Saturday 14 November 2015

அந்நிய நேரடி முதலீடு விதிமுறையில் மாற்றம் செய்தது கொள்ளைக்கான உரிமம்: மத்திய அரசுக்கு இடதுசாரிகள் கண்டனம்...

15 முக்கிய துறைகளில் அந்நிய முதலீட்டு விதிமுறைகள் தளர்த்தப் பட்டிருப்பது, கொள்ளையடிப்பதற்காக வெளிநாட்டு நிறுவனங் களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமம் என இடதுசாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இம்முடிவு திரும்பப் பெறுமாறு மத்திய அரசை அவை வலியுறுத்தியுள்ளன.பாதுகாப்பு, கட்டுமான மேம்பாடு, ஒளிபரப்பு, விமான போக்குவரத்து, விவசாயம், மலையக பயிர்கள், உற்பத்தித் துறை, ஒரு பிராண்ட் ரீடெய்ல், தனியார் வங்கிகள் உள்ளிட்ட துறைகளுக்கு அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த மாற்றங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.இதன் மூலம் சில துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சில துறைகளில் அரசின் அனுமதியின்றி நேரடியாக முதலீடு செய்யமுடியும் எனப் பல்வேறு திருத்தங்கள் ஏற்றுகொள்ளப் பட்டுள்ளன. இத்திருத்தங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கொள்ளையடிப்பதற்காக வழங்கப்படும் உரிமம் என இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரும்பாலான இந்திய மக்கள், பொருளாதார சுமையால் அவலப்படும் நிலையில் இந்த விதிமுறை மாற்றங்களின் மூலம், கொள்ளையடிப்பதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.அத்தியா வசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்கிறது. விவசாயிகளின் அவலம் அதிகரித்துள்ளது. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றுவது, ஏழைமக்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட வற்றில் மோடி அரசு கவனம் செலுத்த வேண்டும். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்திருத்தங்கள் திரும்பப் பெற வேண்டும்எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.செவ்வாய்க்கிழமை இந்த திருத்தங்கள் அறிவிக்கப்பட்டபோது, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments: