Sunday, 29 December 2013

தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் தப்ப முடியவில்லை.

ரயிலில் பயங்கர தீ விபத்து: 26 பேர் பலி

ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் பெங்களூர்-நாண்டெட் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூ ரில் இருந்து வெள்ளியன்று இரவு 10.45-க்குப் புறப்பட்டு, மகாராஷ்டிரம் மாநிலத்தின் நாண்டெட் வரை செல்லும் நாண்டெட் எக்ஸ்பிரஸ் ரயில், சனிக்கிழமையன்று அதிகாலை 3.20 மணியளவில் ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டம் கொத்தா செருவு என்ற இடத்தில் வரும் போது இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.ரயிலின் பி-1 குளிர்சாதன வசதிகொண்ட பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்த மற்ற பெட்டி களுக்கும் தீ வேகமாகப் பரவியது. தீ விபத்து நடந்தது அதி காலை என்பதால், தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் பலராலும் தப்ப முடியவில்லை. இந்தத் தீயில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர்.முழுமையான மீட்புப் பணிகளுக்குப் பின் முழுவிவரம்தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ரயில்வே உதவி எண்கள்: ரயில் விபத்தில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் குறித்த விபரங்கள் அறிந்து கொள்ளும் வகையில் ரயில்வே நிர்வாகம் உதவி எண்களை அறிவித்தது. பெங்களூரு தொடர்பு எண்கள்: 080 22354108, 080 22259271, 080 22156551, 080 22156554. எஸ்.எஸ்.பி. நிலையம் எண்கள்: 085 552 80125 மற்றும் 097 31666863 இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து ரயில்வேப் பாதுகாப்பு ஆணையர் தலைமையில் 5 பேர்கொண்ட அதிகாரிகள் குழுவிசாரணை நடத்தும். தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று முதல்கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.தொடர்ந்து இப்படி நடந்து கொண்டிருக்கும் விபத்துக்கள் நிகழாவண்ணம் அரசு இனியேனும் நடவடிக்கை எடுக்குமா என்பதே நமது வேதனையான கேள்வி.

CITU இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி. . .

போக்குவரத்துத் தொழிலாளர் முற்றுகை
அகவிலைப்படியை வழங்க நிர்வாகம் ஏற்பு

அகவிலைப்படி நிலுவையினை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை அரசு போக்குவரத்து தலைமையகம் முன்பு சீருடையுடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தெற்குத்தொகுதி சட்டமன்ற உறுப் பினர் இரா.அண்ணாதுரை, போக்குவரத்து சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறு முகநயினார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் சம்மேளன உதவித்தலைவர் வீ.பிச்சை, சம்மேளன துணைப் பொதுச்செயலாளர் ஜி.வேலுச்சாமி, மதுரை கோட்டப்பொதுச்செயலாளர் ஆர். வாசுதேவன், தலைவர் ஜி.இராசேந்திரன், பொருளாளர் கனகசுந்தர், விருதுநகர் கோட்டப் பொதுச்செயலாளர் வெள்ளைத் துரை, தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் ஆர்.அழகர்சாமி, திண்டுக்கல் கோட்டப் பொதுச்செயலாளர் பால்ராஜ், பொருளாளர் எம்.மாணிக்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.போக்குவரத்து தலைமையக அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தொழிலாளர்கள் அகவிலைப்படியை உடனடியாக வழங்க வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். அங்கு வந்த காவல்துறையினர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அகவிலைப்படி நிலுவை வழங்குவோம் என நிர்வாகம் அறிவிக்காமல் திரும்பிச் செல்லமாட்டோம் என்று தலைவர்கள் கூறினர்.இதையடுத்து போக்குவரத்து கழக நிர்வாக பொதுமேலாளர் பால்ராஜ் மற்றும் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை, சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அக விலைப்படியை வழங்குவதாக அதிகாரிகள் உறுதிமொழியளித்தனர்.இதையடுத்து மதுரை கோட்டத் தலைவர் ஜி.ராசேந்திரன் தலைமையில் நடைபெற்ற வாயிற்கூட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து தலைவர்கள் எடுத்துரைத்தனர். சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை இதுகுறித்து கூறுகையில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியைக் கேட்டும், வழங்காத நிர்வாகத்தைக் கண்டித்தும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. போக்குவரத்து அதிகாரிகள், மூன்று மாத அகவிலைப்படியில் ஒருமாத அகவிலைப்படியை பொங் கல் தினத்திற்குள்ளும், 2 மாத அக விலைப்படியை பிப்.28ம் தேதிக்குள்ளும் வழங்க உறுதிமொழி வழங்கினர். இது போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய மகத்தான இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு இரா.அண்ணாதுரை எம்.எல். கூறினார்.

28.12.2013 - நடந்தவை. . . .

அருமைத்தோழர்.T.S.ராஜன் அவர்களுக்கு அஞ்சலி கூட்டம்.
அருமைத் தோழர்களே!
அனைவராலும்,அன்பாக அழைக்கப்பட்ட அருமைத் தோழர்.TSR அவர்கள் 28.12.2013 மறைவை ஒட்டி மதுரை G.Mஅலுவலகத்தில் மதியம் 1 மணிக்கு BSNLEU + NFTE சங்கங்கள் சார்பாக அஞ்சலிக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு,NFTEசங்கத்தின் மாவட்டத்தலைவர் தோழர்.K.முருகேசன் தலைமை தாங்கினார்,அஞ்சலி உரையாக NFTE  மாவட்டசெயலர், தோழர். S.சிவகுருநாதன், SNEA மாநில உதவிச்செயலர், தோழர்.S. கணேசன். ஓய்வு பெற்றோர்  நலச்சங்க மாவட்டசெயலர், தோழர்.G.R.தர்மராஜன்,  நமது   BSNLEU மாவட்ட செயலர் தோழர்.S.சூரியன் ஆகியோர் மறைந்த தோழர்.TSR,தொழிற்சங்கத்தின் மீதும்,தான் ஏற்றுக்கொண்ட மார்க்சிய கொள்கை மீதும் எத்தகய பற்றும்,பிடிப்பும் கொண்டு,ஊழியர்களுக்காக உறுதியோடு செயல்பட்டார் என்பதை நினைவு கூர்ந்தனர். தொழிற் சங்கத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு,1965 தந்தி பகுதி  போராட்டம், 1968 நாடுதழுவிய வேலைநிறுத்தம் ஆகியவற்றில் நிர்வாகம் தொடுத்த பழிவாங்கல் நடவடிக்கைகளை முழுமனதோடு ஏற்றுகொண்ட தோழர்.TSR அவர்களின் நினைவை போற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Saturday, 28 December 2013

MTNL ஊழியர்களுக்கு பென்சன் அமைச்சரவை ஒப்புதல் . . .


கண்ணீர் .....அஞ்சலி ....வருந்துகிறோம்.. .

COM. T S RAJAN IS NO MORE
வருந்துகிறோம்...
 
    தோழர்.TSR, என அனைவராலும் அன்பாக  அழைக்கப்பட்ட அருமை தோழர். T.S.சுந்தரராஜன்,28.12.2013 காலை 7.15 மணிக்கு மறைந்து விட்டார் என்பதை   மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தோழர்.TSR. மும்பையில்,தனது மகன் வீட்டில்    தவறிக் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு,கடந்த 21.12.2013அன்று  மும்பை மருத்துவமனயில் சிகிச்சைக்காக  அனுமதிக் கப்பட்டிருந்தார்.
  தோழர்.TSR,எப்போதும் ஒரு போராளி யாகவே திகழ்ந்தவர் ஆவார். அனைவ ரோடும் அவர்  அன்பாக பழகக் கூடியவர்,தான் கொண்ட கொள்கையில் மிக உறுதியாக இறுதி வரை வாழ்ந்தவர்.தபால்-தந்தி தொழிற்சங்க இயக்கத்தில்   முன்னோடியாக,T3 & T4 சங்கங்களில் மத்திய,மாநில நிர்வாகியாக இருந்து பல்வேறு பிரச்சனைகளை தீர்த்துவைத்து,வழிகாட்டியாக இருந்த  தலைவர்.
      1968 போராட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டபோது புன்சிரிப்புடன் அதனை ஏற்றவர். பின்னர் சங்க முயற்சியால் திரும்பவும் பணியில் சேர்ந்து இறுதி மூச்சு வரை தொழிலாளிக்காகவும், இடதுசாரி கருத்துகளுக்காகவும் வாழ்ந்தவர்.  அவரது மறைவிற்கு செங்கொடி தாழ்த்தி நமது  மாவட்ட  சங்கம் அஞ்சலி செலுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கு நமது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழர்.TSR,மறைவிற்கு நமது BSNLEU சங்க கொடிதாழ்த்தி கிளை சங்கங்கள்  அஞ்சலி  செலுத்த வேண்டுமாய் நமது மாநில,மாவட்ட சங்கங்கள் கேட்டுக்கொள்கிறது .

எதனை பணமாக ஒப்புக்கொள்கிறார்களோ, அதுவே பணம்.

உலோக பணமானது உலோகத்தின் இருப்புக்கு ஏற்றவாறு மாறுபடும். அப்பணத்தின் அளிப்பை மத்திய வங்கி தனிச்சையாக மாற்ற முடியாது. சட்டரீதியான பணத்தை வெளியிடும் மத்திய வங்கி, பண அளவிற்கு ஈடான தங்கமோ அல்லது வேறு விலை மதிப்புள்ள உலோகங்களோ இல்லாமலே காகித பணத்தை (ஆனால், அரசாங்க பத்திரங்களுக்கு ஈடாக காகித பணத்தை வெளியிட முடியும்) வெளியிட முடியும். இவ்வாறு பணத்தின் அளிப்பை தன்னிச்சையாக மாற்றியமைக்க முடியும் என்ற காரணத்திற்காகவும், காதிகப் பணத்தை நாடுகள் விரும்புகின்றன.எல்லா மத்திய வங்கிகளும் அந்தந்த நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், தனக்குத் தேவையான பணத்தை அச்சிட்டு கொடுக்குமாறு அரசு மத்திய வங்கியை பணிக்கலாம். எப்போதெல்லாம் தனது செலவை உயர்த்த வேண்டும் என்று நினைக்கிறதோ அப்போதெல்லாம் பண அளிப்பை அதிகமாக்கி, அதனைக் கொண்டு அரசு தனக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியும்.ஆனால் இதில் ஒரு பெரும் சிக்கல் உண்டு. பண அளிப்பை அதிகமாக்கும் போது, நாட்டின் உற்பத்தி பெருகவில்லை என்றால், பணவீக்கம் ஏற்படும், அதாவது, பொருட்களின் விலைகள் உயரும். பணவீக்கம் ஏற்பாடும்போதெல்லாம், மக்கள் மேலும் பணவீக்கம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் தங்கள் பொருட்களின் விலைகளை மேலும் உயர்த்துவர். இதனால், பணமதிப்பு வேகமாகக் குறையும். பணத்தின் மதிப்பு நிலையாக இருப்பதுதான் அதனின் சிறப்பு செயல்பாடுகளில் ஒன்று என்று ஏற்கெனவே பார்த்தோம்.பெரும்பாலான நாடுகள், அரசின் ஆணைக்கு பணிந்து பண அளிப்பை மத்திய வங்கி உயர்த்தக்கூடாது என்பதால், பண அளிப்பை மத்திய வங்கி தன்னிச்சையாக முடிவு செய்ய வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றி உள்ளன. இந்தியாவிலும் இவ்வாறான சட்டம் உண்டு. எனவேதான், மத்திய வங்கி அவ்வப்போது வெளியிடும் பணக் கொள்கை (monetary policy) அறிக்கைகள் கவனத்துடன் விவாதிக்கப்படுகின்றன. பணக் கொள்கையில் பண அளிப்பு எவ்வாறு இருக்கும் என்ற தனது முடிவை மத்திய வங்கி அறிவிக்கும்.ஒரு நாட்டு பணம் வேகமாக மதிப்பை இழந்தால், அதன் மீது அந்நாட்டு மக்களே நம்பிக்கை இழந்துவிடுவர். 2005 இல் துருக்கி நாட்டின் பணம்லிரா’(lira) தன் மதிப்பை வேகமாக இழந்துவந்தது. ஆகவே, பழைய பத்து லட்சம் லிராவிற்கு ஒரு புதிய லிரா சமம் என்று அந்நாட்டில் புதிய பணம் வெளியிடப்பட்டது. இதே போன்று, 1994 பிரேசில் அரசும் புதிய பணத்தை வெளியிட்டது. இவ்விரு அனுபவங்களும், நமக்கு சொல்லும் பாடம், எதனை பணமாக எல்லாரும் ஒப்புக்கொள்கிறார்களோ, அதுவே பணம். மக்களின் நம்பிக்கையை நாட்டின் பணம் இழந்தால், அதனை பயன்படுத்துவதை அந்நாட்டு மக்கள் தவிர்க்கக்கூடும். பல நேரங்களில் தென் அமெரிக்க நாடுகளில் உள்ள மக்கள் தங்கள் நாட்டு பணங்களை தவிர்த்து அமெரிக்காவின் டாலரை பயன்படுத்தியதும் உண்டு.