BSNLEU ????? ???????? ?????? ?????? ???????????

Welcome

Welcome

Dist. E.C. 2.2.17

Dist. E.C. 2.2.17

Friday, 6 September 2013

அல்கொய்தாவிற்கு ஆதரவான ஓபாமா . . .

அமெரிக்கா சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் கடற்படை வீரர்கள் தேர்வு மையத்தின் இணையதளத்தை சிரியாவின் மின்னணு ராணுவம் ஹேக் செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், அதில் சிரிய ராணுவம் சார்பில் கடற்படை வீரர்களுக்கு கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது:அந்தக் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, அன்புள்ள அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு,இது, கடந்த 3 ஆண்டுகளாக அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் சிரிய ராணுவத்தில் பணிபுரியும் உங்களது சகோதரர்கள் எழுதும் கடிதம்.உங்களது நாட்டின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு மற்றும் நாட்டுப் பற்றை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.


அதேபோன்று, எங்களது நாடு மற்றும் மக்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் அன்பையும், நாட்டுப் பற்றையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒபாமா ஒரு துரோகி. அவர், அல் கொய்தா கிளர்ச்சியாளர்களைக் காப்பாற்றுவதற்காக உங்களது வாழ்க்கையை அபாயகரமாக்கி வருகிறார்.வீரர்களே, சிரியாவிற்கெதிராக அல்கொய்தா தீவிரவாதிகளுடன் ஒபாமா வைத்திருக்கும் கூட்டணி குறித்து உங்களது தோழர்களின் எண்ணங்களை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.உங்களைப் போன்று நாட்டிற்காக போராடி வரும் ராணுவத்தினருக்கு எதிராக உங்களை களமிறக்குவதால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து உங்களது உயர் அதிகாரிகளுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. சிரிய ராணுவம் உங்களது நண்பன், எதிரியல்ல.எனவே, உங்களது மேலதிகாரிகளின் கட்டளைகளை நிராகரியுங்கள். தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக ராணுவப் பணிகளில் ஈடுபடுவோரின் உண்மையான நோக்கங்களை மனதில் நிறுத்துங்கள்.சிரிய ராணுவத்தினருக்கு எதிராக போராடுவதற்குப் பதிலாக, இரு நாட்டு ராணுவத்தினரும் இணைந்து நாட்டின் பாதுகாப்பிற்காக போராடுவதை நாங்கள் வெகுவாக வரவேற்கிறோம்.உங்களது சகோதரர்கள், சிரிய ராணுவம். இவ்வாறு அந்தக் கடிதத் தில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்நிலையில் பல அமெரிக்க கடற்படை வீரர் கள் நாங்கள் சிரியாவிற்கு எதிரான ராணுவ தாக்குத லில் பங்கேற்க மாட்டோம் என்ற வாசகங்கள் அடங் கிய அட்டையுடன் இணை யத்தில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
தீக்கதிர் .....

சிறந்த நாவலுக்கான பரிசு . . .

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் இணைந்து கலை இலக்கியப் போட்டிகள் நடத்துகின்றன.இதில் சிறந்த நாவலுக்கான பரிசான பெரிய அழகிய நாயகி அம்மாள் (நாவலாசிரியர் பொன்னீலனின் தாயார் ) பரிசுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் உயிர்நிலம் நாவல் தேர்வுசெய் யப்பட்டுள்ளது.வரும் அக்டோபர் 6ம் தேதி கோவையில் நடக் கும் விழாவில் அவருககு பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவிருக் கிறது.

மரியாதைக்குரிய தோழர்.மேலாண்மை பொன்னுசாமி அவர்களின் பணிசிறக்க நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம்,மனதார பாராட்டுகிறது.

Thursday, 5 September 2013

06.09.13 கண்டன ஆர்ப்பாட்டம்

06.09.13  ஒப்பந்த ஊழியர்களின் நாடு  தழுவிய  கண்டன ஆர்ப்பாட்டம்

பெரும்பாலான மாநிலங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு,குறைந்தபட்ச ஊதியம் கார்ப்பரேட் அலுவலகஉத்தரவுப்படி வழங்கப்படுவது இல்லை மேலும் அவர்களது ஊதியங்கள் EPF&ESIபங்களிப்புகளின்ஒருகணிசமானபகுதி ஒப்பந்தக்காரர்கள் மற்றும் நேர்மையற்றஅதிகாரிகள் மூலம்  சூறையாடப்படுகின்றன. தொழிலாளர்கள் தங்கள் ஊதியங்கள்,EPF&ESI  சலுகைகள் கோரி, போராட்டத்தில் செல்லும் போது, அவர்கள் இரக்கமற்று வேலைநீக்கம் செய்யபடுவது பல மாநிலங்களில் நடக்கிறது. கார்ப்பரேட் அலுவலகத்தின் கவனத்திற்கு இதைகொண்டு சென்ற BSNLEU எடுத்த அனைத்து முயற்சிகளும், செவிடன் காதில் ஊதிய  சங்காய் உள்ளதால் , 26.08.2013 அன்று நடைபெற்ற BSNLEU, மத்திய செயலக கூட்டம் பல்வேறு மாநிலங்களில் வேலை நீக்கம்செய்யபட்ட தொழிலாளர்களை மீண்டும்பணிக்கு  எடுக்க கோரி,  06.09.2013 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தமுடிவு செய்துள்ளது , BSNLEU மாநில மற்றும் மாவட்ட சங்கங்கள் குறைந்தபட்ச ஊதிய மீது கார்ப்பரேட்அலுவலகம்  உத்தரவுகளை செயல்படுத்த வேலை நீக்கம் செய்யபட்ட தொழிலாளர்களை மீண்டும் எடுக்க   சக்தி மிகுந்த ஆர்ப்பாட்டம் 06-09-2013 அன்று  நடத்தநமதுமத்திய சங்கம் அறைகூவல்விடுத்துள்ளது .
03.09.2013 அன்று திருமங்கலத்தில் நடை பெற்ற நமது மாவட்ட செயற்குழு முடிவின் அடிப்படையில் ....06.09.2013 வெள்ளி கிழமை நமது மதுரை SSA-யில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திட திட்டமிட்டுள்ளோம் அதன்படி ----
  • மதுரையில் LEV.4 வளாகத்தில் காலை 10.30 மணிக்கும் ,
  • திண்டுக்கல்லில் D.G.M அலுவலகம் முன்பு காலை 10.30 மணிக்கும் ,
  • தேனியில் D.E அலுவலகம் முன்பு மாலை 03.00 மணிக்கும்  
ஆர்ப்பாட்டத்தை நடத்திட நமது BSNLEU + TNTCWU தோழர்கள் அனைவரும் திரளாக  திரண்டிட வேண்டுகிறோம் .
போராட்ட வாழ்த்துக்களுடன் ------தோழமையுடன் 
என்.சோணைமுத்து D.S-TNTCWU                எஸ்.சூரியன் D.S-BSNLEU



05.09.13 ஆசிரியர் தினம்....

இந்தியாவின்மிகச்சிறந்த தத்துவாசிரியரும்,மதங்களின் ஒப்பிலக்கிய அறிஞரும், இந்தியாவின் தலை சிறந்த விருதான பாரத ரத்னா ருதாளரும்,இந்தியாவின் 2வது குடியரசுத்தலைவருமான சர்வபள்ளி எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடு கிறோம். டெம்பிள்டன் விருது, காமன் வெல்த் ஆர்டர் ஆப் மெரிட், ஜெர்மன் புத்தக நிறுவனத்தின் அமைதிப்பரிசு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இவர் சென்னை மாநிலக்கல்லூரி, மைசூர் மகாராஜா கல்லூரி, ஹாரிஸ் மான்செஸ்டர் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகவும், பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.
இவருடைய பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுவது சாலப்பொருத்தமே.சிறந்த ஆசிரியர்கள் ஆழ்மனதில் இருந்து கற்பிக்கிறார்கள் என்று ஒரு ஆங்கிலச் சொலவடை உண்டு. வெறும் புத்தகங்களில் இருந்து கற்றுத் தருவது மட்டும் கல்வி அல்ல. இன்றைய நாட்களில் கல்வி என்பது ஒருபணம் சம்பாதிக்கப் பயன்படும் கருவியாகவே பார்க்கப்படுகிறது. இது ஒருதவறான பார்வையாகும். கல்வி என்பது பாடங் களை மட்டும் சொல்லித்தருவ தல்ல. மனித மாண்புகளையும், சமூக சிந்தனைகளையும், நன்னெறி களையும் சிறுவர்கள் முதல் அனைவருக்கும் சொல்லித் தருவதுதான் கல்வியாகும். எனவேதான் கற்பதற்கும், கற்றுத்தருவதற்கும் வயது இல்லை என்று கூறுகிறார்கள்.ஒரு பள்ளி அல்லது கல்லூரி சிறந்தது என்று அதன் ஆசிரியர் களின் தரத்தாலும், தகுதியாலும் அறியப்படுகிறது. விக்ரம் சாராபாய், ஹோமி ஜஹாங்கீர் பாபா, அப்துல் கலாம் போன்ற அறிவியலாளர்கள் தங்களுடைய வாழ்வில் தங்களது ஆசிரியர்கள் ஏற்படுத்திய தாக்கம் பற்றி பெரிதும் புகழ்ந்துரைத்துள்ளார்கள்.
ஒரு மாணவன் ஒரு மனிதனாக உருவாவதற்கு ஆசிரியர்கள் ஒரு பெரும் தாக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் தங்களுடைய அனுபவங்களையும், நல்லெண்ணங்களையும், ஒரு பொருள், ஒரு சம்பவம், ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு, போன்றவை குறித்து தங்களது கருத்துக்களையும் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டும் முன்னோடிகளாக இருக்கவேண்டும். பாடங்களையும், மனிதத்தையும், நல்லொழுக்கங்களையும் இனம், ஜாதி, மதம், மொழி என்ற பாரபட்சம் பாராது அனைவருக்கும் கற்றுத்தர வேண்டும் ஆசிரியர் தொழில் ஒரு உயர் வான தொழில் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் ஆசிரியர் தொழிலுக்கு வரும் அனைவரும் அர்ப்பணிப்பு மிக்கவராக இருக்க வேண்டும். மாநில தேர்வுகளில் முதலிடம் பெறும் மாணவர்கள் யாரும் ஆசிரியர் தொழிலுக்கு வருவதில்லை என்பது வருத்த மளிக்கும் தகவலாகும்.
அண்மை காலங்களில் படிப்பில் சிறந்த மாணவர்கள் தகவல் தொழில் நுட்பம்(ஐடி), மருத்துவம், பொறியியல் போன்ற பாடங்களையே தேர்வு செய்கிறார்கள். இவர்களில் ஆசிரிய தொழிலுக்கு வருகின்றவர்கள் இல்லை என்று கூறிவிடலாம். இந்நிலை மாற வேண்டும். ஆசிரிய தொழிலுக்கும் திறமையானவர்கள் வருவதை ஊக்குவிக்க வேண்டும். ஆசிரிய தொழிலில் ஈடுபட்ட பெருந்தகைகள் ஏராளமானோர் உண்டு. சாந்திநிகேதனைத் தொடங்கி நடத்திய ரவீந்திரநாத் தாகூர் அங்கு ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அன்னை தெரசா ஒரு ஆசிரியையாக இருந்தவர்தான். கொல்கத்தா தூயமேரி உயர்நிலைப்பள்ளியில் பூகோளம் கற்றுக் கொடுத்த அன்னை தெரசா பின்னர் அப்பள்ளியின் முதல்வராகவும் பணியாற்றினார். பின்னரே அவர் தன்வாழ்வை சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும், புறக்கணிக்கப் பட்டவ்ர்களுக்காகவும் அர்ப்பணித்துக்கொண்டார்.  ஆசிரியர், அடுத்த தலை முறையை உருவாக்கும் ஒரு அரிய பணியை செய்கின்றவர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவர்களுக்குரிய இடத்தை சமுதாயத்தில் நாம் அளித்திட வேண்டும்.
ஆசிரியராக பணியாற்றுகின்றவர்களும் அதே பொறுப்புடன், கடமையுடன் ஆசிரியர் தொழிலுக்கு தங்களை அர்ப்பணித்திக்கொண்டு அடுத்த தலைமுறையை சிறந்ததாக்கும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.