Sunday, 8 May 2016

May-8,அபூர்வ மனிதன் வி.பி.சிந்தன் ! நினைவு நாள்...

மே 8-ந் தேதி தோழர் வி.பி. சிந்தன் அவர்களின் நினைவு நாள். 1987ம் ஆண்டு இதே நாளில் அவர் மறைந்தார்.அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் இந்திய மார்க்சிய இயக்கத்தின் முதுபெரும் தலைவர் பி.டி. ரணதிவே அவர்கள்தோழர் வி.பி. சிந்தன் ஒரு அபூர்வ மனிதன்” என்று புகழ்ந்து, போற்றி தனது அஞ்சலியைத் தெரிவித்தார்.விடுதலைப் போரின் தாக்கத்தில் தேசிய இயக்கத்தின் போராளியாய் களத்திற்கு வந்த இளம் மாணவன் தான் மறையும் போது தனி உயரத்தில் நின்ற வி.பி. சிந்தன் என்கிற ஆளுமை. “போராட்டமே வாழ்க்கையாய்” என்ற வார்த்தைகளுக்கு உண்மையான இலக்கணமாக அவரது வாழ்க்கை அமைந்தது.ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தின் கேரளப் பகுதியில் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து கம்யூனிஸ்ட்டாய் சிந்தன் பரிணமித்துவிட்டார். அவரைப் பார்த்து இயக்கத்தின் தேவை உன்னை தமிழ்ப்பகுதிக்கு அழைக்கிறது; இயக்கம் உன்னிடம் எதை எதிர்பார்த்தாலும் அதைத் தருகிற மார்க்சிய புரிதலும் அர்ப்பணிப்பும் உனக்கிருக்கிறது; எனவே உடனே சென்னைக்கு புறப்படு என்று கட்சியின் முடிவை தோழர் கிருஷ்ணபிள்ளை அவர்கள் கூறினார். அதை அக்கணமே ஆணையாய் ஏற்றுக் கொண்டு அவர் புறப்பட்டார். அமைப்பின் தேவைக்கு தனது சொந்த நலன்களை உட்படுத்திக் கொள்வது என்பதற்கு உயர்ந்த உதாரணம் ஆனார். ஒரு முழுநேர ஊழியர் எப்படி ஒரு முழுநேரப் புரட்சிக்காரன் என்பதற்கு எடுத்துக்காட்டாய் கடைசி வரை வாழ்ந்தார். ஸ்தாபன ஒழுக்கம், கட்டுப்பாடு என்பதை எவ்வளவு ஆழமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட போதும் பேணிக் காத்தார்.அவரது மார்க்சியப் புரிதலும், அடிப்படைத் தத்துவக் கோட்பாடுகளில் அவருக்கு இருந்த விசாலமான ஞானமும் வியப்பிற்குரியது. தொழிலாளி வர்க்கப் புரட்சி சாத்தியம், சோசலிசமே அடுத்த சமூக மாற்று என்பதில் அவருக்கு இருந்த ஆழ்ந்த நம்பிக்கைக்கு இதுவே அடிப்படை. அவர் தனது வகுப்புகளில் மார்க்சிய தத்துவத்தை விரும்பி போதிப்பார். இந்திய மரபு வழிப்பட்ட பொருள்முதல்வாதத்தில் அவருக்கு ஆழ்ந்த தேர்ச்சி இருந்தது. சமஸ்கிருதத்தையும் அவர் அறிந்திருந்தார். இதுபற்றி அவரது சிறு பிரசுரங்களும் வந்துள்ளன. அவரது தத்துவ வகுப்புகளில் வாழ்க்கையின் மீதும், மாற்றங்களின் மீதுமான நம்பிக்கை சாரமாய் உள்ளிறங்கும். அவரது போதனை மிகவும் இயல்பாகவும், இயற்கையாகவும் இருக்கும். குறிப்பாக நடப்பு போராட்டங்களிலிருந்தும், அனுபவங்களிலிருந்தும் உதாரணங்களையும் படிப்பினைகளையும் தருவார். அவரது தனித்தன்மைகளில் இதுவும் ஒன்று. தத்துவத் தெளிவை ஊட்டுவதில் அவரது பங்களிப்பு மகத்தானது.1964ல் கட்சி பிரிந்த பிறகு திருத்தல்வாதத்தை எதிர்த்த கொள்கைப் போரில் அவர் பெரும்பங்காற்றினார். இந்திய ஆளும் வர்க்கம் பற்றிய நிர்ணயிப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை உருவாவதிலும் அதுபற்றிய தெளிவை அணிகளுக்கு போதிப்பதிலும் அவர் கட்சி ஸ்தாபனத்தில் பெரும் பங்காற்றினார்.அவர் பிரதானமாக தொழிற்சங்கப் பணிக்கு வந்த போது சென்னை நகரில் நமது தொழிற்சங்க இயக்கம் மிகவும் சிறியதாக இருந்தது. பெரும்பாலான தொழிற்சங்கங்கள் மற்றவர்கள் தலைமையில் இருந்தது. அவர் தொழிற்சங்க இயக்கத்தில் நுழைந்த நேரத்தில் சென்னை சுற்றுப்புற தொழிற்சாலைகளில் பெரும் கொந்தளிப்பான நிலை இருந்தது. தொழிலாளர்கள் சட்ட உரிமைகள், பணி நிரந்தரம் போன்றவை கூட மறுக்கப்பட்டு கடும் அடக்குமுறைக்கு ஆளாகிக் கொண்டிருந்தார்கள். முதலாளிகள் தங்களுக்கு ஒத்துப்போகிற தலைவர்களைக் கொண்ட சங்கம் அமைத்துக் கொண்டு அதனோடு தான் பேசுவேன் என்றார்கள். இந்த அடக்குமுறையை எதிர்த்து, தொழிலாளி தான் விரும்பிய சங்கத்தை அமைத்துக் கொள்ளவும், தனக்கு ஏற்பான தலைமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவுமான போராட்டங்கள் வெடித்தன.அந்தத் தருணத்தில் இந்தப் போராட்டங்களை இணைத்து ஒருமுகப்படுத்தவும், சகோதர ஆதரவு முழக்கங்களை முன்வைக்கவும், கூட்டுப் போராட்டத் தேவையை உணர்த்தவும், அரசு முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதை அம்பலப்படுத்தவும், அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை கூட்டாக முன்னெடுக்கவுமான பெரும்பணியை ஆற்றியவர் வி.பி.சி. தான். அதற்காக ஆளும் வர்க்கத்தின் கொலைவெறித் தாக்குதலையும் அவர் சந்திக்க நேர்ந்தது, அதிலிருந்து மீண்டெழுந்து தன்பணியினை தொடர்ந்தார். அவரது நெடிய அரசியல் வாழ்க்கையால், அர்ப்பணிப்பால் அவருக்கு இருந்த மரியாதையும், மற்றவர்களாலும் மறுக்க முடியாத நேர்மையும், தியாகமும் அவரை ஒரு ஆளுமையாக உயர்த்தியிருந்தது. இதன் மூலம் தொழிற்சங்க இயக்கத்திற்கு புத்துணர்ச்சியை அவரால் பாய்ச்ச முடிந்தது. ஒரு தொழிற்சாலையில் ஒரு சங்கம் என்று சென்னையில் வேர்விட்டிருக்கிற அந்த நிலைமையை இவரது பரந்த பார்வை உருவாக்கியது. கட்சி என்பதை தொழிற்சங்க கட்சி என்று புரிந்து கொள்ளக் கூடாது. தொழிலாளி வர்க்க கட்சி என்பதை அவர் அழுத்தமாகக் கூறுவார். தொழிலாளர் அனைவரும் நமது அடிப்படை வர்க்கம் என்று கூறுவார். அவர்களை அரசியலால் அணி திரட்டுவதில் தான் புரட்சியின் வெற்றியிருக்கிறது என்று கூறுவார். அவர் காலத்தில் இருந்த அதே நிலையை இப்போது உலகமய சூழலில் நாம் எதிர்நோக்குகிறோம். அவரது அணுகுமுறைகள் இன்றைய போராட்டங்களில் வழிகாட்டும் ஒளியாய் இருக்கின்றன.ஸ்தாபனப் பிரச்சனைகளில் வருத்தப்படுவோர், கோபமுற்றோர், சோர்வுற்றோர், ஒதுங்கி நிற்போர் போன்றவர்களை அவர் உரிமையோடு கடிந்து கொண்டு திருத்த முற்படுவார். அவர் கடைசியில் சொல்வது இதுதான்.“நீ யாருக்கும் அடிமையல்ல; ஆனால் ஸ்தாபனக் கட்டுப்பாடுகளைப் பின்பற்று; புரட்சிக்கு விசுவாசமாக இரு”.அவரது எல்லா செயல்களிலும் நடைமுறை சாத்தியப்பாடுகள் என்பதும் பொருத்தமாக கலந்திருக்கும். அவரது எந்த உரையிலும் நடைமுறை பிரச்சனைகளை சக்தியோடு எடுத்து வைத்து புரட்சிகர முழக்கத்தோடு தான் முடிப்பார்.சோசலிச மாற்றுக்கு மக்களைத் திரட்டுவோம்! புரட்சியை முன்னெடுப்போம்!

12-05-16 இந்திய திருநாடு முழுவதும் BSNLEU வெற்றி செய்தி ஒலிக்கட்டும்....

அருமைத் தோழர்களே ! கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் கடந்த 3 மாதங்களாக நமது சங்க தேர்தல் பணி  மிக மிக சிறப்பாக, சுறுசுறுப்பாக நடந்தேறியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்கள் தான் வாக்கு பதிவிற்கு எஞ்சியுள்ளது. நமது தோழர்கள் மிக கவனமாக பூத்களில் அதிகபட்சம் நமது BSNLEU சங்க கூட்டணி சின்னம்  "செல்" லில் வாக்குகளை சேர்பதற்கான இறுதிகட்ட பணியை கண்ணும் கருத்துமாக செய்திடவேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். வாக்கு சாவடிக்கு பெண்களை, உடல்நலக்குறைவாக உள்ளவர் களை, விடுப்பில் உள்ளவர் களை  கொண்டுவந்து வாக்களிக்க வைப்பதில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இந்திய நாடு முழுவதும் ஒரு சிறப்பான வெற்றியை நமது BSNLEU கூட்டணி பெறுவது என்பது நிச்சையிக்கப்பட்ட ஒன்று என்றாலும் நாம் கூடுதல் கவனத்துடன் செயலாற்றி  வெற்றி கனியை  பெறவேண்டும்.... வெற்றி வாழ்த்துக்களுடன், என்றும் தோழமையுடன் ,எஸ். சூரியன் ---D/S-BSNLEU.

07-05-16 மதுரை மாவட்ட BSNLEU பூத் கமிட்டி கூட்டம் . . .

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் பூத் கமிட்டி கூட்டம்  07-05-16 அன்று, சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர் சி . செல்வின் சத்தியராஜ் தலைமையில் நடைபெற்றது. இதுகாறும் நடந்துள்ள பணிகள் குறித்தும், இனிசெய்ய வேண்டிய  பணிகள் குறித்தும் மாவட்ட செயலர் தோழர் எஸ். சூரியன் விளக்கி உரை நிகழ்த்தினார். SEWA சங்க மாவட்ட செயலர், தோழர் எஸ். கந்தசாமி  NFTE சங்கம் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து  செய்துவரும்  துரோகத்தை அம்பலப்படுத்தியதோடு, அனைத்து ஊழியர்களும் BSNLEU கூட்டணி சங்க  சின்னமான செல்சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கி பேசினார். பூத் வாரியாக பூத் கமிட்டி தோழர்கள் விவாதத்தில் பங்கேற்றனர். மாநில சங்க துணைத்தலைவர் தோழர் .எஸ். ஜான் போர்ஜியா தனது கருத்தையும் பதிவு செய்தார். இறுதியாக மாவட்ட பொருளர் தோழர்.எஸ். மாயாண்டி நன்றி கூற, தொடர்ந்து வெற்றியை மதுரை மாவட்ட சங்கம் பெரும் என்ற சூளுரையோடு கூட்டம் நிறைவுற்றது.

நலநிதி நல்கிய நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி . . .

அனைத்து உள்ளங்களுக்கும், எங்களது  இதய பூர்வமான நன்றியை உரித்தாக்குகின்றோம், ---என்றும் தோழமையுடன் , எஸ். சூரியன் D/S-BSNLEU.

Saturday, 7 May 2016

வாக்களிப்பீர் BSNLஊழியர் சங்கத்திற்கு வரிசை எண் 9 செல் சின்னம்


16-05-16 அன்று BSNL ஊழியர்களுக்கு பொது விடுப்பு . . .

16-05-16 அன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நமது BSNL ஊழியர்களுக்கு பொது விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை காண இங்கே கிளிக் செய்யவும்.

அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிக கடிதம் . . .

அருமைத் தோழர்களே  நமது 7 வது சங்க அங்கீகார தேர்தலுக்கு 10.05.16 அன்று வாக்களிக்க வேண்டியவர்களிடம் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிகமாக சம்பந்தப் பட்ட யூனிட் அதிகாரியிடம் கீழ்க்கண்ட மாதிரியில் உள்ளவாறு  கடிதம்  . . . பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.....
மாதிரி கடிதம் காண இங்கே கிளிக் செய்யவும்.

10.05.16 அன்று நடைபெறும் தேர்தலுக்கான மாதிரி வாக்கு சீட்டு...

Thursday, 5 May 2016

5-5-16 மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய மேலூர்கிளை கூட்டம்...

அருமைத் தோழர்களே! 5-5-16 வியாழன் அன்று மாலை மேலூர் கிளையின் சார்பாக தேர்தல் பிரச்சார கூட்டத்தையும், மாவட்டச் செயலர் தோழர் எஸ். சூரியனுக்கு பணிநிறைவு கூட்டத்தையும் நமது BSNLEU மேலூர் கிளைத் தோழர்கள்  மிக மிக பிரம்மாண்டமாக நடத்தி அனைவரையும் ஆனந்த  வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள் ...
நமது BSNLEU  மாவட்டத் தலைவர் தோழர்.சி .செல்வின் சத்தியராஜ், மாவட்டச் செயலர் தோழர். எஸ். சூரியன், மாவட்டத் துணைத்தலைவர் தோழர்.எஸ். மானுவேல் பால்ராஜ், மற்றும் SEWA சங்கத்தின் மாவட்டச் செயலர் தோழர்.எஸ். கந்த சாமி  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மிக அருமையான ஸ்வீட், காரம், டீ  வழங்கப்பட்டது . அதன்பின் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் நமது மேலூர் கிளைத்தோழர்களால்  சால்வை அனுவித்து சிறப்பு சேர்க்கப்பட்டது. மேலூர் பூத்தில் மேக்ஸ்சிம்மம் வாக்குகளை நமது BSNLEU சங்க கூட்டணி சின்னமான வரிசை என் 9 தில் உள்ள செல் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை அளித்து தொடர்ந்து நம்பர்  1. சங்கமாக வெற்றிபெற சூளுரை பூண்டனர். மேலூர் கிளைத் தோழர்களின் பனி சிறக்க மதுரை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.

03-05-16 மதுரை G.Mஅலுவலக தேர்தல் சிறப்புக்கூட்டம்

அருமைத் தோழர்களே ! 03-05-16 செவ்வாய் அன்று மதியம் 1 மணிக்கு மதுரை G.Mஅலுவலக கிளையின் சார்பாக,7வது சங்க அங்கீகார   தேர்தல் சிறப்புக் கூட்டம், கிளைத்  தலைவர் தோழர்.எல்..செல்வராஜ் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் SEWA சங்க மாவட்ட செயலர், தோழர்.எஸ். கந்தசாமி, நமது மாவட்ட தலைவர் தோழர். சி . செல்வின் சத்தியராஜ், நமது மாவட்ட செயலர் தோழர். எஸ். சூரியன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நமது மாநில உதவிச் செயலரும், உழைக்கும் மகளீர் ஒருங்கிணைப்புக்குழு கன்வீனருமான தோழியர்.இந்திரா கலந்து கொண்டு கருத்தாளம் மிக்க சிறப்புரை நிகழ்த்தினார். 
கிளைச் செயலர் தோழர்.என். ஈஸ்வரி நன்றியுரை நிகழ்த்தினார். 30.04.16 அன்று பனி நிறைவு பெற்ற நமது மாவட்ட செயலர் தோழர். எஸ். சூரியன் அவர்களுக்கு தோழியர் இந்திரா அவர்கள்  பரிசு வழங்கினார். கூட்டத்தில் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது  நமது BSNLEU சங்கம் NO.1 தொடர் வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் அமைந்தது.

மே -5, மாமேதை மார்க்ஸ் பிறந்த நாள் . . .

உலகின் தலைசிறந்த வரலாற்று ஆய்வாளர், பத்திரிகையாளர், பொருளாதார அறிஞர், தத்துவஞானி மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்த நாள் இன்று...