Tuesday, 27 October 2015

கோவில்பட்டியில் 400 அடி டவரில் ஏறி போராட்டம் . . .

கோவில்பட்டி உதவி கண்காணிப் பாளர் அலுவலகம் அருகேயுள்ள 400அடி உயரமுள்ள காவல்துறைக்கு சொந்தமான வயர்லஸ் (டவர்) கோபுரத்தில் 38 வயதுடைய முத்து என்ற முன்னாள் இராணுவவீரர் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் ஏறி போராட்டம் நடத்தியதால் கோவில்பட்டியில் பரபரப்பு ஏற் பட்டது.கோவில்பட்டி அருகேயுள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முத்து. இந்திய இராணுவத்தில் 17 வருடங்கள் பணிபுரிந்து கடந்த 30.06.15 அன்று ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு ஓய்வூதியம் மற்றும் எந்த ஒரு செட்டில்மெண்டும் சலுகைகளும் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.அவருக்கு ஓய்வுக்கு பின் வழங்கப்பட வேண்டிய அனைத்து பண பலன் களையும் வழங்க வலியுறுத்தி முத்து தனது குடும்பத்தினருடன் 7.7.2015 அன்று சங்கரலிங்கபுரத்தில் உண்ணா விரதம் இருந்தார். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இராணுவ அதிகாரி களிடம் பேசி அவருக்கு கிடைக்க வேண்டிய பணபலன்கள் கிடைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறியதைத் தொடர்ந்து அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார்.அதைத்தொடர்ந்து இன்று வரைஅதற்கான ஏற்பாடுகளை அதிகாரி கள் செய்யாததால் மனம் உடைந்து திங்களன்று காலை 9 மணியளவில் கோவில்பட்டி மக்கள் பரபரப்பாக வேலைக்கும், பள்ளிக்கும் செல் லும் பிரதான எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள உதவி கண்காணிப் பாளர் அலுவலகம் அருகில் அமைந் துள்ள வயர்லஸ் கோபுர உச்சிக்கு சென்று கோரிக்கைகள் அடங்கிய ஆயிரக்கணக்கான நோட்டீஸ் ஜெராக்ஸ்களை கீழே வீசி தனது போராட்டத்தை நடத்தியது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி பெரும் கூட்டம் திரள காரணமானது. தகவல் அறிந்த உதவி கண்காணிப் பாளர் முரளிரம்பா, வட்டாட்சியர், ஜோதி, கோட்டாட்சியர் கண்ண பிரான் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று முத்துவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் முத்து சிறிது நேரம் தனது செல்போனை அணைத்து வைத்துவிட்டார். அதனால் காவல்துறையினர் மெகா போனில் தொடர்ந்து அவரை செல்போனை ஆன் செய்யும்படி வலி யுறுத்தி வந்தனர். இற்கிடையில் அவர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டதால் செல்லில் கோவில்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் அவரை நாளை மறுதினமே (புதன்கிழமை) சென்னைக்கு அழைத்துச் சென்று உயர் அதிகாரிகளை சந்தித்து அவரது கோரிக்கை களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என வாக்குறுதி கொடுத்தார். அதன் பேரில் மதியம் 2 மணியளவில் அக்கோபுரத்தில் இருந்து இறங்கினார். அவரை உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் கோவில்பட்டி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இனியேனும்  அவரது பிரச்சனை தீருமா ? தீரும் என் நம்புவோம்.. . 

No comments: