Saturday, 17 October 2015

OCT-17, கவிஞர் கண்ணதாசன் மறைந்த நாள் . . .

தமிழ் சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான கண்ணதாசன் 1927-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி தமிழ்நாடு மாநிலம் சிறுகூடல் பட்டியில் பிறந்தார். இவருடைய தந்தை சாத்தப்பனார், தாய் விசாலாட்சி ஆச்சி. இவருடன் உடன் பிறந்தோர் 8 பேர். சிறுவயதிலேயே இவரை ஒருவர் ரூ.7000-க்கு தத்து எடுத்து வளர்த்தார். அவருடைய வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வளர்ந்தார். எட்டாம் வகுப்பு வரை படித்த கண்ணதாசன் 1943-ஆம் ஆண்டு திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.கண்ணதாசனுக்கு பொன்னம்மா, பார்வதி, வள்ளியம்மை என்று 3 மனைவிகள். மூவருக்கும் சேர்த்து மொத்தம் 14 குழந்தைகள் பிறந்தனர். இந்து மதத்தில் பிறந்தாலும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர். இவர் 4000-க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5000-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும் எழுதியுள்ளார். மேலும் நவீனங்கள், கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழக அரசின் அரசவை கவிஞராகவும் இருந்துள்ளார்சாகித்ய அகாதமி விருதும் பெற்றுள்ளார்உடல்நிலை காரணமாக 1981-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24-ந் தேதி சிகாகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர்-17 சனிக்கிழமை இறந்தார். அக்டோபர் 20-இல் அமெரிக்கா விலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு லட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர்-22 இல் எரியூட்டப்பட்டது.

No comments: