Thursday, 29 October 2015

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்க! தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பேர் மறியல்...

சென்னையில் மின்வாரிய தலைமையகம் முன்பு நடைபெற்ற மறியலில் .சவுந்தரராசன் எம்எல்ஏ பேசினார்.பணிநிரந்தரம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று  (அக்.28) தமிழகம் முழுவதும் மின்வாரியஒப்பந்த தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.சென்னை அண்ணாசாலையில் உள்ளமின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு மறியல் செய்த சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 20 ஆயிரம் களப்பணியாளர் உள்ளிட்டு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இப்பணி யிடங்களை நிரப்பாமல் குறைந்த கூலிக்குஒப்பந்த தொழிலாளர்களை அமர்த்தி வாரி யம் உழைப்புச் சுரண்டல் செய்கிறது.அனல், புனல் மின் உற்பத்தி, பொதுகட்டுமானம், மின் விநியோகப் பிரிவுபோன்ற நிரந்தர தன்மை வாய்ந்தஇடங்களில் கூட ஒப்பந்த / அவுட்சோர்சிங் தொழிலாளர்கள் ஈடுபடுத்துகிறது.
இவர்களுக்கு வாரியம் தினக்கூலி கூட வழங் காமல், முறைகேடாக நுகர்வோரிடமிருந்து பணம் வசூல் செய்து தருகிறது. இதனால் வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களே இல்லை என்றும் கூறுகிறது.மின் உற்பத்தி மற்றும் மின்விநியோக நிலையங்கள், மின் தொடரமைப்பு போன்றபிரதானப் பிரிவுகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். இதற்கான பட்டியலை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, வாரியத் திற்கு கொடுத்துள்ளது. அதை ஆய்வு செய்து, ஒப்பந்தத் தொழிலாளர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். களப்பணியாளர் பணியிடங்களை நிரப்பும் போது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.வாரியத்தில் தொடர்ச்சியாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள்,பகுதிநேர ஊழியர்களை பட்டியலிட்டு நிரந்தர ஊழியர்களுக்கு வழங்குவதைப் போன்றே போனஸ், கருணைத் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி மறியல் நடத்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு அறைகூவல் விடுத்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் வாரிய அலுவலகங்கள் முன்பு மறியல் நடைபெற்றது. அதன்ஒருபகுதியாக சென்னை அண்ணாசாலை யில் உள்ள மின்வாரிய தலைமை அலு வலகம் முன்பும் மறியல் நடைபெற்றது.இப்போராட்டத்தை தொடங்கி வைத்து சிஐடியு மாநிலத் தலைவர் .சவுந்தரராசன் எம்எல்ஏ பேசுகையில், களப்பணி செய்பவர்கள் இல்லையென்றால் மின் வாரியமே இல்லை. உயிரைப் பணயம் வைத்து, கடின உழைப்பை செலுத்தும் களப்பணியாளர்களை வாரியம் அங்கீகரிக்க மறுப்பது சரியானதல்ல.
நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை பட்டிய லிட்டு பணி நிரந்தரம் செய்யவும், நிரந்தரதொழிலாளர்களுக்கு இணையாக கான்ட்ராக்ட் மற்றும் பகுதி நேர தொழிலாளர் களுக்கு போனஸ் வழங்கவும் அரசுமறுக்கிறது.இதுகுறித்து சட்டமன்றத் தில் எழுப்பிய போது அரசு முறையாக பதிலளிக்கவில்லை. அதன் விளைவாகவே இந்த மறியல் நடைபெறுகிறது என்றார்.சாலை விபத்தில் இறப்பவர்களுக்கு கிடைக்கும் நிவாரணம் கூட மின்வாரியப் பணியின் போது விபத்து ஏற்பட்டு இறக்கும் ஒப்பந்த தொழிலாளர் களுக்கு, கிடைப்பதில்லை. ஆகவே, கோரிக்கைகளை விரைந்து நிறை வேற்றாவிடில் நிரந்தர தொழிலாளர்களும் பங்கேற்கும் போராட்டமாக இது மாறும் என்று சவுந்தரராசன் எச்சரித்தார்.இதன்பின்னர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் கே.விஜயன், பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், பொருளாளர் .அந்தோணி, துணைப் பொதுச் செயலாளர்கள் கே.ரவிச்சந்திரன், மண்டலச் செயலாளர்கள் .பழனி, தி.ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையில் மறியல் செய்த தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.மதுரையில் இரா.அண்ணாதுரை, தர்மபுரியில் பி.டில்லிபாபு, திருப்பூரில் கே.தங்கவேலு, விழுப்புரத்தில் ஆர்.ராமமூர்த்தி, நாகையில் நாகை மாலி, ஆகிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும், கோவையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனும் மறியல் போராட்டத்தை துவக்கி வைத்தனர்.

நேபாள குடியரசுத் தலைவராக வித்யாதேவி பண்டாரி தேர்வு...

நேபாள நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக- நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) சார்பில் போட்டியிட்ட வித்யா தேவி பண் டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், நேபாள நாட் டின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள் ளார்.நேபாளத்தில், 2008-ஆம் ஆண்டு மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்டு, மக்களாட்சி நிறுவப் பட்டது. ராம்பரண் யாதவ் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ந்நிலையில் அண்மையில் நேபாளத்துக்கான புதிய அரசியல் சாசனம் பிரகடனப் படுத்தப்பட்டது. நேபாளம்மதச்சார்பற்றநாடு என அறிவிக்கப்பட்டது. புதிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சர்மா ஒலி பிரதமராக தேர்ந் தெடுக்கப்பட்டார். இவர், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆவார். அதைத்தொடர்ந்து, புதிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழான முதலாவது குடியரசுத் தலைவர் தேர்தல் புதனன்று நடைபெற்றது.நேபாள காங்கிரஸ் கட்சியின் குல் பகதூர் குருங், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) துணைத் தலைவரான வித்யா தேவி பண்டாரி, நேபாள உழைப்பாளர் மற்றும் விவசாயிகள் கட்சி சார்பில் நாராயண் மகாஜன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.இந்த தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) சார்பில் போட்டியிட்ட வித்யாதேவி பண்டாரி வெற்றிபெற்றார். மொத்தம் பதிவான 549 வாக்குகளில் வித்யாதேவி பண்டாரி 327 வாக்குகளைப் பெற்று குடியரசுத் தலைவர் ஆனார். அவருக்கு அடுத்தபடியாக வந்த நேபாள காங்கிரஸ் கட்சியின் குருங் 214 வாக்குகள் பெற்றார்.குடியரசுத் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்ட வித்யாதேவி பண் டாரி, நேபாளத்தில் இப்பதவிக்கு வந்த முதல் பெண் என்ற பெருமை யையும் பெற்றார்.

Tuesday, 27 October 2015

அட்காக்(PLI) போனஸ் கோரி BSNLEU-CMDயை சந்திப்பு...

BSNLEU demands CMD BSNL to immediately pay Adhoc PLI to employees. 
Com. P. Abhimanyu, GS, com. Swapan Chakraborty, Dy.GS, met shri Anupam Srivastava, CMD, BSNL today and demanded that employees should immediately be paid with Adhoc PLI, as has already been demanded. The union representatives pointed out that the revenue of the Company has increased and also the number of mobile connections and landline connections of the Company have sizeably increased. They further argued that payment of Adhoc PLI be certainly boost morale of the employees, which will help to bring the Company out of loss.

தோழர். P.அபிமன்யூ, G.S-BSNLEU,தோழர். ஸ்வபன் சக்கரவர்த்தி, Dy.GS, இன்று 27.10.15  ஸ்ரீ அனுபம் ஸ்ரீவஸ்தவா, CMD, BSNL அவர்களை சந்தித்து ஊழியர் களுக்கு  உடனடியாக தற்காலிகப் போனஸ் (PLI) பணம் வழங்க வேண்டும் என்று கோரினார். தொழிற்சங்க பிரதிநிதிகள் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது, மேலும் மொபைல் இணைப்புகள் மற்றும் நிறுவனத்தின் லேண்ட்லைன் இணைப்புகளை எண்ணிக்கை sizeably அதிகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார். அவர்கள் மேலும் அதனடிப்படையில் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினால், மேலும் உற்சாகமாக நமது நிறுவன வளச்சிக்கு அனைவரும் பாடுபடுவார்கள் என வலியுறித்தினர்.

GPF பட்டுவாடா குறித்து தகவல் . . .

அருமைத் தோழர்களே ! நமது மதுரை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 615 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, ரூபாய் 1 கோடியே. 15 லட்சம் வரை GPF கனக்கீடப்பட்டு சென்னைமாநிலஅலுவலகத்திற்குஅனுப்பபட்டுள்ளது. அநேகமாக 28.10.15 அன்று தான் அனைவருக்கும் பட்டு வாடா செய்யப்படும் என தகவல் தெரிவிக்கின்றன.

கோவில்பட்டியில் 400 அடி டவரில் ஏறி போராட்டம் . . .

கோவில்பட்டி உதவி கண்காணிப் பாளர் அலுவலகம் அருகேயுள்ள 400அடி உயரமுள்ள காவல்துறைக்கு சொந்தமான வயர்லஸ் (டவர்) கோபுரத்தில் 38 வயதுடைய முத்து என்ற முன்னாள் இராணுவவீரர் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் ஏறி போராட்டம் நடத்தியதால் கோவில்பட்டியில் பரபரப்பு ஏற் பட்டது.கோவில்பட்டி அருகேயுள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முத்து. இந்திய இராணுவத்தில் 17 வருடங்கள் பணிபுரிந்து கடந்த 30.06.15 அன்று ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு ஓய்வூதியம் மற்றும் எந்த ஒரு செட்டில்மெண்டும் சலுகைகளும் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.அவருக்கு ஓய்வுக்கு பின் வழங்கப்பட வேண்டிய அனைத்து பண பலன் களையும் வழங்க வலியுறுத்தி முத்து தனது குடும்பத்தினருடன் 7.7.2015 அன்று சங்கரலிங்கபுரத்தில் உண்ணா விரதம் இருந்தார். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இராணுவ அதிகாரி களிடம் பேசி அவருக்கு கிடைக்க வேண்டிய பணபலன்கள் கிடைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறியதைத் தொடர்ந்து அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார்.அதைத்தொடர்ந்து இன்று வரைஅதற்கான ஏற்பாடுகளை அதிகாரி கள் செய்யாததால் மனம் உடைந்து திங்களன்று காலை 9 மணியளவில் கோவில்பட்டி மக்கள் பரபரப்பாக வேலைக்கும், பள்ளிக்கும் செல் லும் பிரதான எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள உதவி கண்காணிப் பாளர் அலுவலகம் அருகில் அமைந் துள்ள வயர்லஸ் கோபுர உச்சிக்கு சென்று கோரிக்கைகள் அடங்கிய ஆயிரக்கணக்கான நோட்டீஸ் ஜெராக்ஸ்களை கீழே வீசி தனது போராட்டத்தை நடத்தியது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி பெரும் கூட்டம் திரள காரணமானது. தகவல் அறிந்த உதவி கண்காணிப் பாளர் முரளிரம்பா, வட்டாட்சியர், ஜோதி, கோட்டாட்சியர் கண்ண பிரான் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று முத்துவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் முத்து சிறிது நேரம் தனது செல்போனை அணைத்து வைத்துவிட்டார். அதனால் காவல்துறையினர் மெகா போனில் தொடர்ந்து அவரை செல்போனை ஆன் செய்யும்படி வலி யுறுத்தி வந்தனர். இற்கிடையில் அவர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டதால் செல்லில் கோவில்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் அவரை நாளை மறுதினமே (புதன்கிழமை) சென்னைக்கு அழைத்துச் சென்று உயர் அதிகாரிகளை சந்தித்து அவரது கோரிக்கை களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என வாக்குறுதி கொடுத்தார். அதன் பேரில் மதியம் 2 மணியளவில் அக்கோபுரத்தில் இருந்து இறங்கினார். அவரை உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் கோவில்பட்டி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இனியேனும்  அவரது பிரச்சனை தீருமா ? தீரும் என் நம்புவோம்.. . 

