BSNL தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் சம்மேள னத்தின் 3வது அகில இந்திய மாநாடுஅக்டோபர் 3 சனிக்கிழமை யன்று நாகர்கோவிலில் எழுச்சியோடு துவங்கியது.சம்மேளனத் தலைவர் VAN. நம்பூதிரி தலைமையில் நடைபெறும் இம்மா நாட்டை துவக்கி வைத்து, CITU அகில இந்தியத் தலைவர் A.K..பத்மநாபன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியது:
BSNL நிறுவனத்தில் நிரந்தர ஊழியர்களும், ஒப்பந்தத் தொழிலாளர் களும், ஓய்வூதியர்களும் சங்கங்கள் மூலம் தோளோடு தோள் நின்று போராடுகிறார்கள்.தொழிலாளர் கோரிக்கை மட்டுமின்றி அரசாங்கத்தின் கொள் கைகளை மாற்றும் செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தில் பங்கேற்றார்கள். 1991 முதல் நடைபெற்று வரும் பொது வேலைநிறுத் தங்களில் 16வது வேலைநிறுத்தம் இது.ஆகஸ்ட் 28 வரை உடனிருந்த BMS போராட்டத்தில் இருந்து பின்னர் விலகிவிட்டது. எனினும், சில நாடுகளின் ஜனத் தொகையை காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான 15 கோடி தொழிலாளர்கள் பங்கேற்ற மகத்தான வேலைநிறுத்தம் ஆண்டுக்கு ஆண்டு வேலைநிறுத்த பங்கேற்பு அதிகரிக்கிறது.உலகை உருவாக்குவது தொழிலாளி. தற்காலிக மற்றும் ஒப்பந்த முறையில் வேலை செய்பவர்களும் தொழிலாளிகளே. BSNL-ஐப் பாதுகாக்க நீங்கள் நடத்திய ஒன்றுபட்ட போராட்டம் நாட்டு நலனை உள்ளடக்கிய போராட்டமாகும்.குறைந்தபட்ச சம்பளம் ரூ.15,000 தர கோரிக்கை வைத்தால் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தரை மட்ட சம்பளம் ரூ.7,100 தருவேன் என்கிறார். வாழ்வதற்கான சம்பளம்தான் தருவார்களாம். மருத்துவத் துக்கும் குழந்தைகள் படிப்புக்கும் இதர செலவுகளுக்கும் தொழிலாளி என்ன செய்வது?அரசாங்கம் கொள்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், ஒரு நாள் மட்டுமல்ல, காலவரையற்ற போராட்டத்தை நாம் நடத்த வேண்டியிருக்கும். ஏனென்றால் மோடி அரசாங்கத் தின் நிகழ்ச்சிநிரல் தொழிலாளிகளின் நலனுக்காக இல்லை. முதலாளிகளுக்கானது. தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டால் 70சத வீதம் தொழிலாளர்களுக்கு பாதுகாப் பில்லை. பணிநிரந்தரம், சம ஊதியம், சமூகப் பாதுகாப்பு ஆகியவை நமதுஅடிப்படை கோரிக்கைகள். எத்தனை வருடங்களாக நாம் தற்காலிக மாகவே வேலை செய்வது? நெல்லைபன்னாட்டு நிறுவனத்தில் ஒருதொழிலாளி கூட நிரந்தர தொழிலாளியில்லை. CITU போராட்டத்தின் மூலம் நிரந்தரம் செய்துள்ளோம்.பிஎஸ்என்எல் நிறுவனத்தில் முதன்மை அங்கீகாரச் சங்கமான BSNL ஊழியர் சங்கம் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தை உரு வாக்கி வலுப்படுத்துகிறது. கேரளத்தில் சமீபத்தில் ஒப்பந்தத் தொழி லாளர்களுக்காகப் போராடிய BSNL ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் மோகனன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பலருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
70ம் ஆண்டு விழா
இந்த நாள் அக்டோபர் 3 சிறப் பான நாள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஹிட்லரின் நாசிசம் வீழ்ச்சியடைந்த பிறகு, சமாதானமும், மனிதகுல நலனும் முன்னெழுந்தபோது, உலக தொழிற்சங்கங்களின் சம்மேளனம் இந்த நாளில் உருவாக்கப்பட்டது. இன்று பிரேசிலில் நடைபெறும் 70வது ஆண்டு கொண்டாட்டத்தில் CITU தலைவர்கள் கலந்து கொண் டுள்ளனர். இங்கு இந்தியாவின் தென் கோடி முனையில் கூடி நாமும் உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என முழக்கமிடுகிறோம். சமாதானமும் முன்னேற்றமுமே நமது குறிக்கோள்.உலகின் பல நாடுகளில் அமைதிகுலைந்துள்ளது. நமது நாட்டிலும் உழைப்பாளி மக்களை பிளவுபடுத்த மதவாதம் வேகமாக பணியாற்றுகிறது.
மாட்டுக்கறி சாப்பிட்டதாக சொல்லப்பட்டு முஸ்லிம் முதியவர் வகுப்புவாதிகளால் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. அவரது மகன் குற்றுயிராக மருத்துவமனையில் சிகிச்சைபெறுகிறார். மதத்தின் பெயரைச் சொல்லி மக்களையும் உழைப்பாளிகளையும் பிரிப்பதற்கு, தொழிலாளிகளை ஒருவருக்கொருவர் எதிரிகளாக மாற்றுவதற்கு மோடி அரசாங்கம் முயற்சிக்கிறது.ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்து வரும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் இந்த வகுப்புவாதத்தை நன்கு அறிந்தவர்கள்.தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தின்போது, தென் ஆப்பிரிக்க தொழிற்சங்கம், “ஒருவ ரைக் காயப்படுத்தினாலும், அது அனை வரையும் காயப்படுத்துவதற்கு சமம்!” என்று ஒற்றுமைக்காகப் போராடியது.அதுபோல், நாம் ஒன்றுபட்டு நின்று, வகுப்புவாதத்தையும், கார்ப்பரேட் முதலாளிகளையும், அவர்கள் நலனை முன் வைக்கும் மத்திய அரசாங்கத்தின் கொள்கை களையும் முறியடிப்போம்!இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment