BSNLEU ????? ???????? ?????? ?????? ???????????

Welcome

Welcome

Dist. E.C. 2.2.17

Dist. E.C. 2.2.17

Saturday, 7 September 2013

இளைஞரை தாக்கிய,: கேரள போலீஸ் . . .

 சூரிய மின்சார ஊழலில் சிக்கியுள்ள கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு கருப்புக் கொடி காட்டிய இடது ஜனநாயக முன்னணி ஊழியர்கள் மீது காவல்துறையினர் காட்டு மிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தினர். இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தைச் சேர்ந்த ஜெயபிரசாத் என்ற ஊழியரின் உயிர்நிலையில் லத்திக் கம்பால் குத்தியுள்ளனர். படுகாயமடைந்த ஜெய பிரசாத் மருத்துவமனை யில் உயிருக்குப் போராடிக் கொண் டிருக்கிறார்.
கைரளி பீப்பிள் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான இந்தக் கொடூரக் காட்சியைப் பார்த்து கேரளமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. புதனன்று முதலமைச்சர் உம்மன்சாண்டி, திரு வனந்தபுரத்தில் மாவட்டக் கொள்முதல் மையத்தை திறந்து வைக்க வந்திருந்த போது அவருக்கு இடது ஜனநாயக முன்னணி ஊழியர்கள் கருப்புக்கொடி காட்டினர். அவர்களைக் கலைக்க காவல்துறையினர் கொடூரத் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டனர். மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜெயபிரசாத் என்ற ஊழியரை காவல்துறையினர் சுற்றிவளைத்துத் தாக்கினர். குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அடித்தனர்.
தும்பா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சி.விஜயதாஸ், ஜெயபிரசாத்தின் உயிர்நிலையில் தடியால் பலமுறை அடித்தார். லத்திக் கம்பால் குத்தவும் செய்தார். அப்போது நகர காவல் ஆணையர் பி.விஜயன் உள்ளிட்ட அதிகாரிகள் அருகில் இருந்தனர். காவல்துறை தாக்குதலில் கீழே விழுந்த ஜெயபிரசாத்தை பூட்ஸ் காலாலும் உதைத்தனர். கருப்புக் கொடி காட்டிய இடது ஜனநாயக முன்னணி ஊழியர்களை காவல் துறையினர் பேருந்தில் ஏற்றிச் சென்றனர். ஆனால் பேருந்தில் ஜெயபிரசாத் இல்லை. இதை தொடர்ந்து தலைவர்கள் அவரைத் தேட ஆரம்பித்தனர். சாலையில் அமர்ந்து முற்றுகைப் போரா ட்டம் நடத்தினர்.

ஜெயபிரசாத்தை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதை அறிந்த தலைவர்கள் உடனடியாக விரைந்து சென்று அவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்                                                             .தீக்கதிர்.

கவுன்சில் அமைக்க நீதி வழங்கியது கேரள உயர்நீதிமன்றம்

உண்மை வென்றது . . . .
சந்தர்ப்பவாதம் குப்பைக்கு போனது. . . 
Hon'ble Kerala High Court gives favourable order, on nominations to councils.
The order of the Hon'ble Kerala High Court,  on nominations to councils, has come. The Hon'ble Court has reiterated it's earlier order, which states that the union/association which has not secured a minimum of 7% votes cannot make nominations to the councils. At the same time, it has not put any restriction on the the Recognised Union to make nominations to councils.  In other words, the Recognised Union has the liberty to nominate whomever it wants to councils. The relevent portion of the order readsthus:-

"If the qualified Union gives any such nomination, it shall be open to BSNL to   take          appropriate         decision     in the         matter".

Since the Recognition Rules which are in vouge in BSNL have not put any restriction in making nominations to councils, the Recognised Union Union is free to nominate whomever it wants. BSNLEU has taken a principled stand on the matter which has been vindicated by the Hon'ble Court

Truth has won!   Opportunism has bitten the dust!!
JCM உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் மாண்புமிகு கேரளா உயர்நீதி மன்றம் தீர்ப்பாணை வழங்கி இருக்கிறது.
தீர்ப்பாணையின் சாராம்சம்:
7%க்கும் குறைந்த வாக்குகள் பெற்ற சங்கம் JCM  கவுன்சில்களில் உறுப்பினர் நியமனம் கோர முடியாது.
JCM கவுன்சில்களில் உறுப்பினர்களை நியமனம் செய்ய தகுதி பெற்ற சங்கங்கள் தருகின்ற நியமன உறுப்பினர்கள் தொடர்பாக BSNL நிறுவனம் தகுந்த முடிவு எடுத்துக் கொள்ளலாம்.
வாழ்த்துக்களுடன்... எஸ்.சூரியன்,மாவட்டசெயலர் 

06.09.2013 நடந்தவை. . . .

அருமைத் தோழர்களே!அனைவருக்கும் வணக்கம் . . .

நமது மத்திய சங்க அறைகூவலின்படியும், 03.09.2013 அன்று திருமங்கலத்தில் நடைபெற்ற செயற்குழுவின் முடிவின்படியும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறித்தி நமது மதுரை SSAயில், மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய 3 இடங்களில் ஆர்ப்பாட்டம்  மிகவும் சக்தியாக நடைபெற்றுள்ளது கலந்து கொண்ட BSNLEU+TNTCWU  அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கம் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறது . 

மதுரையில் LEVEL-4 வளாகத்தில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ...

தோழர்கள், S.மனுவேல்பல்ராஜ், K.வீரபத்திரன் இருவரும் கூட்டுத்தலைமை ஏற்றனர், BSNLEU மாநில அமைப்புசெயலர் தோழர்.செல்வின்சத்தியராஜ் துவக்கிவைத்து உரையாற்றினர், TNTCWU-D.S, தோழர்.என்.சோணைமுத்து,
ADS.தோழர்.V.சுப்புராயலு BSNLEU மாவட்டசெயலரும், TNTCWU சங்கத்தின், மாவட்ட உதவிசெயலருமான S.சூரியன் நிறைவு உரையாற்றினார்.இறுதியாக ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் TNTCWU - ADS தோழர்.உமாதியாகராஜன் நன்றி கூறினார். 7 பெண்கள் உட்பட 100 க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

  திண்டுக்கல்லில் DGM வளாகத்தில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் . . .

தோழர்.E.கணபதி தலைமை தாங்கினார், மொத்தம் 60 பேர் கலந்து கொண்டனர், கோரிக்கையை விளக்கி, தோழர்கள். K.Sஆரோக்கியம், A.குருசாமி D.மூக்கையா, P.பாஸ்கரன், N.முத்துரத்தினம், A.வைத்தியலிங்கபூபதி ஆகியோர் பேசினர். BSNLEU மாநிலதுணைத் தலைவர், தோழர். எஸ்.ஜான்போர்சியா, நிறைவு உரை நிகழ்த்தினார்.இறுதியாக R.முத்து நன்றி கூறினார். 

தேனி Exchange வளாகத்தில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் . . .

தோழர்.P.தேசிங்கு தலைமை தாங்கினார், மொத்தம்  40 பேர் கலந்து கொண்டனர், தோழர்கள், T.K.சீனிவாசன், T.செல்லப்பாண்டி, கனகராஜ், S.தங்கதுரை, P.சந்திரசேகர், P.பிச்சைமணி, விஜயகாந்த், J.மைக்கேல்சிரில்ராஜ், H.ஸ்ரீராமன், ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.
வாழ்த்துக்களுடன் . .  .எஸ்.சூரியன்,மாவட்ட செயலர்.


Friday, 6 September 2013

27.09.2013 ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கான போஸ்டர் . . .

வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் . . . . . 
போரட்டவாழ்த்துக்களுடன்---எஸ்.சூரியன்,மாவட்டசெயலர் . . . .  

வ.உ.சிதம்பரனாரின் 142வது பிறந்தநாள் . . .

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 142வது பிறந்தநாளை முன்னிட்டு வியாழனன்று (செப். 5) சென்னையில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் பா.வளர்மதி, வி.மூர்த்தி, டி.கே.எம்.சின்னையா,பி.வி.ரமணா, கே.டி.ராஜேந்திர பாலாஜி, எஸ்.அப்துல் ரஹிம், சென்னை மேயர் சைதை சா.துரைசாமி, சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
இந்திய தேசம்,வெள்ளையனிடம் இருந்து விடுதலை பெறவேண்டும் என்பதற்காக தனது சொத்துக்களை நமது நாட்டிற்காக அர்ப்பணித்து,கப்பல் ஓட்டிய தமிழன் ,சுதந்திர போராட்ட வீரர் வ.உ .சி புகழ் ஓங்கட்டும். 
BSNLEU மதுரை மாவட்ட சங்கம் ....

03.09.13மாவட்ட செயற்குழு கூட்டம் . . . 

அருமை தோழர்களே! நமது மதுரை மாவட்டசங்கத்தின்செயற்குழு கூட்டம் 03.09.13 அன்று திருமங்கலத்தில் உள்ள சண்முக ராஜா மீட்டிங் ஹாலில், சீரும் சிறப்புமாக நடைபெற்றது.   நமது மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத்தலைவர் தோழர் கே.வேலுச்சாமி தலைமை தாங்கினார்.  
செயற்குழு கூட்டத்திற்கு ஓரிருவர் தவிர, அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெண்களும், பார்வையாளர்களும், ஒப்பந்த ஊழியர்களுமாக கிட்டத்தட்ட 200க்கும்  மேற்பட்டவர்கள் கலந்து கொண்டது மிகவும் சிறப்பு அம்சமாகும்.
மாநிலசங்கநிர்வாகிகள்,எஸ்.ஜான்போர்சியா, சி.செல்வின்சத்தியராஜ்,
பி .ஆனந்தன் உட்பட, மாவட்ட நிர்வாகிகள், கிளைசெயலர்கள் ஆக மொத்தம் 28 பேர் ஆய்படுபொருளின் மீது உரையாற்றினர். செயற்குழு 8 தீர்மானங்களை நிறைவேற்றியது.
  • 27.09.2013 ஒருநாள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவது.
  • ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் தீர்விற்கு இயக்கம் நடத்துவது.
  • அக்டோபர் இறுதிக்குள் மாநிலசெயலரின் தேதி பெற்று திண்டுக்கல்லில்  மாவட்டமாநாடுநடத்துவது .
  • மாநிலசங்க ஆலோசனைப்படி சில நிர்வாகிகள் மீதான நடவடிக்கையை ஒத்திவைப்பது.
  • CSC/CTOஎன்ற  2 கிளைகள் Mergerஆனதால் மாநிலசங்க ஒப்புதலோடுCSC என்ற ஒரே கிளையாக செயல்படும். 
  • BSNLசேவையை மேம்படுத்திட மாவட்ட அளவிலான கருத்தரங்கம் மத்திய,மாநிலசங்கங்களின்  ஆலோசனைப்படி நடத்துவது.
  • மதுரை மாவட்டLocal council மற்றும் Works committeeக்கான தோழர்களை இறுதிசெய்யப்பட்டது,மாநில,மத்திய சங்க ஒப்புதல் பெறுவது. 
  • மத்திய,மாநில,மாவட்டசங்கம் ஏற்கனவே,அறிவித்துள்ள நன்கொடையை தாமதமின்றி நமது உறுப்பினர்களிடம் வசூல் செய்து உரியகாலத்தில் மாவட்ட சங்கத்திடம் ஒப்படைப்பது.
தோழர் எஸ்.ராமலிங்கத்திற்கு பணிநிறைவு பாராட்டு....
நமது மாவட்ட சங்கத்தின் அமைப்பு செயலராக மிகவும் துடிப்புடன் ஒரு வாலிபனாக,தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் அருமைத்தோழர் எஸ்.ராமலிங்கம் கடந்த 31.08.2013அன்று இலாக்காவில்தான் பணிநிறைவு பெற்றார் .ஆனால் நமது சங்கப்பணியை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்,என  அனைவரும் மனதார மாவட்டசெயற்குழுவில் பாராட்டுரை வழங்கினர். தோழர் எஸ்.ராமலிங்கம் பணிஓய்வு காலம் சிறக்க மாவட்ட சங்கம் உளப்பூர்வமாக,தோழமையுடன் வாழ்த்துகிறது.

 

 
 
 
 
 
 ---என்றும் தோழமையுடன் .எஸ்.சூரியன்,மாவட்டசெயலர்.