Monday, 5 October 2015

தமுஎகச 40-ஆம் ஆண்டு மதுரையில் சிறப்பு மாநாடு...

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆவதையொட்டி மதுரையில் சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.தமுஎகச 40-ஆம் ஆண்டு சிறப்பு மாநாடு மதுரை தமுக்கத்தில் நவ.29-ஆம் தேதி கருத்தரங்கம் மற்றும் கலை இரவுடன் நடைபெற உள்ளது. இதற்கான வரவேற்புக்குழு அமைப்புக்குழு கூட்டம் சனிக்கிழமை மதுரையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் ஸ்ரீரசா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ..சாந்தாராம் வரவேற்றார். கூட்டத்தில் பங்கேற்று சங்கத்தின் மாநிலத்தலைவர் .தமிழ்செல்வன், மற்றும் தலைவர்கள் எஸ்..பெருமாள், .நன்மாறன், மதுக்கூர் இராமலிங்கம், தி.வரதராசன், .குமரேசன், லட்சுமிகாந்தன், மருதுபாரதி புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன் உள்ளிட்டோர் உரையாற்றினர். பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் நிறைவுரையாற்றினார்.வரவேற்புக்குழுத் தலைவராக இசைப் பேரறிஞர் மம்முது, செயலாளராக ..சாந்தாராம், பொருளாளராக எம்.முருகேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இக் கூட்டத்தில் நமது மாவட்ட செயலர் தோழர். எஸ். சூரியனும் கலந்துகொண்டார். இறுதியாக அமைக்கப்பட்ட வரவேற்புக்குழுவில், நமது சங்கத்தின் சார்பாக தோழர்கள், சூரியன், செல்வின் சத்தியராஜ் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.103 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.கூட்டத்தில் பாரதி தேசியப் பேரவை தலைவர் ஜான்மோசஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மா.விஜயபாஸ்கர் நன்றி கூறினார்.

No comments: