Friday 23 October 2015

22.10.15 ஒத்தக்கடை EXGE-SHIFT புதிய இடத்தில் திறப்பு.

அருமைத் தோழர்களே ! நமது  மதுரை மாவட்ட LJCM முடிவின் அமலாக்க அடிப் படையில் 22.10.15 அன்று காலை 11.30 மணிக்கு மேல் ஒத்தக்கடை EXGE-SHIFT புதிய இடத்தில் அனைவரும் பாராட்டும் வண்ணம் குறுகிய காலத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, மதுரை தொலை தொடர்பு மாவட்ட பொது மேலாளர் திருமதி S.E. ராஜம் ITS அவர்கள் தலைமையில்  மிகவும் சீரும் சிறப்புமாக திறப்பு விழா நடந்தேறியது. . . .
நிகழ்ச்சியை, மதுரை ரூரல் பகுதி கோட்ட பொறியாளர் திரு.அழகர்சாமி அவர்கள் மிக  நேர்த்தியாக ஏற்பாடு  செய்திருந்தார் ஒத்தக்கடையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் முதற்கொண்டு,அனைத்து TM, TTA, JTO, SDOT இப்படி அனைவரும் 100 சத உழைப்பு, ஒத்துழைப்பு நல்கிவருவதற்கு மிக வெகுவாக விழாவில் கலந்து கொண்ட GM, DGMs, DE,BSNLEU-D/S இப்படி அனைவரும் பாராட்டினர். ஒரு நல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனநிறைவு நமக்கும் இருந்தது.  நமது BSNL நிறுவன வளர்ச்சிக்கு அனைவரின் பனி சிறக்க நமது உளப்பூர்வமான வாழத்துக்களை BSNLEU சார்பாக உரித்தாக்குகிறோம்.


No comments: