சென்னையில் மின்வாரிய தலைமையகம் முன்பு நடைபெற்ற மறியலில் .சவுந்தரராசன் எம்எல்ஏ பேசினார்.பணிநிரந்தரம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று (அக்.28) தமிழகம் முழுவதும் மின்வாரியஒப்பந்த தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.சென்னை அண்ணாசாலையில் உள்ளமின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு மறியல் செய்த சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 20 ஆயிரம் களப்பணியாளர் உள்ளிட்டு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இப்பணி யிடங்களை நிரப்பாமல் குறைந்த கூலிக்குஒப்பந்த தொழிலாளர்களை அமர்த்தி வாரி யம் உழைப்புச் சுரண்டல் செய்கிறது.அனல், புனல் மின் உற்பத்தி, பொதுகட்டுமானம், மின் விநியோகப் பிரிவுபோன்ற நிரந்தர தன்மை வாய்ந்தஇடங்களில் கூட ஒப்பந்த / அவுட்சோர்சிங் தொழிலாளர்கள் ஈடுபடுத்துகிறது.
இவர்களுக்கு வாரியம் தினக்கூலி கூட வழங் காமல், முறைகேடாக நுகர்வோரிடமிருந்து பணம் வசூல் செய்து தருகிறது. இதனால் வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களே இல்லை என்றும் கூறுகிறது.மின் உற்பத்தி மற்றும் மின்விநியோக நிலையங்கள், மின் தொடரமைப்பு போன்றபிரதானப் பிரிவுகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். இதற்கான பட்டியலை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, வாரியத் திற்கு கொடுத்துள்ளது. அதை ஆய்வு செய்து, ஒப்பந்தத் தொழிலாளர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். களப்பணியாளர் பணியிடங்களை நிரப்பும் போது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.வாரியத்தில் தொடர்ச்சியாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள்,பகுதிநேர ஊழியர்களை பட்டியலிட்டு நிரந்தர ஊழியர்களுக்கு வழங்குவதைப் போன்றே போனஸ், கருணைத் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி மறியல் நடத்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு அறைகூவல் விடுத்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் வாரிய அலுவலகங்கள் முன்பு மறியல் நடைபெற்றது. அதன்ஒருபகுதியாக சென்னை அண்ணாசாலை யில் உள்ள மின்வாரிய தலைமை அலு வலகம் முன்பும் மறியல் நடைபெற்றது.இப்போராட்டத்தை தொடங்கி வைத்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ பேசுகையில், களப்பணி செய்பவர்கள் இல்லையென்றால் மின் வாரியமே இல்லை. உயிரைப் பணயம் வைத்து, கடின உழைப்பை செலுத்தும் களப்பணியாளர்களை வாரியம் அங்கீகரிக்க மறுப்பது சரியானதல்ல.
நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை பட்டிய லிட்டு பணி நிரந்தரம் செய்யவும், நிரந்தரதொழிலாளர்களுக்கு இணையாக கான்ட்ராக்ட் மற்றும் பகுதி நேர தொழிலாளர் களுக்கு போனஸ் வழங்கவும் அரசுமறுக்கிறது.இதுகுறித்து சட்டமன்றத் தில் எழுப்பிய போது அரசு முறையாக பதிலளிக்கவில்லை. அதன் விளைவாகவே இந்த மறியல் நடைபெறுகிறது என்றார்.சாலை விபத்தில் இறப்பவர்களுக்கு கிடைக்கும் நிவாரணம் கூட மின்வாரியப் பணியின் போது விபத்து ஏற்பட்டு இறக்கும் ஒப்பந்த தொழிலாளர் களுக்கு, கிடைப்பதில்லை. ஆகவே, கோரிக்கைகளை விரைந்து நிறை வேற்றாவிடில் நிரந்தர தொழிலாளர்களும் பங்கேற்கும் போராட்டமாக இது மாறும் என்று சவுந்தரராசன் எச்சரித்தார்.இதன்பின்னர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் கே.விஜயன், பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், பொருளாளர் ஈ.அந்தோணி, துணைப் பொதுச் செயலாளர்கள் கே.ரவிச்சந்திரன், மண்டலச் செயலாளர்கள் எ.பழனி, தி.ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையில் மறியல் செய்த தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.மதுரையில் இரா.அண்ணாதுரை, தர்மபுரியில் பி.டில்லிபாபு, திருப்பூரில் கே.தங்கவேலு, விழுப்புரத்தில் ஆர்.ராமமூர்த்தி, நாகையில் நாகை மாலி, ஆகிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும், கோவையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனும் மறியல் போராட்டத்தை துவக்கி வைத்தனர்.
No comments:
Post a Comment