Friday, 2 October 2015

துர்காபூர் ‘செயில்’ உருக்காலை தேர்தலில் CITU வெற்றி.

மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் செயில் உருக்காலையின் சங்க அங்கீகார தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸை தோற்கடித்து சிஐடியு மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பின்பு கடந்த ஐந்து ஆண்டு காலமாக தொழிலாளர் விரோத மக்கள் விரோத கொள்கைகளை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அரங்கேற்றி வருகின்றனர். கடுமையான அடக்குமுறைகளை திரிணாமுல் குண்டர்களை கொண்டு அறங்கேற்றி வருகின்றனர். இப்பின்னணியில் நாட்டின் பிரதான பொதுத்துறை நிறுவனமான செயிலின் கீழ் இயங்கி வரும் துர்காபூர் உருக்காலையில் சங்க அங்கீகாரத்திற்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நடைபெற்றது.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவோடு திரிணாமுல் தொண்டர்கள் மற்றும் மாநில காவல் துறையை ஏவி அடக்குமுறை செய்தும் துர்காபூர் ஆலை நிர்வாகமும் பலதரப்பட்ட அடக்கு முறைகளை ஏவிவிட்டனர். சிஐடியு தோழர்களின் வீடு புகுந்து தாக்குவது, பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பது போன்ற தொழிலாளர் விதோத போக்குகளை அரங்கேற்றியது. கடந்த கூட்டுறவு தேர்தலில் கூட சிஐடியு தோழர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. போனஸ் பிரச்சனையில் தீர்வு கண்ட பின்பும் சிஐடியு நிர்வாகிகள் மீது திரிணாமுல் குண்டர்கள் தாக்குதல்களை நடத்தினர். இப்பின்னணியில் நடைபெற்ற சிஐடியு சங்க அங்கீகார தேர்தலில் சிஐடியு சங்கம் 3642 வாக்குகள் பெற்று முதலிடத்தைப்பெற்று தொழிலாளர்களின் அங்கீகாரத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டது. அடாவடித் தனத்தில் ஈடுபட்ட ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொழிற்சங்கம் 3280 வாக்குகள் பெற்று பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஐஎன்டியுசி 1115 வாக்குகளும் மக்கள் விரோத பாஜக கட்சியின் பிஎம்எஸ் சங்கம் வெறும் 240 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. துர்காபூர் செயில் உருக்காலையின் சிஐடியுவின் வெற்றிக்கு சேலம் உருக்காலையின் சிஐடியு சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதுகுறித்து சேலம் உருக்காலை சிஐடியு சங்கத்தின் செயலாளர் கே.பி.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : துர்காபூர் செயில் உருக்காலையில் சிஐடியுவின் வெற்றியானது தொழிலாளர் உரிமைக்காகவும், தேச நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபடும் சிஐடியு சங்கத்தின் மீது தொழிலாளர்கள் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையையே காட்டுகிறது. இந்த வெற்றி மென்மேலும் தொடர வேண்டும். ஒன்றுபட்ட போராட்டத்தால் இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

No comments: