இந்தியாவில் வால்மார்ட் நிறுவனம் அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட வால்மார்ட் நிறுவனம் உலகம் முழுவதும் தனது கிளைகளை தொடங்கி கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறது. மத்திய காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது வால்மார்ட் நிறுவனம்கடந்த2013- ஆண்டு இந்தியாவில் பாரதி எண்டர்பிரைசஸ் என்ற இந்திய நிறுவனத்துடன் இணைந்து பல கிளைகளை தொடங்க திட்டமிட்டது. இதற்காக வால்மார்ட் நிறுவன அதிகாரிகள் இந்தியா வந்து ஆய்வு நடத்தினார்கள். அப்போது நகரங்களில் அதிகாரிகளின் பதவிகளுக்கு ஏற்ப லஞ்சம் கொடுத்ததை அமெரிக்காவிலிருந்து வெளியாகும் வால்ஸ்டீட் என்ற பத்திரிகை இப்போது அம்பலப்படுத்தி உள்ளது. குறைந்த பட்சமாக 5 டாலர் முதல் 200 டாலர் வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்படி பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வால்ஸ்டீட் பத்திரிகை தெரிவித்து உள்ளது. இதேபோல் மெக்சிகோ நாட்டில் வால்மார்ட் நிறுவனம் தனது கிளைகளை தொடங்க அங்குள்ள அதிகாரிகளுக்கு அதிக லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment