Saturday 28 November 2015

விஸ்வ இந்து பரிஷத்தின் "பசுபக்தி"

பசு எங்களுக்கு புனிதமானது, பசுவிற்காக உயிரையும் கொடுப்போம், உயிரையும் எடுப்போம் என சூளுரைப்பவர்கள் விஸ்வஇந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள். அந்த அமைப்பின் தலைவரின் அஸ்தியை கரைக்க சென்ற போது ரோட்டில் படுத்திருந்த பசுக்களை அவர்கள் படுத்திய பாடு சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. இதன் மூலம் பசுவை காப்பது விஸ்வ இந்து பரிஷத்தின் நோக்கம் அல்ல பசுவை வைத்து அரசியல் ஆதாயம் அடைவது மட்டுமே அவர்களின் உண்மையான நோக்கம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் இந்தியா முழுவதும் பசு புனிதமானது, அது இறந்தாலும் அதன் மாமிசத்தை உண்ணக்கூடாது என பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனையே சாக்காக பயன்படுத்தி நாடு முழுவதும் கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கி வருகின்றனர். மேலும் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் அடித்தே கொல்வோம் என பல கொலை பாதக செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் காலமான விஷ்வ இந்து பரிஷத் மூத்த தலைவர் அசோக் சிங்காலின் அஸ்தி கரைக்கும் நிகழ்ச்சி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. அஸ்தியை கரைக்க விஷ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
அப்போது, ஊர்வலம் செல்லும் பாதையில் படுத்திருந்த பசுக்களை கால்களால் எட்டி உதைத்தும், அடித்தும் துன்புறுத்தினர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் உலாவி வருகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சரத் ஷர்மா, இந்த விவகாரத்தில் விஷ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் ஈடுபட்டு இருந்தால், அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இந்த செயலை மற்றவர்கள் செய்திருந்தால் நிச்சயம் அடித்தே கொன்று இருப்பார்கள்.
விஎச்பி செய்தால் அது
நல்ல காரியம். அதே செயலை மற்ற
வர்கள் செய்தால் மன்னிக்க முடியாத குற்றம்.
இதுதான் இந்துத்துவா அமைப்புகளினுடைய நியதி என பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

No comments: