Wednesday, 18 November 2015

நவம்பர் 18,வ. உ. சிதம்பரம்பிள்ளை நினைவு நாள் நினைவு நாள்.

கப்பலோட்டிய தமிழன். . சிதம்பரம்பிள்ளை நினைவு நாள் நினைவு நாள் - நவம்பர் 18, 1936 ஆங்கிலேய ஆதிக்கம் கடல்வழி வணிகத்தினால் தான் வளர்ந்தது என்கிற அடிப்படையில், அவர்களை விரட்ட, அவர்களுடைய கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக, 1906-ஆம் ஆண்டு "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்கிற சங்கத்தை நிறுவி அதன் செயலாளர் ஆனார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்). அந்தக் கம்பெனியின் சார்பில் காலியா, லாவோ ஆகிய இரண்டு கப்பல்களை வாங்கி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இயக்கத் தொடங்கினார். அதனால் கப்பலோட்டிய தமிழன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். இந்திய விடுதலை இயக்கத்திலும் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றுள்ளார். சிறையில் இவர் பட்ட கொடுமைகளைகே கருதி இவர் 'செக்கிழுத்த செம்மல்' என்றும் அழைக்கப்பட்டார். தமிழ்நாடு அரசு ..சிதம்பரனார் பிறந்த தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊரில் ..சிதம்பரனார் நினைவு இல்லம் அமைத்துள்ளது. இதில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இங்கு ..சி. அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

No comments: