Wednesday, 6 January 2016

சீர் மிகு 5-1-2016 மதுரை செயற்குழு கூட்டம் . . .2

சீர் மிகு 5-1-2016 மதுரை செயற்குழு கூட்டம் . . .1

சீர் மிகு 5-1-2016 மதுரை செயற்குழு கூட்டம் . . .

அருமைத் தோழர்களே !  நமது மதுரை மாவட்ட 5.1.2016 செயற்குழு கூட்டம் நமது மாவட்ட தலைவர் தோழர். சி. செல்வின் சத்தியராஜ் தலைமையில் மிக சீரும் சிறப்பாக, மதுரை தல்லாகுளம் CSC/TRCயில்  நடைபெற்றது.
செயற்குழு மறைந்து தலைவர்.தோழர்.எ.பி. பரதன், பதான்கோட்டில் உயரிழந்த ராணுவ வீரர்களுக்கும், முன்னாள் மாநிலச் செயலர் தோழர்.எ.சி. ஷா மறைவிற்கும், கடலூர் மற்றும் சென்னை வெள்ளத்தில் உயரிழந்த அப்பாவி மக்களுக்கும் அஞ்சலி செலுத்தியது.
செயற்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த மாநில உதவிச் செயலர் தோழர்.எம். முருகையா துவக்க உரையுடன், மாவட்ட செயற்குழுவை  வழி நடத்தினார் . மாநில சங்க நிர்வாகிகள் தோழர்.எஸ். ஜான்போர்ஜியா, பி . சந்திர சேகர்  ஆகிய இருவரும் சிறப்புரை  நிகழ்த்தினார்கள் .
மாவட்ட செயலர் எஸ். சூரியன் சமர்ப்பித்த ஆய்படு பொருள் அறிக்கை மீதான விவாதத்தில் 24தோழர்கள்ஆரோக்கியமான, செழுமையான   கருத்துக்களை முன்வைத்தனர். இறுதியாக மாவட்ட செயற்குழு , பல நல்ல முடிவுகளை எடுத்தது.
*  மதுரை மாவட்டம் எப்பொழுதும் போல் முன்மாதிரியாக செயல்பட்டு, அதிகப்படியான  வாக்குகளை பெற்று முதலிடம் வகிக்கும்.
* 7 வது  தேர்தலை சந்திப்பதற்கான அனைத்து திட்டங்களும் தீட்டப்பட்டு, ஒவ்வொரு பூத் வாரியாக வாக்குகளுக்கான எல்லை திட்டமிடப்பட்டுள்ளது.
*  100 நாட்டகள் "புன்னகையுடன் " சேவை மத்திய, மாநில FORUM செயல் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
*  வெள்ள சேத மீட்பு பணிகளில் நமது சங்கம் ஆற்றிய பங்கை  வெகுவாக செயற்குழு பாராட்டியது.
*  மாநில சங்கம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டபடி மதுரை மாவட்ட பிரச்சனையை தாமதம் இன்றி தீர்த்து வைக்க வேண்டும் எனவும் செயற்குழு தீர்மானித்தது. 

Tuesday, 5 January 2016

TTA-பயிற்சி முடித்து வந்த மூன்று பேர் TTA நியமனம்...

அருமைத் தோழர்களே ! நமது மதுரை மாவட்டத்திலிருந்து  மொத்தம் 5 பேர் TTA தேர்வு பெற்று பயிற்சிக்கு  சென்றிருந்தனர். அதில், 3 பேர்  பயிற்சி நிறைவு செய்து 4-1-2016 அன்று வந்தார்கள். அவர்களுக்கு உடனடியாக TTA நியமனம் செய்யப்பட்டுள்ளது.
1. தோழர். நாராயாணன்  - நிலக்கோட்டை
2. தோழர். சேகர்  - உத்தமபாளையம் 
3. தோழர். ராஜேந்திரன்  - கொடைக்கானல் 
மேலும், எதிர்வரும் 23-1-2016 அன்று இருவர் TTA பயிற்சி  முடித்து வருகின்றனர், அவர்கள் வந்த பின்  TTA நியமனம் இருக்கும். அனைவரின் புதிய பனி சிறக்க நமது வாழத்துக்கள் ...

சிந்தனை . . . துளிகள் . . .


திருமணமாகி 45 நாட்கள்தான்... பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங் ...

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஞ்சாப் மாநிலம் பதன் கோட்டில் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களில் ஹரியானாவின் அம்பாலாவைச் சேர்ந்த இளம் வீரர் குருசேவக்சிங்கும் ஒருவர்.. திருமணமாகி 45 நாட்களிலேயே தாய்நாட்டுக்காக தன் உயிரை அர்ப்பணித்த அந்த மாவீரனை பெற்றதற்காக பெருமிதம் கொள்கிறோம் என நெகிழ்கின்றனர் குருசேவக்சிங்கின் பெற்றோர்... ஹரியானா மாநிலம் அம்பாலா அருகே உள்ளது ஹர்நாலா கிராமம். இது பஞ்சாப் மாநில எல்லையையொட்டியது. இக்கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி சுசாசிங் தன் 2 மகன்களையும் நாட்டுக்காக ராணுவத்துக்கு அர்ப்பணித்துவிட்டார். சுசாசிங்கின் இளைய மகன் குருசேவக்சிங் தான் பதன்கோட் விமான படை தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம்அடைந்தவர்.
இளம்வயதில் இருந்தே அறிவுக்கூர்மை படைத்த குருசேவக் சிங், விமானப் படையில் சேருவதற்கான தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர். குருசேவக்சிங் தமது வழிகாட்டியாக மாவீரன் பகத்சிங்கை ஏற்றுக் கொண்டவர். பெங்களூருவில் பொறியியல் படிப்பை முடித்து கடந்த 6 ஆண்டுகளாக விமானப் படையில் கருடா கமாண்டோ பிரிவில் கார்ப்போரல் தரத்தில் சேவையாற்றி வந்தார் குருசேவக் சிங். அவருக்கு 45 நாட்களுக்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றது. தன் மகனின் வீரமரணம் குறித்து கூறிய சுசாசிங், என்னுடைய மகன் இந்த நாட்டுக்கக உயிரைத் தியாகம் செய்திருக்கிறான்.. இதற்காக நான் பெருமிதப்படுகிறேன். இது அவனுடைய கடமை. எங்களுக்கு இது துயரமான சம்பவமும் கூட.. என்னுடைய மூத்த மகனும் நாட்டுக்காக சேவையாற்ற ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். என்னுடைய மகன் தன்னுடைய வழிகாட்டியாக, முன்னோடியாக பகத்சிங்கைதான் பின்பற்றினார் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். குருசேவக்சிங்கின் மனைவியான 26 வயது ஜஸ்பிரீத் கவுர் கூறுகையில், வெள்ளிக்கிழமை மாலை அவருக்கு நான் போன் செய்தேன். ஆனால் என்னுடைய போனை கட் செய்துவிட்டு பின்னர் அழைப்பதாக எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தார். அதன் பின்னர் நான் தூங்க சென்றுவிட்டேன்... ஆனால் கடைசிவரை எனக்கு போனே செய்யாமல் அவர் உயிரிழந்துவிட்டார் என கண்ணீர்மல்க கதறினார். திருமணமாகி 45 நாட்கள்தான் ஆகிறது என்பதால் திருமணத்தின் போது அணிவித்திருந்த வளையல் களைத்தான் இன்னமும் ஜஸ்பிரீத் அணிந்திருக்கிறார்... குருசேவக்சிங்கின் வீர மரணத்தை அவரது நண்பர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்த போது அதை நம்ப முடியாமல் டெலீட் செய்யுமாறு முதலில் கூறியிருந்தேன்... பின்னர் அவரது சகாக்களிடம் பேசிய போது அவர் பாதுகாப்பாக இருப்பதாக கூறினார்கள்.. ஆனால் நேற்று காலைதான் இந்த துயரச் செய்தி எனக்கு வந்தது என்கிறார் கதறல் அடங்காமல்... மனைவி ஜஸ்பிரீத்தின் பிறந்த நாளான பிப்ரவரி 5-ந் தேதியை கொண்டாடுவதற்காக ஜனவரி 13 முதல் பிப்ரவரி 6-ந் தேதி விடுப்புக்கும் குருசேவக்சிங் விண்ணப்பித்திருந்திருக்கிறார் என்பதையும் குடும்பத்தினர் கண்ணீருடன் நினைவுகூறுகின்றனர்... . இவ் வீரனுக்கு மதுரை  மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் தன் அஞ்சலியை செலுத்துகிறது ..

செய்தி சிதறல்கள் . . . மாநில சங்க சுற்றறிக்கை...


Monday, 4 January 2016

வருமான வரிதுரையிடமிருந்து நமது BSNL 10,000 கோடி ரூபாய் நிதி திரும்ப பெற உள்ளது ...

அருமைத் தோழர்களே ! கூடிய விரைவில், நமது BSNL நிறுவனம் 10,000 கோடி ரூபாய், வருமான வரி துறையிடமிருந்து, திரும்ப பெற உள்ளது. புத்தாண்டு வாழ்த்து சொல்ல சென்ற போது, BSNL CMD, நமது BSNLEU பொது செயலர் தோழர் P. .அபிமன்யு அவர் களிடம்  இந்த தகவலை தெரிவித்துள்ளார்வருமான வரி துறை  நமது BSNL நிறுவனத்திடமிருந்து, சுமார் 10,000 கோடி ரூபாய் அதிகமாக வரி வசூல் செய்துள்ளது. காரணம், DoT நமது வரவு செலவை 15 ஆண்டுகளாக முழுமையாக தணிக்கை செய்யவில்லைஇரண்டு நாள் வேலை நிறுத்த சமயத்தில், குறிப்பாக01.05.2015 அன்று DoT செயலருடன் நடைப்பெற்ற பேச்சு வார்த்தையில், FORUM சார்பாக ஏற்கனவே நாம் இந்த கோரிக்கையை வலியுறுத்தினோம்முதல் தவணையாக 891 கோடி ரூபாய் BSNL பெற உள்ளது என நமது CMD தகவல் தெரிவித்தார்...

Sunday, 3 January 2016

05-01-2016 மாவட்ட செயற்குழுவிற்கான Spl. C.Lகடிதம் ...


தோழர் A.B.பரதன் அவர்களுக்கு செவ்வணக்கம் . . .

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலரும், AITUC சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலருமான தோழர் A.B. பரதன் தனது 92வது வயதில் புது டெல்லியில் உள்ள மருத்துவ மனையில் 02.01.2016 சனிக்கிழமை இரவு 8.13 மணிக்கு மரணமடைந்தார்.
1924ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி பிறந்த தோழர் பரதன் மகராஷ்டிரா மாநில சட்ட மன்றத்திற்கு 1957ம் ஆண்டு தேர்ந்தேடுக்கபட்டார். மக்கள் பிரச்சனைக்காக , சட்ட மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் சிறப்பாக வாதாடிய, போராடிய தோழர் பரதன் மறைவு இந்திய தொழிற் சங்க இயக்கத்திற்கும், உழைப்பாளி மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவிற்கு மதுரை BSNLEU மாவட்ட சங்கம் தனது  அஞ்சலியை  உரித்தாக்குகிறது.

Saturday, 2 January 2016

01-01-2016 முதல் IDA 4.5 ஆக உயர்வு . . .

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!



1.1.2016 முதல் கூடுதலாக 4.5%  பஞ்சப்படி உயர்ந்துள்ளது.இதுவரையில் நாம் பெற்றுவந்த  IDA 107.9 சதமாகும். இனி நமக்கு  112.4% கிடைக்கும்.

பொதுத்துறை காப்போம் . . .சுதந்திர போராட்ட வீரர் தோழர்.என். சங்கரய்யா உரை ..

திண்டுக்கல் நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக நடைபெறும் 15வது மாநில மாநாட்டையொட்டி ஒரு மகத்தான இளைஞர் பேரணியை நடத்தி உள்ளனர் . . .சுதந்திர போராட்ட வீரர் தோழர்.என். சங்கரய்யா.94 வயதிலும் அதே கர்ஜனை; சிம்மக் குரலில் வசீகரிக்கப்பட்டு மொத்த இளைஞர் கூட்டமும் அந்தப் பேச்சில் கட்டுண்டு கிடந்தது... தோழர் என்.சங்கரய்யா... இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்; விடுதலைப் போராட்ட வீரர்... திண்டுக்கல் மண்ணில் வியாழனன்று இரவு நடந்த அந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் திரண்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர் படையை கண்டு, உணர்ச்சி பொங்க, இந்தப் படை இருக்கும் போது எனது நம்பிக்கை பலமடங்கு பலமாகிறது என கண்கள் பனிக்க... கம்பீரமாக உரையாற்றினார்...
 பொதுத்துறை காப்போம் . .
இந்திய பெருமுதலாளிகளுடைய தாராளவாதத்தை எதிர்க்க வேண்டும். சென்னையில் வெள்ளம் வந்த போது இணையத்தளம் ஸ்தம்பித்தது. பிஎஸ்என்எல் என்ற பொதுத்துறை நிறுவனம் தான் அந்த பிரச்சனையை சரி செய்தது. மக்கள் அவதிப்பட்டபோது எந்த ஆம்னி பஸ்களும் வரவில்லை. அரசுப் பேருந்து தான் வந்தது. போக்குவரத்தை சீர்செய்தது. எனவே தான் இந்த நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்றார் .

தமிழகத்தில் ஊழலை வேரறுக்க நடிகை ரோகிணி யோசனை . . .

இளைஞர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்று அதிகார மையங்களில் அமர்ந்தால் ஊழல்களை வேரறுக்கலாம் என, திண்டுக்கல்லில் நடிகை ரோகிணி பேசினார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில மாநாடு திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று மாலை பிரதிநிதிகள் மாநாடு நடந்தது. மாநில தலைவர் முத்துக்கண்ணன் தலைமை வகித்தார்.பாலபாரதி எம்.எல்.., வரவேற்றார். மாநாட்டில் நடிகை ரோகிணி பேசியதாவது: சினிமாவைத் தாண்டி சமூகத்தை பார்க்கும் போது உண்மையான சில விஷயங்கள் உள்ளன. சினிமா மட்டுமே வாழ்க்கை இல்லை. சமூகத்தில் ஏற்பட்டுள்ள அநீதிகளுக்கு பேராட இது போன்ற மாநாடுகள் தான் உதவுகின்றன.தற்போது கல்விக்காகவும், வேலைக்காகவும் போராட வேண்டிய சூழல் உள்ளது. சமூகத்தை மாற்றக்கூடிய வலிமை இளைஞர்களின் கையில்தான் உள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மாணவர்கள் அதிகளவில் பங்கேற்று வெற்றி பெற்று அதிகார மையத்தில் அமர்ந்தால் ஊழல்களை வேரறுக்கலாம், என்றார்.

Friday, 1 January 2016

மதுரை மாவட்ட BSNLEU புத்தாண்டு வாழத்துக்கள் . . .

மழை வேண்டும் . . . வெள்ளம் வேண்டாம்  . . .   என்றும் தோழமையுடன்
எல்லோருக்கும் . . . எல்லாமுமாய்  . . .                    எஸ். சூரியன்
புத்தாண்டு  . . . மலரட்டும் . . .                                         மாவட்ட செயலர் -BSNLEU
புத்தாண்டில்  . . . புதிய நம்பிக்ககையுடன்  முன்னேறுவோம்  .  .  ,