Monday, 9 November 2015

பெருமைக்குரிய செயல் செய்தார் பீகார், கேரள வாக்காளர்கள்...

பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண் டாடுவார்கள்என்று பிரதமர் நரேந்திர மோடி,பாஜக தவைர் அமித் ஷா இருவரும் சொல்லிப் பார்த்தார்கள். அதன் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு நிராகரித்த பீகார் மக்கள் இந்தியா முழுவதும் கொண்டாடுவதற்கான மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கு அமோக வெற்றியை அளித்திருக்கிறார்கள். அதே போல், கேரளத்தின் உள்ளாட்சித் தேர்தலில், இனி அங்கேயும் பாஜகஅணிவகுப்புதான் என்று அவர்களாகச் சொல்லிக் கொண்டதையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முந்தைய வெற்றிஉள்ளாட்சித் தேர்தலில் தொடரவே செய்யும் என்று சொல்லப்பட்டதையும் ஒதுக்கித் தள்ளியமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்குப் பெரும் வெற்றியை வழங்கி யிருக்கிறார்கள்.
ஒரு மாநிலத்தின் தேர்தல் முடிவு தேசிய அரசியலில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பாஜக-வினர் சொல்லிக்கொண்டாலும், அவர்கள் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கிறார்கள். தில்லி சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலைப் போலவே பீகாரில் அக்கட்சிக்குக் கிடைத்துள்ள தோல்வி நாடு தழுவிய அளவில் சிந்தனைக்கும், விவாதத்திற்கும் உரியதாகும்.அமெரிக்காவின் மூடிஸ் ஆய்வு நிறுவனம், இந்தியாவில் மோடி அரசால் நிறைவேற்ற முடியாம லிருக்கும் நிலப்பறிப்பு சட்டம், ஜிஎஸ்டி சட்டம், தொழிலாளர் உரிமைகளை ஒழித்துக்கட்டும் சட்டம் போன்றவற்றை நிறைவேற்ற, பீகார் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, நாடாளுமன்ற மாநிலங்களவையில் தனது பலத்தை பெருக்கிக்கொண்டாக வேண்டும் என்று அறிக்கையளித்தது. அதற்காகவே, பெரும்பான்மை மதம் சார்ந்த மக்களின் வாக்குகளை இழுப்பதற்காக, மாட்டுக்கறி எதிர்ப்பு கிளறிவிடப்பட்டது. பிரதமர் மோடியே அங்கே தனது பிரச்சாரங்களில், இட ஒதுக்கீட்டின் பலனைஒரு குறிப்பிட்ட சமூகம்அனுபவிக்க விடமாட்டோம் என்று கிளப்பிவிட்டார். அவர் யாரைக் குறிப்பிட்டார் என்பது வெளிப்படை. இப்படி, மத உணர்வு சார்ந்து பிளவுபடுத்த முயன்றதைத்தான் ஏற்க மறுத்திருக்கிறார்கள் பீகார் மக்கள்.கேரள உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்த வரையில், அதிகார பலத்தையும் பண பலத்தையும் பயன்படுத்தியது காங்கிரஸ். அங்கேயும் மதவெறிப் பிளவு சூழ்ச்சிகளை அரங்கேற்ற முயன்றனர் பாஜகவினரும் அவர்களது பின்புலத்தில் இருப்போரும். பஷீர் என்ற பெயருள்ளவர் இராமாயணம் பற்றி பத்திரி கையில் எழுதுவதா என்பது போன்ற விவகாரங்கள் ஊதிவிடப்பட்டன. இவ்விரண்டு கட்சிகளின் திட்டங்களையும் கிராம ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய அனைத்து மட்டங் ளளகளிலுமான உள்ளாட்சித் தேர்தலில் கேரள மக்கள் நிராகரித்துவிட்டார்கள்.இவ்விரண்டு முடிவுகளும் ஜனநாயக, மதச்சார்பின்மை மாண்புகளை முன்னெடுப்போருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதே வேளையில், தோல்வியை விழுங்கிய பாஜகவும், அதனை இயக்குகிற ஆர்எஸ்எஸ் தலைமை பீடமும், தமது கொள்கையை மாற்றிக்கொள்வதற்கு மாறாக, மேலும் நுட்பமான வழிகளில் மதவெறி, சாதியவாத அரசியலைக் கூர்மைப்படுத்த முயல்வார்கள். இடதுசாரி, ஜனநாயக சக்திகள் இந்த வெற்றியை மென்மேலும் வளர்த்தெடுக்க, விழிப்போடும் விரிவாகவும் களப்பணிகளில் ஈடுபட்டாக வேண்டும்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா