Saturday, 7 November 2015

நவ-7, சர்-சி.வி. ராமன் பிறந்த தினம் . . .

உலகம் போற்றும் இந்திய அறிவியல் மேதை சர். சி. வி. ராமன் என்று அழைக்கப் பட்ட சந்திரசேகர வெங்கட ராமன் பிறந்தநாள்.இன்று. நவம்பர் 7, 1888, திருச்சிராப்பள்ளி நகர் அருகே திருவானைக்காவலில் பிறந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றபோது அவருக்கு வயது 18 மட்டுமே. .எஃப்.எஸ். தேர்வில் இந்தியாவிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.ஒரு ஊடகத்தின் உள்ளே ஒளி நுழையும்போது ஒளிச் சிதறல் ஏற்பட்டு வெவ்வேறு அலை நீளங்களை உடைய புதிய நிறக்கதிர்கள் தோன்றுகின்றன. ஒளி ஊடுருவும் தன்மைக்கு ஏற்ப உண்டாகும் வேறுபாடுகளால் நிறங்கள் தோன்றுகின்றன என்று கண்டறிந்தார். ‘ராமன் விளைவுஎன அறிவியல் உலகம் போற்றும் இந்த அரிய கண்டு பிடிப்புக்காக 1930-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.வெறும் 200 ரூபாய் செலவில், தானே உருவாக்கிய கருவியைப் பயன்படுத்தி அறிவு சார் பெருமக்கள் முன்னிலையில் DEMO செய்து இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டினார்.. வெளிநாடு செல்லாமல் இந்தியாவில் மட்டுமே படித்த ஒருவர் நோபல் பரிசு பெற்றது அதுவே முதல் முறை. அவரது கண்டு பிடிப்பு இன்றளவும் உலக இயற்பியல் வல்லுனர்களால் வியந்து பாராட்டப் படுகிறது.

No comments: