என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களில் 4219 பேர் ஒரே நாளில் பணிநிரந்தரம் ஆகியு ள்ளனர்.கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனம் உள்ளது. இங்கு சுமார் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் உண்ணாவிரதம், ரயில் மறியல், மாவட்டம் தழுவிய போராட்டங்கள் நடத்தினர்.இதுதொடர்பாக டெல்லியில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.அதில் 5 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை இன்கோ சர்வ் சொசைட்டியில் சேர்ப்பது, என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வசதி, ஊதிய உயர்வு உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்று இருந்தன. அதன்படி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ அடையாள அட்டையும், ஊதிய உயர்வும் உடனடியாக வழங்கப்பட்டது. ஆனால் சொசைட்டியில் சேர்ப்பது மட்டும் இழுபறியில் இருந்தது. இதற்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கே காரணம் என கூறப்பட்டது.கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இப்பிரச்சனையில் புதிய திருப்பம் ஏற்பட்டது. அதன் பிறகு ஒப்பந்த தொழிலாளர்களை சொசைட்டியில் சேர்க்க என்எல்சி முடிவு செய்தது. பின்னர் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் 4,219 ஒப்பந்த தொழிலாளர்களை இன்கோ சர்வ் சொசைட்டியில் சேர்க்க என்எல்சி நிர்வாகம் உத்தரவிட்டது.நேற்று முன்தினம் முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆவணங்களை சமர்ப்பித்து சொசைட்டி உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இவர்கள் படிப்படியாக என்எல்சியில் நிரந்தர தொழிலாளர்களாக ஆக்கப்படுவர். கடந்த 20 ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என தொழிலாளர்கள் கொண்டாடி வருகின்றனர். 4219 ஒப்பந்த தொழிலாளர்கள் ஒரே நாளில் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Wednesday, 4 September 2013
Monday, 2 September 2013
பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து . . . .
பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மாபெரும் எண்ணெய் வளத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் சிரியா மீது படையெடுக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் போர் முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ளது. ஏகாதிபத்தியத்தின் இந்தப் போர்வெறியை எதிர்த்து, சிரியாவை தாக்காதே என முழக்கமிட்டு மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,தலைமையில் இடது முன்னணிசார்பாக மக்கள் (01.09.2013) ஞாயிற்று கிழமை பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணியை நடத்தியது.
----தீக்கதிர்
Sunday, 1 September 2013
03.09.13 மாவட்ட செயற்குழு கூட்டம் . . . .
நடக்க இருப்பவை . . . .
அருமைத் தோழர்களே! அனைவருக்கும் வணக்கம்.
--என்றும் தோழமையுடன்---எஸ்.சூரியன் ....மாவட்டசெயலர்
நமது BSNLEU மாவட்டசங்கத்தின் செயற்குழு கூட்டம் 03.09.13செவ்வாய் காலை 10 மணி முதல் திருமங்கலத்தில் ,உசிலை ரோட்டில் அமைந்துள்ள சண்முகராஜா மீட்டிங் ஹாலில் நடைபெற உள்ளது .அனைவரும் திரளாக கலந்து கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் .
--என்றும் தோழமையுடன்---எஸ்.சூரியன் ....மாவட்டசெயலர்
ரூபாய் மதிப்பு சரிவை இப்படி....
‘கறை நல்லது தான்!’
“... இன்னும் சொல்லப்போனால் ரூபாய் மதிப்பு சரிவதும் கூட பொருளாதாரத்திற்கு நல்லதுதான். அப்போது தான் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்ற போட்டி உணர்வு அதிகரிக்கும்.”-நாடே பதற்றத்தில் ஆழ்ந்திருக்கிற ரூபாய் மதிப்பு சரிவை இப்படி பதற்றமே இல்லாமல் கையாளும் திறமை பாரதப் பிரதமர் மன்மோகன்சிங்கை விட்டால் வேறு யாருக்கு வாய்க்கும்?உள்நாட்டுத் தொழில்களையெல்லாம் அழித்து, அனைத்தும் இறக்குமதி மயம்; அனைத்தும் அந்நிய மயம் என்று ஆக்கிவிட்டு, ஏற்றுமதியை அதிகரிக்க போட்டி உணர்வை உருவாக்கப் போகிறாராம்.“சகதியில் விழுந்து புரளுங்கள்; கறையாகி விடும் என்று பயப்படுகிறீர்களா? கறை நல்லது தான், அப் போது தானே அதை நன்றாக துவைக்க வேண்டும் என்ற சிந்தனை பிறக்கும்!”“அப்புறம், நீங்கள் சகதியில் விழுந்ததற்கு நாங்களா பொறுப்பு? ரூபாய் மதிப்பு சரிவுக்கு பல உள்நாட்டு, வெளிநாட் டுக் காரணங்கள் இருக்கின்றன. நாங்களா பொறுப்பு?நிலக்கரித்துறையில் ஆவணங்கள் காணாமல் போ னதற்கு நானா பொறுப்பு? வெங்காயம் விலை உயர்ந்ததற்கு நானா பொறுப்பு?”- ஆமாம் ஐயா, நீங்கள் பொறுப்பில்லை.பொறுப்பில் லாதவரை
பதவியில் அமர்த்தியதற்கு நாங்கள்தான் பொறுப்பு.
பொறுப்பில்லாத உங்களைத்
தூக்கி எறிவதற்கும் நாங்கள்
தான் பொறுப்பு!
-----தீக்கதிர்
போலீஸ், நீதித் துறை மீது மக்கள் நம்பிக்கை . . .
போலீஸ்,
நீதித் துறை மீது மக்கள் நம்பிக்கை பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறினார்.அவர் தில்லி மனித மேம்பாட்டு அறிக்கை 2013-ஐ வெளியிட்டார். தில்லி
முதல்வர் ஷீலா தீட்சித் முன்னிலை வகித்தார்.
தில்லியில்
குற்றங்கள் அதிக அளவில் நடப்பதால் பொதுமக்கள் போலீஸ், நீதித்துறை மீது நம்பிக்கை இழந்து
விட்டனர். பாதுகாப்பு குறைபாடு காரணமாகத்தான் அண்மையில் தில்லியில் பொதுமக்கள்
பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள். இதை கவனத்தில் கொண்டு போலீஸ், நீதித்துறை
மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அரசு ஏராளமான
நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.
பாதுகாப்பு
குறைபாட்டால் பொதுமக்களின் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியோரின் அன்றாட
வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இந்த மனித மேம்பாட்டு அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளபடி வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, அடிப்படை
வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல் உள்பட பல்வேறு துறைகளில் பரவலான குறைபாடுகள்
இருப்பது தெரியவந்துள்ளது.
வேலைவாய்ப்பில்
பெண்களுக்கு சம அளவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும்
ஏழை எளிய மக்கள், சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் மழலையர் பள்ளி, ஆரம்பப்பள்ளி
போன்றவற்றை அதிக அளவில் அமைக்க வேண்டும்.
முறைசாரா
தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து விட்டது.அவர்கள்
சமூக பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளனர். இவர்களின் குறைகளையும் அரசு
தீர்க்க வேண்டும் என்றார் ஹமீத் அன்சாரி.
........தினமணி
புதிய பஞ்சப்படி குறித்த தகவல் . . . .
1.10.2013 முதல் IDA அதிகரிப்பு 6.1% இல் இருந்து 7.1 % ஆக இருக்கலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.
IDA From October 2013 for PSUs
Expected IDA Increase
From October 2013
Last
update 30/08/2013 20:00 Hrs.
The Expected IDA w.e.f. 01-October-2013 may increased by 6.1% to 7.1% i.e upto
from 85.0% to 86.0% depends upon the Average AICPI of the months Jun'13,
Jul'13, Aug'13. The AICPI of the months Jun'13 & Jul'13 are 231
& 235 declared on 31-July-2013 & 30-Aug-13
respectively, The AICPI of the month Aug'13 will be
declared on 27-September-2013. The actual IDA will be declared
on 27-September-2013.
Top 10 Projections:
|
Expectation No.
|
Expected CPI of
Aug'13
|
Avg. CPI Projected
|
Projected IDA
(%age)
|
Projected IDA
Increase (%age)
|
|
1
|
235
|
233.67
|
85.0
|
6.1
|
|
2
|
236
|
234.00
|
85.2
|
6.3
|
|
3
|
237
|
234.33
|
85.5
|
6.6
|
|
4
|
238
|
234.67
|
85.8
|
6.9
|
|
5
|
239
|
235.00
|
86.0
|
7.1
|
|
6
|
240
|
235.33
|
86.3
|
7.4
|
|
7
|
241
|
235.67
|
86.6
|
7.7
|
|
8
|
242
|
236.00
|
86.8
|
7.9
|
|
9
|
243
|
236.33
|
87.1
|
8.2
|
|
10
|
244
|
236.67
|
87.3
|
8.4
|
Note:The AICPI of the month May-13 is 228 and the current IDA Rate is 78.9%.
---என்றும் தோழமையுடன் ...எஸ்.சூரியன் ----மாவட்டசெயலர்
Subscribe to:
Posts (Atom)





