வளர்ந்து வரும் இணைய வழி பயன்பாட்டின் ஊடாக பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் - ன் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு வாய்ப்புகள் வலிய வருகிறது. ஆனால் அதனை அரசு புறக்கணித்து வருவதுதான் புரியாத புதிராக இருக்கிறது. அதே நேரம் பொதுத்துறை நிறுவனத்தின் கட்டமைப்பினை பயன்படுத்தி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோலோச்சுவதும், அதனை அரசு வேடிக்கை பார்ப்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக எழுகிறது. செல்போன் சேவை அளிக்கும் உரிமை முதலில்தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.இதைப் பயன்படுத்தி அந்த தனியார் நிறுவனங்கள் கொள்ளையடித்தன. ‘இன்கமிங் கால்’ அழைப்புகளுக்குக் கூட கட்டணம் செலுத்த வேண்டியிருந் தது. பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத்துறை நிறு வனங்கள் செல்போன் சேவை அளிக்கத் துவங்கிய பிறகுதான் கடும் போட்டியின் விளைவாக கட்டணம் ஓரளவு குறைந்தது. இன்றைய நவீன அறிவியல் தொழில் நுட்ப உல கில் இணையத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்து வருகிறது.
குறிப்பாக இணைய பயன்பாட்டில்உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில்இருக்கிறது. முதலிடத்தில் சீனாவும், இராண்டாம் இடத்தில் அமெரிக்காவும் இருந்து வருகிறது. இத்துறையில் இந்தியாவின் வளர்ச்சி வரும் காலங்களில் இன்னும் வேகமாக இருக்கும் என பல்வேறு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டின் இறுதிக் குள் இந்தியாவில் இணையத்தை பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை 40 கோடியே 20 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மொபைல் போன் மூலம்இணையத்தை பயன்படுத்தும் நகர்ப்புற மக்களின் எண்ணிக்கை 65 சதவிகிதம் உயர்ந்திருக் கிறது. இதேபோல் கிராமப்புறத்தில் இணையத்தின் வளர்ச்சியும் அபரிமிதமாகி வரு கிறது என்று இந்திய இன்டர்நெட் மற்றும் மொபைல் சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதே காலத்தில், இந்திய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் ரூ. 672 கோடியாகும். வரும் மார்ச் மாதத்திற்குள் 4ஜி சேவை தொடங்கப்படும் தற்போது குரல் சேவை அளிப்பதில் பின்தங்கி இருக்கிறோம்.தற்போதுதான் இணையதள அடிப்படையில் தகவல் சேவை களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம் என பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இதில் என்ன வேடிக்கை என் றால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொழில் நுட்ப கட்டமைப்பு மற்றும் செல்பேசி கோபுரங்களை பயன்படுத்தியே, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4ஜி வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அளிக்கின்றன. அதன் மூலம் வளர்ந்து வரும்இணைய பயன்பாட்டாளர்களை தனது வாடிக் கையாளர்களாக மாற்றி வருகின்றன. ஆனால் எல்லாவசதியும் இருந்தும் பிஎஸ்என்எல் நிறுவனம் குரல்சேவை, இணைய சேவையில் பின்தங்கியே இருக் கிறது என்றால், இந்த வளர்ச்சி இணைப்பை துண்டித்தது யார் என்ற கேள்வி எழுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் புதிய திட்டங்கள் மற்றும்சேவைகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் தனது கட்டமைப்பு மற்றும் தொழில் நுட்பங்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கிறது. அதன் மூலம் பிஎஸ்என்எல்சேவை செயற்கையாக முடக்கி வைக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களின் இலக்கு பூர்த்தியானபின்னரே பிஎஸ்என்எல் அந்த சேவையை தனதுவாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. இதன்மூலம் இந்திய மக்களை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்கு கட்டாயப்படுத்தி தள்ளும் வேலையை மத்திய அரசு மறைமுகமாகச் செய்து வருகிறது. மாறி வரும் தகவல் தொழில் நுட்ப உலகில்பொதுத்துறையை வலுப்படுத்தாவிட்டால்,அரசே தனியார் துறையை நம்பி காத்திருக்க வேண் டிய அவலம் ஏற்படும் என்பதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்..... நன்றி 19.11.15 தீக்கதிர்
No comments:
Post a Comment