Saturday 17 October 2015

இன்று அக்டோபர்-17, சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்...

 கொடிதுகொடிதுவறுமை கொடிது
1993ம் ஆண்டில் இருந்து உலக வறுமை ஒழிப்பு நாள் அனுசரிக்கபடுகிறது. 23 ஆண்டுகள் கடந்து 2015 ஆம் ஆண்டில் வறுமையை ஒழித்துக்கொண்டு இருக்கிறோம். மனிதனிடம் வர்க்க பேதம் உருவானது முதலே இங்கு வறுமை தொடங்கி விட்டது. நேற்று உலக உணவு தினம் இன்று உலக வறுமை தினத்தை ஒன்றுபோல அமைத்திருக்கிறார்கள். உணவின் முக்கியத்துவம் அறிந்தாலே வறுமையின் பிடியில் இருந்து அனைவரையும் காப்பாற்றலாம். ஆனால் இங்கே நாட்டின் பொருளாதாரம் மக்களின் வறுமைக் கோட்டை தீர்மானிக்கிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 38 சதவீதம் மக்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர் என்று மத்திய அரசு அமைத்த குழு மதிப்பிட்டுள்ளது. கடந்த 2004 & 05ம் ஆண்டில் எடுக்கப்பட்ட தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுகளை அடிப்படையாக கொண்டு, டெண்டுல்கர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர், உடல் நலம், கல்வி, சுகாதாரம், சத்துணவு, வருமானம் ஆகியவற்றை அளவீடாக கொண்டு மதிப்பிட்டுள்ளனர்.  கடந்த 1972ம் ஆண்டில் நகரங்களில் 2100 கலோரி, கிராமங்களில் 2400 கலோரி உணவுப் பொருட்கள் வாங்கும் வருமான அளவை கொண்டு மக்களின் ஏழ்மை நிலை மதிப்பிடப்பட்டது. இதில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 41.6 சதவீதமான 45 கோடியே 60 லட்சம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. வேறுபட்ட சமூக அமைப்பு, பொருளாதார வளர்ச்சி, நில அமைப்பு, கிராமங்கள், நகரங்கள் என இருந்த போதிலும், கடந்த 20 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் சீரான வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த 1999ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையிலான காலத்தில், அரியானா 8.7, டில்லி 7.4, பீகார் 5.1, உத்தரபிரதேசம் 4.4, மத்தியபிரதேசம் 3.5 சதவீதமும் வளர்ச்சியடைந்தது. அதே நேரத்தில், வறுமையில் உள்ள கிராமங்கள் ஒரிசாவில் 43, பீகாரில் 41 சதவீதமும் இருந்தது. பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 42 கோடியே 10 லட்சம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதாக ஆக்ஸ்போர்ட் ஏழ்மை மற்றும் மனித மேம்பாடு மையம் வெளியிட்ட வறுமை குறித்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்பு திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருவதால்,  2015ம் ஆண்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையை 5 கோடியே 30 லட்சமாகவும், 23.6 சதவீதம் பேர் தினசரி 60 ரூபாய் அளவிற்கு வருமானம் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளதுமத்திய அரசு அமைத்த நிபுணர் குழு அளித்துள்ள விவரத்தின் படி, கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பவர்கள் ஒரு நாளைக்கு 32 ரூபாயும், நகர்புறங்களில்  இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 47 ரூபாய்க்கு கீழ் சம்பாதிப்பவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கிறார்கள் என ஆய்வுத் தகவலை தெரிவித்துள்ளார்.  நாட்டின் விலைவாசி ஏற்றம் கண்டுகொண்டே இருக்க ஒரு நபரின் ஒரு நாள் செலவு கிராமத்திற்கு 32 ரூபாயும், நகரத்தில் இருப்பவர்களுக்கு 47 ரூபாயும் சாத்தியம் என்பது அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த உண்மையாக இருக்கிறது..!

No comments: