Thursday, 29 October 2015

நேபாள குடியரசுத் தலைவராக வித்யாதேவி பண்டாரி தேர்வு...

நேபாள நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக- நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) சார்பில் போட்டியிட்ட வித்யா தேவி பண் டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், நேபாள நாட் டின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள் ளார்.நேபாளத்தில், 2008-ஆம் ஆண்டு மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்டு, மக்களாட்சி நிறுவப் பட்டது. ராம்பரண் யாதவ் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ந்நிலையில் அண்மையில் நேபாளத்துக்கான புதிய அரசியல் சாசனம் பிரகடனப் படுத்தப்பட்டது. நேபாளம்மதச்சார்பற்றநாடு என அறிவிக்கப்பட்டது. புதிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சர்மா ஒலி பிரதமராக தேர்ந் தெடுக்கப்பட்டார். இவர், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆவார். அதைத்தொடர்ந்து, புதிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழான முதலாவது குடியரசுத் தலைவர் தேர்தல் புதனன்று நடைபெற்றது.நேபாள காங்கிரஸ் கட்சியின் குல் பகதூர் குருங், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) துணைத் தலைவரான வித்யா தேவி பண்டாரி, நேபாள உழைப்பாளர் மற்றும் விவசாயிகள் கட்சி சார்பில் நாராயண் மகாஜன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.இந்த தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) சார்பில் போட்டியிட்ட வித்யாதேவி பண்டாரி வெற்றிபெற்றார். மொத்தம் பதிவான 549 வாக்குகளில் வித்யாதேவி பண்டாரி 327 வாக்குகளைப் பெற்று குடியரசுத் தலைவர் ஆனார். அவருக்கு அடுத்தபடியாக வந்த நேபாள காங்கிரஸ் கட்சியின் குருங் 214 வாக்குகள் பெற்றார்.குடியரசுத் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்ட வித்யாதேவி பண் டாரி, நேபாளத்தில் இப்பதவிக்கு வந்த முதல் பெண் என்ற பெருமை யையும் பெற்றார்.

No comments: