இந்திய சுதந்திரப் போராட்டம் கனல்பறக்கும் தீவிரத்துடன் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து தேசத்தை மீட்பதற்கான போராட்டத்தில் மிக உத்வேகத்துடன் பங்கேற்பதற்காக மிர்தாஜ் முகமத்கான் என்ற16 வயதுக்காரர் பெஷாவரிலிருந்து காஷ்மீருக்கு வந்தார். தேச விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்யத் தயாரான அந்த இளம் வாலிபனிடம் அப்போது இருந்தது மனத்துணிவு மட்டுமே.மக்களிடையே அந்த மிர்தாஜ் முகமத்கானின் சுதந்திர உரை கனல்பறக்கும். அதனால், அவர் பிரிட்டிஷ் அதிகாரிகளின் கண்காணிப்புக்குள்ளானார். நாடு விடுதலை பெற்ற பிறகுஅவர் தில்லியிலேயே நிரந்தரவாசியாகிவிட்டார். சகோதரர்கள் இறந்துவிட்ட செய்தியறிந்ததும் பாகிஸ்தானுக்குப் புறப்படுவதற்கான அனுமதிக்கு இரண்டுமுறை விண்ணப்பித்திருந்தார். கருப்புப் பட்டியலில் உள்ள சுதந்திரப் போராளிக்கு பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.அந்த மிர்ஜாத் முகமத்கானின் மகன்தான் பாலிவுட் திரையுலக மன்னர் (கிங் கான்)எனப் புகழப்படுகிற ஷாருக்கான். நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் ஐஎன்ஏ என்றழைக்கப்படும் இந்திய தேசிய இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்த ஷா நவாஸ்கானின் வளர்ப்பு மகள்தான் ஷாருக்கானின் தாயார் லத்தீஃப் பாத்திமா.அடிமை இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டஓர் இளம் வீரன் தன் தந்தை என்பதில் ஷாருக்கான் சுயகர்வப்படுவது உண்டு. பாகிஸ்தானுக்குப் போய்விடும்படி ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஷாருக்கானை மிரட்டியபோது, இந்த நாட்டில் வாழ்வதற்கான அதிக உரிமை எனக்குத்தான் உள்ளது என்று அவர் மனஉறுதியுடன் சொன்னது,தான் இந்தப் பாரம்பரியத்தின் உண்மையான வாரிசு என்பதால்தான். பாகிஸ்தான் செல்ல அனுமதி கிடைத்த போது, அங்கே பார்க்க வேண்டியவர்கள் யாரும் இல்லையெனத் தந்தை தன்னிடம் சொன்னதை மறக்கவில்லையென்று, இனி வெளியிடவுள்ள “20 இயர்ஸ் இன் ஏ டெக்கேட்” என்ற தனது சுயசரிதையில் ஷாருக்கான் நினைவுப்படுத்துகிறார். இந்தியா-பாகிஸ்தான் எல்லையின் வறண்ட தரிசு பூமியில் மகனையும் உடன் அழைத்துக் கொண்டு நடந்து செல்லும்போது, தந்தை மிர்தாஜ் முகமத்கான் தங்கள் குடும்பக் கதையைச் சொல்லக் கேட்டிருக்கிறார் ஷாருக்கான். அப்போது ஷாருக்கானுக்கு வயது 14.1980-இல் தங்கள் வீட்டைப் பார்ப்பதற்குச் சென்ற அந்தப் பயணத்தின் நினைவுகள் இன்று50 வயதுக்காரராகிய ஷாருக்கானின் மனதைவிட்டு நீங்கவில்லை. இவரின் தந்தைக்கு சமஸ்கிருதம் உள்ளிட்ட ஆறுமொழிகள் தெரியும். எம்.ஏ., எல்.எல்.பி. பட்டங்கள் பெற்றவர். நேருஜியின் குடும்பத்துடன் நெருக்கமான தொடர்பு உண்டு. ஆனால் அரசியலில் ஈடுபட அவருக்கு விருப்பமில்லை. அதேசமயம், அவருடன் நெருக்கமாக இருந்த பழைய நண்பர்கள் பலரும் அமைச்சர்களாகவும் எம்.எல்.ஏ.க்களாகவும் ஆனார்கள்.வியாபாரத்தில் கூட்டாளிகள் ஏமாற்றியதால் வியாபாரம் நஷ்டமாகிப்போனது. முடிவில் வாழ்க்கையை நடத்திச் செல்வதற்காக ஒரு சிறிய டீக் கடை ஆரம்பித்தார் மிர்தாஜ் முகமத்கான். வாடகை கொடுக்கமுடியாததால் பலமுறை இடத்தை மாற்றினார். ஷாருக்கானின் 15-வது வயதில் தந்தை புற்றுநோயினால் இறந்து விட்டார். ஷாருக்கானின் தந்தைக்கும் தாயாருக்கும் மத விஷயத்தில் பிடிவாத குணமில்லை. “குர்ஆன் வாசிக்க வேண்டுமென்று தோன்றினால் குர்ஆன் வாசிப்போம்; பைபிள் வாசிக்க வேண்டுமென்று தோன்றினால் பைபிள் வாசிப்போம்; மகாபாரதம் வாசிக்க வேண்டுமென்று தோன்றினால் மகாபாரதம் வாசிப்போம் ”பெற்றோர்களின் இந்தச்சொல்தான் தனது மதநல்லிணக்க நிலைக்கு அடிப்படை என்கிறார் ஷாருக்கான். எங்கள் குழந்தைகளாகிய ஆர்யனையும், சுகானாவையும், அப்ராமினையும் இது போலவே வளர்க்கவேண்டுமென்பதே என் விருப்பமும் என் மனைவி கௌரியின் விருப்பமுமாகும் என்கிறார்.
Monday, 9 November 2015
பெருமைக்குரிய செயல் செய்தார் பீகார், கேரள வாக்காளர்கள்...
“பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண் டாடுவார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி,பாஜக தவைர் அமித் ஷா இருவரும் சொல்லிப் பார்த்தார்கள். அதன் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு நிராகரித்த பீகார் மக்கள் இந்தியா முழுவதும் கொண்டாடுவதற்கான மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கு அமோக வெற்றியை அளித்திருக்கிறார்கள். அதே போல், கேரளத்தின் உள்ளாட்சித் தேர்தலில், இனி அங்கேயும் பாஜகஅணிவகுப்புதான் என்று அவர்களாகச் சொல்லிக் கொண்டதையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முந்தைய வெற்றிஉள்ளாட்சித் தேர்தலில் தொடரவே செய்யும் என்று சொல்லப்பட்டதையும் ஒதுக்கித் தள்ளியமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்குப் பெரும் வெற்றியை வழங்கி யிருக்கிறார்கள்.
ஒரு மாநிலத்தின் தேர்தல் முடிவு தேசிய அரசியலில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பாஜக-வினர் சொல்லிக்கொண்டாலும், அவர்கள் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கிறார்கள். தில்லி சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலைப் போலவே பீகாரில் அக்கட்சிக்குக் கிடைத்துள்ள தோல்வி நாடு தழுவிய அளவில் சிந்தனைக்கும், விவாதத்திற்கும் உரியதாகும்.அமெரிக்காவின் மூடி’ஸ் ஆய்வு நிறுவனம், இந்தியாவில் மோடி அரசால் நிறைவேற்ற முடியாம லிருக்கும் நிலப்பறிப்பு சட்டம், ஜிஎஸ்டி சட்டம், தொழிலாளர் உரிமைகளை ஒழித்துக்கட்டும் சட்டம் போன்றவற்றை நிறைவேற்ற, பீகார் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, நாடாளுமன்ற மாநிலங்களவையில் தனது பலத்தை பெருக்கிக்கொண்டாக வேண்டும் என்று அறிக்கையளித்தது. அதற்காகவே, பெரும்பான்மை மதம் சார்ந்த மக்களின் வாக்குகளை இழுப்பதற்காக, மாட்டுக்கறி எதிர்ப்பு கிளறிவிடப்பட்டது. பிரதமர் மோடியே அங்கே தனது பிரச்சாரங்களில், இட ஒதுக்கீட்டின் பலனை “ஒரு குறிப்பிட்ட சமூகம்” அனுபவிக்க விடமாட்டோம் என்று கிளப்பிவிட்டார். அவர் யாரைக் குறிப்பிட்டார் என்பது வெளிப்படை. இப்படி, மத உணர்வு சார்ந்து பிளவுபடுத்த முயன்றதைத்தான் ஏற்க மறுத்திருக்கிறார்கள் பீகார் மக்கள்.கேரள உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்த வரையில், அதிகார பலத்தையும் பண பலத்தையும் பயன்படுத்தியது காங்கிரஸ். அங்கேயும் மதவெறிப் பிளவு சூழ்ச்சிகளை அரங்கேற்ற முயன்றனர் பாஜகவினரும் அவர்களது பின்புலத்தில் இருப்போரும். பஷீர் என்ற பெயருள்ளவர் இராமாயணம் பற்றி பத்திரி கையில் எழுதுவதா என்பது போன்ற விவகாரங்கள் ஊதிவிடப்பட்டன. இவ்விரண்டு கட்சிகளின் திட்டங்களையும் கிராம ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய அனைத்து மட்டங் ளளகளிலுமான உள்ளாட்சித் தேர்தலில் கேரள மக்கள் நிராகரித்துவிட்டார்கள்.இவ்விரண்டு முடிவுகளும் ஜனநாயக, மதச்சார்பின்மை மாண்புகளை முன்னெடுப்போருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதே வேளையில், தோல்வியை விழுங்கிய பாஜகவும், அதனை இயக்குகிற ஆர்எஸ்எஸ் தலைமை பீடமும், தமது கொள்கையை மாற்றிக்கொள்வதற்கு மாறாக, மேலும் நுட்பமான வழிகளில் மதவெறி, சாதியவாத அரசியலைக் கூர்மைப்படுத்த முயல்வார்கள். இடதுசாரி, ஜனநாயக சக்திகள் இந்த வெற்றியை மென்மேலும் வளர்த்தெடுக்க, விழிப்போடும் விரிவாகவும் களப்பணிகளில் ஈடுபட்டாக வேண்டும்.
Sunday, 8 November 2015
வீரமாமுனிவர் நவம்பர் 8, 1680 பிறந்த நாள் . . .
நவம்பர்
8, 1680 பிறந்த வீரமாமுனிவர் .இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் -கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine
Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ
மதத்தைப் பரப்பும் நோக்கில்,1709ஆம் ஆண்டு இயேசுசபைப் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.
இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக்
கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி"
என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.
வருந்துகிறோம் . . . கண்ணீர் அஞ்சலி . . .
அருமைத் தோழர்களே ! நமது மதுரை பொது மேலாளர் அலுவலக CASH செக்சனில் பணிபுரிந்த N.முரளிதரன், TSO இயற்க்கை எய்திவிட்டார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கு இறுதி சடங்கு 08.11.15 காலை 10 மணிக்கு மேல் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.
வீட்டு விலாசம்.
சர்வேயர் காலனி ,
3வது தெரு,
OPP: லலிதா ஸ்டோர்
மதுரை
ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் & சம்பளம் பட்டுவாடா...
அருமைத் தோழர்களே ! நமது மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் , கேபிள், வாட்சுமேன் மற்றும் கவுஸ் கீப்பிங் ஆகிய பகுதிகளில் பணிபுரியும் அனைவருக்கும் போனஸ் & சம்பளம் பட்டுவாடா செய்வதற்கு நமது மாவட்ட சங்கம் தொடர்முயர்ச்சியை எடுத்து வந்தது அதன் விளைவாக நமது மதுரை மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் போனஸ் பட்டுவாடா ஏற்கனவே,செய்யப்பட்டுவிட்டது. ஒருபகுதி ஊழியர்களுக்கு மட்டும் அக்டோபர் -2015 க்கான சம்பளம் நிலுவையிருந்தது. நாம் உடனடியாக மாவட்ட நிர்வாகத்துடன் & ஒப்பந்தகாரர் நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையில் எஞ்சியிருந்த வர்களுக்கும் 09.11.15 அன்று சம்பளமும் வழங்கப்படும்.... இதன்மூலம் நமது மாவட்டத்தில் அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் சம்பளம் & போனஸ் நிறைவுற்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ---வாழ்த்துக்களுடன், S. சூரியன் ---D/S-BSNLEU.BSNLEUவின் தோழமை வாழ்த்துக்கள் . . . உரித்தாகட்டும்.
Saturday, 7 November 2015
1917 நவம்பர் 7ல் ஆகா என்று எழுந்த `யுகப் புரட்சி’. . .
1917 நவம்பர் 7ல் நடைபெற்ற ரஷ்யப் புரட்சி உலகையே மாற்றி அமைத்த புரட்சி. அதனால்தான் நமது மகாகவி பாரதியும் இதனை யுகப் புரட்சி என வர்ணித்தார். புரட்சி நடைபெற்ற காலத்தில் ரஷ்யாவின் நிலைமைகளை அறிந்து கொள்வது அவசியம். ஐரோப்பா கண்டத்திலேயே மிகவும் பிற்போக்கான அரசியல் பொருளாதாரம், கலாச்சாரம் உள்ள நாடாக ரஷ்யா விளங்கியது. முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் ஜார் மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்ற பூமி அது. அங்குள்ள மத ஸ்தாபனங்கள் ஜார்களின் ஆட்சியை தாங்கும் தூண்களாக இருந்தன. அவர்களின் கைக்கூலியாகவும் செயல்பட்டன. ரஷ்ய தேசம் பரிசுத்த ரஷ்யா என்றும் அழைக்கப்பட்டது. ஜார் மன்னர்கள் சிறுவெண்பிதா என்று அழைக்கப்பட்டனர்.1914 - 18 முதல் உலக மகா யுத்தம் ஜார் ருஷ்யாவிற்கும், ஜெர்மனிக்கும் நடைபெற்ற யுத்தத்தில் ரஷ்ய மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகினர். விவசாயிகள், தொழிலாளர்கள் குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கில் போர்முனைக்கு அனுப்பப்பட்டனர். இவர்களுக்கு முறையான பயிற்சியுமில்லை, உரிய ஆயுதங்களும் வழங்கப்படவில்லை; நல்ல உடுப்புகள் கூட இல்லாமல் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறு அனுப்பப் பட்டவர்கள் எல்லாம் போர்க்களத்தில் மாண்டு போனார்கள். வறுமை தாண்டவமாடியது. சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து போனது. எப்போது யுத்தம் நிற்கும்? நமது துன்ப துயரங்கள் தீர்வது எப்போது? என மக்கள் கவலையுடனும், கோபத்துடனும் இருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி யுத்தத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தது. இந்த யுத்தம் நாடு பிடிக்கும் பேராசை யுத்தம். ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடைபெறும் யுத்தம். மக்கள் பங்கேற்க வேண்டாம் என பிரச்சாரம் செய்தனர். உணவு வேண்டும், சமாதானம் வேண்டும், போரை நிறுத்து எனும் முழக்கம் நாடெங்கும் ஒலித்தது. 1917 மார்ச் 8 அன்று பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் பஞ்சாலையில் வேலை செய்த பெண் தொழிலாளர்கள் வேலையை நிறுத்திவிட்டு வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதை தொடர்ந்து மற்ற அனைத்து தொழில்களில் உள்ள தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கு பெற்றனர். உணவு வேண்டும், அமைதி வேண்டும், எதேச்சதிகாரம் ஒழிக என்று முழக்கங்களை எழுப்பினர்.ஜாரின் கசாக்கு துருப்புகள் போராட்டத்தை அடக்க களத்தில் இறக்கப்பட்டன. ஆனால் துருப்புகள் போராடும் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ய மறுத்தனர். போராட்டக்காரர்கள், குறிப்பாக பெண்கள், துருப்புகளிடம் பேசி தன்வயப்படுத்தினார்கள். படையாட்களும் தொழிலாளர்களுடன் சேர்ந்து கொண்டனர். பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் தொடங்கிய புரட்சி மாஸ்கோ உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கும் பரவியது.உணவு வேண்டும், நிலம் வேண்டும், யுத்தம் கூடாது, சமாதானம் வேண்டும் எனும் பெரும் முழக்கங்களுடன் தொழிலாளர்கள், விவசாயிகள் பெரும் திரளாக திரண்டு நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்ச் 12இல் தொழிலாளர்கள், இராணுவத்தினர் சேர்ந்து மந்திரிகள் பலரை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஜார் மன்னன் ஓட்டம் பிடித்தான். தொலை தூரத்திற்கு சென்று பதுங்கிக்கொண்டான்.தொழிலாளர்கள், இராணுவ வீரர்கள், விவசாயிகள் அடங்கிய சோவியத்துகள் அமைக்கப்பட்டது. ஜார் ஆட்சி வீழ்ந்தது. 300 ஆண்டுகால ஜார் மன்னர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்தது.புரட்சி நடைபெற்ற காலத்தில் முக்கிய தலைவர்கள் நாடு கடத்தப்பட்டோ அல்லது தலைமறைவாகவோ வெளியில் இருந்தனர். லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார். ஸ்டாலின் சைபீரியாவில் இருந்தார். புரட்சி நடைபெற்ற தகவல் தெரிந்த பிறகே நாடு திரும்பினர்.ஏப்ரல் 17ஆம் தேதி லெனின் ரஷ்யா வந்து சேர்ந்தார். நிலைமைகளை ஆய்வு செய்தார். தொழிலாளர் வர்க்கம் புரட்சியை நடத்தி, ஆட்சி அமைக்கும் உரிமையை முதலாளித்துவ வர்க்கத்திடம் ஒப்படைத்து நிலைமையின் விபரீதத்தை தோழர்களிடம் விளக்கினார். இடைக்கால அரசாங்கம் யுத்தத்தை தொடர்ந்து நடத்தியது. ஜார் ஆட்சி போன பின்பும் நிலைமைகளில் மாற்றம் இல்லை. இடைக்கால அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலு வடைந்தது.
தொழிலாளர்கள், விவசாயிகள் ஒற்றுமை வலுவடைந்தது. சோவியத்துகளில் போல்ஷ்விக்குகளின் பலம் பெருகியது. தொழிற்சாலைகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கே! நிலங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கே! அதிகாரம் அனைத்தும் சோவியத்துகளுக்கே! என முழக்கங்களை எழுப்பிக்கொண்டு மக்கள் வீதிகளில் திரண்டனர். பெட்ரோகிராடில் அகில ருஷ்ய சோவியத் காங்கிரஸ் கூட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற்றன. ஒவ்வொரு கூட்டமும் அதற்கு முந்தைய கூட்டங்களை விட தீவிரத்தன்மை வாய்ந்ததாக அமைந்தது.நவம்பர் 7 அன்று அனைத்து ருஷ்ய சோவியத்துகள் மாநாடு பெட்ரோகிராடு நகரில் கூட்டப்பட்டது. அதே தேதியில் புரட்சியை நடத்திடவும் திட்டமிடப்பட்டது. திட்டமிட்டபடியே நவம்பர் 7இல் புரட்சி தொடங்கப்பட்டது. தொழிலாளர்கள், விவசாயிகள், செம்படையினர், ராணுவத்தினர்கள் இடைக்கால அரசாங்கத்தின் கேந்திரமான அலுவலகங்களை கைப்பற்றிக் கொண்டனர். இடைக்கால அரசாங்கம் வீழ்ந்தது. மார்ச் 8இல் தொடங்கி மக்கள் தொடர்ந்து புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாலும் முன்கூட்டியே சரியாக திட்டமிடப்பட்டதாலும் புரட்சி பெரிய அளவில் எதிர்ப்பின்றியே வெற்றி பெற்றது.அதுவரையில் தலைமறைவாக இருந்து புரட்சி நடவடிக்கைகளை இயக்கி வந்த லெனின் நவம்பர் 8 அன்று அகில ருஷ்ய சோவியத் காங்கிரஸ் நடைபெற்ற ஸ்மால்னி கழக கட்டிடத்தில் தோழர்கள் முன் தோன்றினார். அண்டமே அதிரும் அளவிற்கு மக்கள் கரவொலி எழுப்பி எழுச்சி முழக்கங்களுடன் வரவேற்றனர்.லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது.
நவ-7, சர்-சி.வி. ராமன் பிறந்த தினம் . . .
உலகம் போற்றும் இந்திய அறிவியல் மேதை சர். சி. வி. ராமன் என்று அழைக்கப் பட்ட சந்திரசேகர வெங்கட ராமன் பிறந்தநாள்.இன்று. நவம்பர் 7, 1888, திருச்சிராப்பள்ளி நகர் அருகே திருவானைக்காவலில் பிறந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றபோது அவருக்கு வயது 18 மட்டுமே. ஐ.எஃப்.எஸ். தேர்வில் இந்தியாவிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.‘ஒரு ஊடகத்தின் உள்ளே ஒளி நுழையும்போது ஒளிச் சிதறல் ஏற்பட்டு வெவ்வேறு அலை நீளங்களை உடைய புதிய நிறக்கதிர்கள் தோன்றுகின்றன. ஒளி ஊடுருவும் தன்மைக்கு ஏற்ப உண்டாகும் வேறுபாடுகளால் நிறங்கள் தோன்றுகின்றன என்று கண்டறிந்தார். ‘ராமன் விளைவு’ என அறிவியல் உலகம் போற்றும் இந்த அரிய கண்டு பிடிப்புக்காக 1930-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.வெறும் 200 ரூபாய் செலவில், தானே உருவாக்கிய கருவியைப் பயன்படுத்தி அறிவு சார் பெருமக்கள் முன்னிலையில் DEMO செய்து இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டினார்.. வெளிநாடு செல்லாமல் இந்தியாவில் மட்டுமே படித்த ஒருவர் நோபல் பரிசு பெற்றது அதுவே முதல் முறை. அவரது கண்டு பிடிப்பு இன்றளவும் உலக இயற்பியல் வல்லுனர்களால் வியந்து பாராட்டப் படுகிறது.
Friday, 6 November 2015
Subscribe to:
Posts (Atom)







