அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கம், தமிழ் மாநிலச்சங்கத்தின் மாநில மாநாடு நெல்லையில்...அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டச் செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் இ.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ். அருணாசலம் பேசினார்.சங்கத்தின் தமிழ் மாநில 4வது மாநாட்டை ஆகஸ்ட் 13,14 ஆகிய நாட்களில் திருநெல்வேலி சங்கீத சபாவில் சிறப்பாக நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மாநாட்டுப் பணிகளுக்காக முன்னாள் தொலைபேசி ஊழியரும் புரொபஸனல் கூரியர் நிர்வாக இயக்குனருமான எம்.எஸ். அகமது மீரான் தலைமையில் வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.சம்மனசு, எஸ். அருணாசலம், டி. ஆவுடைநாயகம் ஆகியோர் முறையே செயல் தலைவர், செயலர், பொருளாளராகவும் இ.கனகராஜ், பி.ரெகுபதி, ஏ.மியாகான், பி. பழனிவேல் ஆகியோர் உயர்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 50 ஓய்வூதியர்களை உறுப்பினராகக் கொண்ட 9 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. ---தீக்கதிர்
Tuesday, 29 July 2014
காமன்வெல்த் - தமிழக வீரர் சதீஷ்குமார் தங்கம் வென்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெறும் 20-வது காமன்வெல்த் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் சதீஷ்குமார் தங்கம்வென்றுள்ளார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சதீஷ்குமார் பங்கேற்ற முதல் காமன்வெல்த் போட்டியிலேயே தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தியா சார்பில் காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வெல்வது இதுவே முதன் முறையாகும். மத்திய அரசும், மாநில அரசும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, அவர்களை உற்சாகமூட்டி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தால், ஒலிம்பிக் உள்பட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் சாதனை படைப்பார்கள் என்பது உறுதி.
Monday, 28 July 2014
விண்ணப்பித்திருந்த அனைவருக்கும் GPF பட்டுவாடா...
வந்து விட்டது ... வந்து விட்டது ... ஒரு வழியாக GPF - FUND, வந்தே விட்டது GPF லோன் கோரி விண்ணப் பித்திருந்த அனைவருக்கும் GPF PAYMENT பட்டுவாடா செய்வதற்கான GPF - FUND நமது மதுரை மாவட்டத் திற்கான நிதி 2 கோடிக்கு மேல் வந்துள்ளது எனவே, GPF PAYMENT இன்று 28.07.14 அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் இச் செய்தி நமது மத்திய, மாநில, மாவட்ட சங்கங்கள் ஏற்கனவே அறிவித்திருந்ததின் தொடர்ச்சி தான் என்பதை நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் நினைவு படுத்துகிறது ...
--- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ---D/S-BSNLEU.
முதல் உலகப்போரின் 100ஆண்டு- 28 ஜூலை 1914 - 11 நவ 1918 ...
முதல் உலகப்போர் 28 ஜூலை 1914 முதல் 11 நவம்பர் 1918 வரை நடந்தது. ஐரோப்பாவை மையமாகக் கொண்டு நடந்த இந்தப் போர் இரண்டாம் உலகப்போர் நடக்கும் வரை உலக யுத்தம் என்றும் பெரும் போர் என்றும் அழைக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் தொடங்கப்பட்ட பின்னரே இது முதலாம் உலகப்போர் என்று அழைக்கப்பட்டது.1917ம் ஆண்டில் அமெரிக்கா போரில் குதிக்கும் வரை அமெரிக்கர்கள் இந்த போரை ஐரோப்பிய யுத்தம் என்றே அழைத்தார்கள். முதல் உலகப்போரில் சுமார் 90 லட்சம் போர் வீரர்கள் மாண்டார்கள் என்று கணக்கு கூறப்படுகிறது.வளர்ந்து வரும் தொழில்நுட்பமும், தொழில் வளர்ச்சியும் இந்த அதீதமான எண்ணிக்கைக்கு காரணமாகும். வரலாற்றில் நடந்த மோசமான யுத்தங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த யுத்தம் முடிந்தவுடன் பல அரசியல் மாற்றங்கள் நடந்ததில் ரஷ்ய புரட்சியும், ஆஸ்திரியா - ஹங்கேரி ராஜ்யம் அழிந்ததும் முக்கியமானவைகளாகும். அன்றைய உலகின் பொருளாதார வல்லரசுகள் யாவும் இதில் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது. உலகச்சந்தையைப் பங்கிட்டுக் கொள்வதுதான் இந்த போரின் உள்நோக்கமாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த போரில் சுமார் 6 கோடி ஐரோப்பியர்களுக்கு மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். உலகின் பல பகுதிகளில் இருந்து சுமார் ஒரு கோடிக்கு மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.ஏகாதிபத்தியத்தின் மறுஎழுச்சியின் அடையாளம் என்று இந்த யுத்தம் கூறப்பட்ட போதும், இந்த யுத்தம் தோன்றுவதற்கு காரணமாக ஆஸ்திரிய - ஹங்கேரி அரசின் இளவரசர் ஆர்ச்டியூக் பிரான்ஸ் பெர்டினாண்ட் 28.6.1914 அன்று சரஜெவோ நகரில் யுகோஸ்லேவிய தேசிய வாதி காவ்ரிலொ பிரின்ஸிப் என்பவரால் கொல்லப்பட்டார்செர்பியாவுக்கு இளவரசர் கொலையில் பங்கு உண்டு என்று உறுதியாக நம்பிய ஆஸ்திரிய-ஹங்கேரி அரசு செர்பிய அரசுக்கு பத்து நிபந்தனைகளை விதித்தது. இந்த நிபந்தனைகள் செர்பியாவை போருக்கு தூண்டிவிடும் வண்ணம் இருந்தன. இருப்பினும் இவற்றில் எட்டை செர்பியா ஏற்றுக்கொண்டது.28 ஜூலை 1914 அன்று ஆஸ்திரியா - ஹங்கேரி அரசு செர்பியா மீது போர்ப்பிரகடனம் அறிவித்தது.ஐரோப்பிய வல்லரசுகள் இரு அணியாக பிரிந்தன. செர்பியா மீது ஆஸ்திரிய - ஹங்கேரி முதல் படையெடுப்பை நடத்தியது. ரஷ்யா தனது நட்பு நாடான செர்பியாவைப் பாதுகாக்க படைகளைத் திரட்டியது. ஜெர்மனி நடுநிலை வகித்த பெல்ஜியம், லக்சம்பர்க் நாடுகள் மீது படையெடுத்தது.
இரண்டையும் கைப்பற்றிய பின் அது பிரான்ஸ் நோக்கி நகர்ந்தது. இதையடுத்து பிரிட்டன் ஜெர்மனி மீது போர் அறிவிப்பு செய்தது. பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யப்பேரரசு ஆகியவை நேச நாடுகள் தரப்பிலும், ஜெர்மனி, ஆஸ்திரியா - ஹங்கேரி ஆகியவை மத்திய சக்திகள் தரப்பிலும் அணி திரண்டன. இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகியவை பின்னர் நேச நாடுகளுடன் இணைந்து கொண்டன. பல்கேரியாவும், துருக்கியின் ஓட்டோமான் பேரரசும் ஜெர்மனி பின்னால் அணி திரண்டன. மார்ச் 1917ல் ரஷ்யப்பேரரசு கவிழ்ந்த பின் போருக்கு ஒரு தீர்வு கிடைத்தது. நவம்பர் புரட்சிக்குப் பின் போர் ஒரு திருப்புமுனையை அடைந்தது. டிசம்பரில் மத்திய சக்திகள் ரஷ்யாவுடன் ஒரு போர் நிறுத்தத்தை செய்து கொண்டன. 1918ல் ஜெர்மனி நடத்திய தாக்குதலை நேசப்படைகள் முறியடித்து ஓடஓட விரட்டின.
ஒரு லட்சத்து 40
ஆயிரம் இந்திய துருப்புகளும், மத்திய கிழக்கில் சுமார் 7லட்சம் இந்திய துருப்புகளும் இருந்தன.
47,746 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். 65,126 பேர் காயம் அடைந்தனர். ஆனால் வழக்கம் போல் ஏகாதிபத்திய, காலனியாதிக்க பிரிட்டிஷ் அரசு இந்தியர்களின் ஹோம்ரூல் கோரிக்கையை நிராகரித்து விட்டது. இதன் பலனாக இந்தியாவில் சுதந்திர வேட்கை கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது
Sunday, 27 July 2014
BSNLEU தோழமை ஆர்ப்பாட்டம் அறை கூவி அழைக்கிறது...
காப்பீட்டுத்துறையில் 49% அன்னியமுதலீடு(FDI) அதிகரிக்கும் மத்திய அரசின் தவறான முடிவிற்குஎதிராகஇந்தியநாடுமுழுவதும்AIIEA காப்பீட்டு ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளது. அந் நாளில், BSNLEU சங்கத்தின் சார்பாக நாடு முழுவதும், தொழிற்சங்க தோழமை பூர்வமான ஆப்பாட்டத்தை நடத்திட வேண்டுமாய் நமது BSNLEU மத்திய சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது .
நரேந்திர
மோடி அரசு காப்பீட்டுத் துறையில்
49% வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) வரம்பை
அதிகரிக்க முடிவு செய்துள்ளது. காப்பீட்டுத் துறையில் இதற்கான எந்த வித நியானமான காரணமும் இல்லை என்பது தான் உண்மை . இம்முயற்சி பொதுத்துறை நிறுவனங்களை திட்டமிட்டு மத்திய அரசு அளிப்பதே உள்நோக்கமாகும் , மற்றும் மக்கள்
பணத்தை கொள்ளையடித்து பல சர்வ தேசிய நிறுவனங்கள்
அனுமதிக்க ஒரு படியே தவிர வேறு எதுவும்
இல்லை. எல்.ஐ.சி.
மற்றும் அதை போன்ற பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மிகவும் நன்றாக சேவை செய்து, நமது இந்திய 'தேச நிர்மாண பணிகளில் ஒரு
பெரிய அளவில் பங்களிபை செய்துள்ளது. ஸ்ரீ
அருண் ஜேட்லி, நிதி அமைச்சர்,அந்நிய முதலீட்டிற்கு
காங்கிரஸ் கட்சி, ஏற்கனவே இது
தொடர்பாக BJP அரசிற்கு,தனது ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளது என்று கூறினார். இது
இதுவரை பொருளாதார கொள்கைகளை
பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி மற்றும் BJP இடையே
எந்த வித்தியாசமும் இல்லை என்பதை நிரூபிக்கிறது
என்ற மற்றொரு ஆதாரம் நிருபணமாகிறது. பாராளுமன்றத்தில்
ஜூன் 30-ம் தேதி மத்திய அரசாங்கம் "காப்புறுதி சட்ட (திருத்தம்) சட்டமூலம்" அமல்படுத்த திட்டமிட்டுள்ளதை கணக்கில் கொண்டு . அகில இந்திய
காப்பீட்டு ஊழியர் சங்கம் (AIIEA) ஏற்கனவே
வேலை நிறுத்தம்செய்ய முடிவு செய்துள்ளது, மத்தியஅரசு பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வருவதை கருத்தில் கொண்டு AIIEA போராட்டத்தில் செல்ல
முடிவு செய்துள்ளது . இம்முடிவு நம்நாட்டின் பொருளாதார இறையாண்மை இணைக்கப்பட்டுள்ளது, இப்பிரச்சனையில், காப்பீட்டு துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யும் போது, நமது BSNLEU சங்கத்தின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டியது பிஎஸ்என்எல் ஊழியர்கள் கடமை. காப்பீட்டு ஊழியர்களின்
வேலை நிறுத்தத்தின் போது, நமது BSNLEU மாநில மற்றும்
மாவட்ட சங்கங்கள் அதே நாளில், பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்திட ஏற்பாடு செய்யுமாறு BSNLEU- CHQ அழைக்கிறது. நமது தோழர்கள் மிகவும்
தீவிரமாக இந்த அழைப்பை எடுத்து ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய
வேண்டும் அதிகபட்ச அணிதிரட்டல் செய்யுமாறு நமது மத்திய சங்கம் (BSNLEU-CHQ) தோழமையோடு அறை கூவி அழைக்கிறது.
தோழமை ஆதரவை நல்குவோம்,எஸ்.சூரியன்D/S-BSNLEU.
26.07.14 வெற்றிகரமாக நடந்த வேடசெந்தூர்கிளை மாநாடு...
26.07.14 சனிக் கிழமையன்று மாலை வேடசெந்தூர் கிளையின் மாநாடு தலைவர் தோழர்.முருகேசன் தலைமையில் மிகவும் சீரும்,சிறப்புமாக நடைபெற்றது. நமது BSNLEU சங்கக்கொடியை தோழர். ஜேவியர் பால்ராஜ் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். மாநாட்டில் அஞ்சலி யுரையை தோழியர்.ஜெயலட்சுமி நிகழ்த்தினார். மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று கிளைச் செயலர் தோழர்.சௌந்தர் ராஜ் உரைநிகழ்த்தினார்.மாநாட்டில் 3 பெண்கள் உட்பட 35 தோழர்கள், குறிப்பாக கிளை உறுப்பினர்கள் 100 சதம் கலந்து கொண்டது என்பது மிக,மிக சிறப்பம்சமாகும்.
மாநாட்டினை துவக்கிவைத்து, இன்றைய சூழ்நிலை,நமது மத்திய, மாநில, மாவட்ட, கிளை சங்கங்களின் செயல்பாடு, நாம் சந்திக்க இருக்கிற போராட்டங்கள் மற்றும் BJP அரசின் மக்கள்,தொழிலாளர் விரோத நிலை பாட்டிற்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் அணிதிரள வேண்டிய அவசிய அவசர உடனடிக்கடமை ஆகியவை குறித்தும் விளக்கி மாவட்டச் செயலர் தோழர்.எஸ்.சூரியன் உரையாற்றினார்.
அதன்பின் ஆண்டறிக்கை, வரவு-செலவு, அமைப்பு நிலை விவாதம் , புதிய நிர்வாகிகள் தேர்வு ஆகியவை முறையாக நடந்தேறியது. தலைவர், செயலர், பொருளர் முறையே தோழர்கள், முருகேசன், சௌந்தர்ராஜ், நேவீஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் , சுமதி, வைத்திலிங்க பூபதி, பரிமள ரெங்கராஜ், கிளைச் செயலர்கள், ஜோதிநாதன், குருசாமி, சுப்ரமணியன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள்,எஸ்.ஜான் போர்ஜியா, சி. செல்வின் சத்தியராஜ் ஆகிய இருவரும் சிறப்புரை நிகழத்தினார்கள்.
இறுதியாக தோழியர்.நேவீஸ் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது. ஒரு சிறிய கிளை மாநாட்டிற்கு ஆன ஏற்பாடு, பங்கேற்பு அனைத்தும் சிறப்பாக செய்து இருந்ததை மதுரை மாவட்ட சங்கம், சபாஷ் சொல்லி உளமார பாராட்டுவதுடன், புதிய நிர்வாகிகள் பணி சிறக்க மனதார வாழ்த்துகிறது.
Saturday, 26 July 2014
இன்று-26.07.14 "கார்கில் போர்' நினைவு தினம்
15 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை ஆக்ரமித்த பாகிஸ்தானை, இந்திய ராணுவம் அடித்து விரட்டி மீண்டும் கைப்பற்றி வெற்றிக் கொடி நாட்டிய தினம் இன்று. "போரில் நமக்கு வெற்றிதான். ஆனாலும் விலைமதிக்க முடியாத நமது சகோதரர்களின் உயிரை இழக்க வேண்டியதாயிற்கு. நாட்டு மக்களுக்காக இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு நமது அஞ்சலியை செலுத்துகிறோம்.
துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் . . .
காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் இன்று இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்தன. ஆண்கள் பிரிவில் அபிநவ் பிந்தரா தங்கப்பதக்கம் வென்றார். மகளிர் பிரிவில் மலைக்கா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் நாளில் இந்தியா 2 தங்கம் உள்ளிட்ட 7 பதக்கங்களை பெற்றிருந்தது. இரண்டாம் நாளான இன்று மேலும் இரண்டு பதக்கங்கள் கிடைத்து, மொத்தம் 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலத்துடன் இந்தியா, பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில்உள்ளது.இரண்டாம் நாளான இன்று, பெண்கள் 10 மீட்டர் துப்பாக்கிசுடும் போட்டியில், இந்தியாவின் மலைக்கா கோயல், வெள்ளிப்பதக்கம் வென்று, இரண்டாம் நாளில் இந்தியாவின் பதக்கப்பட்டியலை உயர்த்தினார்.இதன் பின்னர் நடந்த ஆண்கள் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் அபிநவ் பிந்தரா, 10 மீட்டர் ரைபிள் பிரிவில், தங்கப்பதக்கம் வென்றார். இந்த பிரிவில் 205.3 புள்ளிகள் பெற்று, காமன்வெல்த் போட்டிகளில் புதிய சாதனை படைத்தார் இது காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு கிடைக்கும் 3வது தங்கப்பதக்கம் ஆகும். காமன்வெல்த் போட்டியில், அபிநவ் பிந்தரா தனிப்பட்ட முறையில் பெறும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பளூதூக்குதலில் வெண்கலம்: மகளிர் பிரிவு, 53 கிலோ பிரிவில், இந்தியாவின் சந்தோஷி மட்சா வெண்கலப்பதக்கம் வென்றார்.
Subscribe to:
Posts (Atom)






