Friday, 8 April 2016
Thursday, 7 April 2016
2016-17ம் ஆண்டிற்கான தேர்வுக்கால அட்டவணை . . .
நேரடி
நியமன TTA தோழர்களின் கோரிக்கை அடிப்படையில், 2014-15, 2015-16 ஆண்டுகள் காலி பணியிடங்கள் தேர்வு
தேதிகள் வெளியிட நமது BSNLEU மத்திய
சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதே போல்,
JTO நேரடி நியமன (OUTSIDE QUOTA) தேர்வுகள், இலாக்கா தேர்வுகள் நடை
பெற்று முடிந்தபின் நடத்தபடவேண்டும் எனவும் நாம் தொடர்ந்து
வலியுறுத்தினோம்.
நமது கோரிக்கைகள் ஏற்று தேர்வுக்கால அட்டவணை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
JTO இலாக்காத்தேர்வுகள் காலியிடங்களுக்கு ஏற்றவாறு 3 கட்டமாக நடத்தப்படும்அறிவிக்கப் பட்டுள்ள தேர்வுகளில் சில...JTO இலாக்காத்தேர்வு
2013-14ம் ஆண்டிற்கான காலியிடங்கள் : தேர்வு நாள் 22/05/2016
2014-15ம் ஆண்டிற்கான காலியிடங்கள் : தேர்வு நாள் 28/08/2016
2015-16ம் ஆண்டிற்கான காலியிடங்கள் : தேர்வு நாள் 27/11/2016.
JAO இலாக்காத்தேர்வு
40 சத ஒதுக்கீட்டுத்தேர்வு நடைபெறும் நாள் : 17/07/2016
10 சத ஒதுக்கீட்டுத்தேர்வு நடைபெறும் மாதம் : ஆகஸ்ட் 2016
JTO நேரடித்தேர்வு நடைபெறும் மாதம் : டிசம்பர் 2016
JAO நேரடித்தேர்வு நடைபெறும் மாதம் : பிப்ரவரி 2017
TTA நேரடித்தேர்வு நடைபெறும் மாதம் : ஜனவரி 2017
TTA பயிற்சிக்காலம் - BSNLEU கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி!
TTA தோழர்கள்
JTO தேர்வெழுத, 5 ஆண்டுகள்
சேவை முடித்திருக்க வேண்டும். இந்த 5 ஆண்டு சேவை அவர்களது பயிற்சிக்காலத்தில் இருந்து கணக்கிடப்படவில்லை. அவர்களது பணி நிரந்தரத் தேதியில் இருந்துதான் கணக்கிடப்பட்டு வந்தது.
பயிற்சிக்காலம் ஆண்டு உயர்வுத்தொகைக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் போது தேர்வுக்கும் கணக்கிலெடுத் துக்கொள்ளப்பட வேண்டுமென நமது BSNLEU சங்கம் நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
தற்போது JTO தேர்வெழுத தேவையான சேவைக்காலத்திற்கு TTA தோழர்களது
பயிற்சிக்காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமென BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.இது நமது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி !அதன் உத்தரவு காண இங்கே கிளிக் செய்யவும்.
Wednesday, 6 April 2016
சாமி வரம் கொடுத்தாலும் - பூசாரி வரம் கிடையாதாம்...
07-04-16 கண்டன ஆர்பாட்டம் . . .
அருமைத் தோழர்களே !

நமது BSNL-லில் ஊழியர்களுக்கு கடன் வழங்க முடியாத சூழலில், நமது மத்திய சங்க தொடர் முயற்சியால் வங்கிகளில் MOU மூலம் கடன் பெறப்படுகிறது. சமீப காலமாக நமது A.O -Drawal விதிகளுக்கு முரணாக நடந்து கொள்கிறார். விதிகளை பற்றி தனக்கு கவலை இல்லை, DDO-நான் நினைத்தால் தான் கடன் வழங்குவேன் என்ற தனிச்சையான நிலை எடுக்கின்றார். இது குறித்து நாம் BSNLEUஒரு பொறுப்புள்ள சங்கம் என்ற அடிப்படையில், A.O -Drawalஉடன், D/S-AIBSNLEA, D/S-BSNLEU, D/P-BSNLEU, CAO(F) ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினோம். இறுதியாக CAO(F) வழிகாட்டலின் அடிப்படையில் Declaration பெற்றுக் கொண்டு கடன் வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டு கடன் கோரிய ஊழியர்களிடம் Declaration-ம் பெற்ராகிவிட்டது. (மார்ச் மாதம் கடன் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு ) ஆனால் அதன்பின்னும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக A.O -Drawal கடன் வழங்க மறுப்பதை ஏற்க முடியாது. இது குறித்து நமது DGM(F) உடன் விவாதித்து விட்டோம். நமது G.Mஅவர்களுக்கும் கடிதம் கொடுத்துவிட்டோம். தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.
ஆகவே, 07-04-16 மதியம் 1 மணிக்கு G.M அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டு கிறோம்.
78.2 சத அடிப்படை சம்பளத்தில் Skill upgradation Allowance...
அருமைத் தோழர்களே ! கடந்த தேசிய கவுன்சிலில் நமது BSNLEU சங்கம்
78.2 சத அடைப்படை சம்பளத்தில் வீட்டு வாடகை படி, மற்ற படிகள் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது. DIR(HR) வீட்டு வாடகைபடி தற்போது அவ்வாறு தர முடியாது ஆனால்
Skill Upgradation Allowance 78.2 சத அடிப்படை சம்பளத்தில் கொடுக்க ஒப்புக் கொண்டார். அதற்கான உத்திரவு கீழ்கண்டவாறு வெளியிடப்பட்டுள்ளது.
Tuesday, 5 April 2016
உண்மையை வெளியில் சொல்ல .NFTE-க்கு வெட்கம் ஏன் ?
30 03 2016 அன்று PLI( PRODUCTIVITY LINKED INCENTIVE ) கமிட்டி கூட்டம் நடக்கப் போவதாக BSNL நிர்வாகம் ஒரு நாளைக்கு முன்பாக தெரிவித்தது . மிக மிக குறுகிய கால அவகாச கால அறிவிப்பாக இருப்பதாலும் ஏற்கனவே 30 03 2016 அன்று குஜராத்தில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கலந்து கொள்ள இயலாது என்றும் எனவே இன்னொரு தேதியில் நடத்தலாம் என்று நமது சங்கம் கேட்டுக்கொண்டது. ஆனாலும் நமது வேண்டு கோளை ஏற்றுக் கொள்ளாமல் நிர்வாகம் அவசரம் அவசரமாக – தன்னிச்சையாக - 30 03 2016 அன்று கூட்டத்தை நடத்தியுள்ளது. மொத்தத்தில் கமிட்டியில் இரண்டு பிரதிநிதிகள் மட்டுமே என்பதும் அதில் பிரதான தொழிற்சங்கத்தை சார்ந்த பிரதிநிதி, அதுவும் STAFF SIDE SECRETARY வராமல் தான் மட்டும் கலந்து கொள்வது சரியல்ல என்பது குறைந்த பட்ச தொழிற்சங்க அறிவு உள்ள யாரும் ஏற்றுக் கொள்வார்கள்.ஆனால், NFTE பிரதிநிதி திருவாளர் இஸ்லாம் அஹமது மட்டும் தன்னந்தனியாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச்சு வார்த்தை ( ? )நடத்தியுள்ளார். ஒரு மாத கால அறிவிப்பு இல்லாத காரணத்தால் நமது சங்கம் கலந்து கொள்ள வில்லை என்று கோயபல்ஸ் பிரச்சாரமும் செய்துள்ளார். இதன் மூலமே ஒரு துரோகம் செய்ய NFTE பிரதிநிதி திருவாளர் இஸ்லாம் அஹ்மது முடிவு செய்துள்ளதை நாம் புரிந்து கொள்ளலாம். கூட்டத்தில் 2014 - 15 ஆண்டிற்கு ஒரு அற்பத் தொகையை PLI ஆக BSNL நிர்வாகம் தெரிவித்துள்ளது. மிகக் குறைவு என்று கருதினாலும் அதை தான் எதிர்க்கவில்லை என்று திரு. இஸ்லாம் அகமது தெரிவித்துள்ளார். கமிட்டி தன்னுடைய பரிந்துரையை உரிய இடத்தில் முடிவிற்காக சமர்ப்பிக்கும் என்றும் திருவாய் மலர்ந்துள்ளார்.அற்பத்தொகை எவ்வளவு என்று இதுவரை அவர் தெரிவிக்க வில்லை. நமது சங்கம் PLI தொகை இரண்டு இலக்க அற்பத்தொகை என்று அறிந்து எதிர்ப்பு தெரிவித்த்துடன் போராட்ட்த்தையும் அறிவித்த பிறகு, NFTEபிரதிநிதி 31 03 2016 அன்று பல்டி அடித்து அந்த தொகையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளார்.கடைசி வரை அந்தத் தொகை எவ்வளவு என்று அவர் தரப்பில் தெரிவிக்கவில்லை. உண்மையைத் தெரிவிக்கவும் அவர் தயாராக இல்லை. வெளியில் சொல்ல வெட்கப்பட்டு MINUTES வந்த பிறகு தெரியும் என்று கூனிக் குறுகி பேசி வருகின்றார். மாட்டு வியாபாரிகள் துண்டைப் போட்டு வெளியில் தெரியாமல் தொகையை பேரம் பேசுவது போல் நிர்வாகத்துடன் பேரம் நடந்துள்ளது.ஏன் இந்த அவல நிலை ?பொறுப்புள்ள எந்த தொழிற்சங்கமும் இத்தகைய அணுகுமுறையை மேற்கொள்ளாது.ஊழியர் நலனுக்கு எதிராக ரகசிய பேரம் பேசும் இத்தகைய போக்கை NFTE சங்க உறுப்பினர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.இதற்க்கு உரிய முறையில் ஊழியர்கள் 10.05.2016 அன்று NFTE சங்கத்திற்கு 7வது உறுப்பினர் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்பது திண்ணம்.
Monday, 4 April 2016
Saturday, 2 April 2016
அநீதி களைய ஆர்பரித்த ஆர்பாட்டம் மதுரையில் . . .
அருமைத் தோழர்களே ! NFTE + BSNL நிர்வாகமும் இணைந்து ஊழியர்களுக்கு இழைக்க திட்டமிட்ட போனஸ் அநீதி களைய நாடு முழுவதும் 01-04-2016 அன்று நாடு முழுவதும் ஆர்பாட்டம் நடத்திட நமது BSNLEU -CHQ மத்திய சங்கம் அறைகூவல் விடுத்தது. அதன் அடிப்படையில் ஒரு குறுகிய கால அழைப்பில் மதுரை G.M அலுவலகத்தில் மதியம் 1 மணிக்கு ஆர்பரித்த ஆர்பாட்டம், நமது BSNLEU மதுரை மாவட்டத் தலைவர் தோழர் . சி. செல்வின் சத்தியராஜ் தலைமையில் மிகவும் எழுச்சியாக நடைபெற்றது.. . .
NFTE + BSNL நிர்வாகமும் இணைந்து போனஸ் வழங்குவதில் ஊழியர்களுக்கு இழைக்க திட்டமிட்டுள்ள சதியை விளக்கி நமது BSNLEU மதுரை மாவட்ட செயலர் தோழர்.எஸ். சூரியன் விளக்க உரை நிகழ்த்தினார். TNTCWU மதுரை மாவட்ட செயலர் தோழர் என். சோனை முத்து வாழத்துரை நிகழ்த்தினார், இறுதியாக நமது BSNLEU மதுரை மாவட்ட பொருளர் தோழர். எஸ். மாயாண்டி நன்றியுரை நிகழ்த்தினார்.
Friday, 1 April 2016
Subscribe to:
Posts (Atom)





