செய்தி . . . துளிகள் . . .

1. மாறுதல் கொள்கையில் (Transfer Policy ) கிராமப்புற பகுதியில் சேவைக்கு 3 ஆண்டுகள் Tenure என நிர்ணயம்

2.அனுமதிக்கப்பட்ட விடுமுறைக்கு மேலாக விடுப்பு எடுத்தால் அது Tenure காலத்தில் கழிக்கப்படும் .இந்த மாற்றத்திற்கான நமது கருத்துக்களை மத்திய சங்கம் கேட்டுள்ளது .

3. மார்க்கெட்டிங் பணியை தீவிர படுத்த மத்திய சங்கம் கேட்டு கொண்டு உள்ளது செப்டம்பர் மாதம் 1 லட்சம் சந்தாதாரர்களை MNP மூலமாக நாம் பெற்றுள்ளோம் என்பது புதிய சாதனை .

4. JTO பயிற்சிக்கு சென்றுள்ள TTA களுக்கு TA முன்பணம் உடனடியாக வழங்க வேண்டும் என நமது பொது செயலர் தோழர் அபிமன்யு அவர்கள் GM (T&BFCI), அவர்களை சந்தித்து பேசியுள்ளார் . உரிய நிதி ஒதுக்கீடு தமிழ் மாநிலத்திற்கு அனுப்ப GM (T&BFCI) அவர்கள் உறுதி அளித்துள்ளார் .

5. ஒரு மாத போனஸ் உச்சவரம்பான ரூ.3500/- ரூ.7000/-மாக உயர்த்துவதற்கும், போனஸ் பெறுவதற்கான மாத ஊதியத்தை ரூ.10,000/-லிருந்து ரூ.21,000/-மாக  உயர்த்துவதற்கும்  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது மிக நீண்ட நாள் பிரச்சினையாகும்.

Sunday, 25 October 2015

அக்-24, சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு ...

1857ஆம் ஆண்டைத்தான் வட இந்தியாவில், சிப்பாய் கலகம் நடந்ததையொட்டி, இந்திய முதல் சுதந்திரப் போர் என்பதாக பதிவு செய்யப்பட்டதுஆனால், அதற்கு 56 ஆண்டுகளுக்கு முன்பே 1801 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 10ஆம் தேதி திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் நின்றுகொண்டு, ஆங்கிலேயர்களுடைய ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் பிரகடனத்தை, மருது பாண்டியர்கள் அறிவித்தார்கள் என்ற செய்தி முக்கியமான ஒரு நிகழ்வுற்கண்ட நினைவு தினம், மருது சகோதரர்களை கதாநாயகர்ளாக்குவதற்கோ, அவர்களை வீரர்களாக்கிவிட்டு, நாம் கோழைகளாக நிற்பதற்கோ எடுத்துக்கொள்வது நியாயமான நினைவேந்தலாக இருக்காதுமாறாக, நமது மூதாதையர்கள், தமிழ்நாட்டில் இந்த மண்ணை நேசித்தவர்கள், ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டு மடிந்த கதைகள், நமக்கு இன்றும் கூட அந்நிய ஏகாதிபத்தியங்களின் ஊடுருவல்களும், ஆதிக்கங்களும் இருக்கின்ற சூழ்நிலையில், மீண்டும் மீண்டும் நினைவேந்தி தொடர்ந்து போராட உணர்வுகளை கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே விவசாயத்தில், நிதி மூலதனத்தில், ராணுவத்தில் நுழைகின்ற அந்நிய கரங்களை, மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்ட உணர்வுகளுடன் கணக்கு பார்க்கத் தயாராக இருக்கிறோமா என்று அந்த நினைவு நாள் நம்மைக் கேட்கிறது....