலை இலக்கிய இரவு மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் ஸ்ரீரசா தலைமையில் நடைபெற்றது. என்.ஸ்ரீதர் வரவேற்றார். முன்னாள் நீதிபதி கே.சந்துரு, திரைக்கலைஞர் ரோகிணி, மேடைக்கலைவாணர் என்.நன்மாறன், பேரா. அருணன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.இதில், ‘முற்போக்கு தமிழ் மரபு’ சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. கா.பிரகதீஸ்வரன் மலரை வெளியிட அஞ்சலி நல்லெண்ணெய் நிறுவனம் சார்பில் கே.எஸ்.ஆர்.நடராசன் பெற்றுக்கொண்டார்.
‘நவகவி-1000’ கவிதை நூலை அ.குமரேசன் வெளியிட, பாண்டியன் ஊறுகாய் நிறுவனர் ஜி.கந்தசாமி பெற்றுக்கொண்டார். கரிசல் குயில் கிருஷ்ணசாமியின் ‘மனுஷி’ இசை குறுந்தகடை நா.முத்துநிலவன் வெளியிட தேவி டிரேடர்ஸ் எஸ்.ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
நாட்டுப்புற கலைச்சுடர் விருதை இரா.முருகவேல் (எ)வேலு ஆசான் (தப்பாட்டக்கலைஞர், அலங்காநல்லூர்) மயிலை பாலுவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.மதுரை எஸ்.மலைச்சாமி குழுவினரின் கிராமியக்கலை நிகழ்ச்சி, அலங்காநல்லூர் சமர் கலைக்குழுவின் தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றன. இந் நிகழ்வில் நமது BSNLEU அரங்கத்தில் இருந்து தோழர்கள் செல்வின் சத்தியராஜ், சூரியன், வைத்திலிங்க பூபதி, சௌந்தர், சோனைமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment