Wednesday, 23 December 2015

தேசிய உழவர் தினம்: அழிவின் விளிம்பில் இந்திய விவசாயம்

விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பிரதமர் நாற்காலியை அலங்கரித்தவர் சொளத்ரி சரண்சிங். அவரது பிறந்த நாளே தேசிய உழவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், உழவர் தினம் குறித்து தற்போது, விவசாயிகளிடமே போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது.ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் இருந்த 18-ம் நூற்றாண்டில், உலகின் வலுவான விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா மிளிர்ந்தது. சுதந்திரத்துக்குப் பின் இந்திய விவசாயப் பொருளாதாரத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன.
பசுமைப் புரட்சி
1960-ல் இந்திய விவசாயம் கடும் வறட்சியைச் சந்தித்தது. உணவுத் தட்டுப்பாட்டை சமாளிக்க அமெரிக்காவில் இருந்து, கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. உணவு உற்பத்தியைப் பெருக்க, 1965-ல் பசுமைப் புரட்சி தொடங்கியது. ஆனாலும், இந்திய விவசாயிகளின் நிலைமை இன்றும் படுமோசமாகத்தான் உள்ளது.
கட்டுப்படியான விலை
கிரியேட் அமைப்பைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேளாண் விற்பனைத் துறை அதிகாரி பொன்னம்பலம் கூறுகையில், “விவசாயத் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. தேசிய மாதிரி சர்வேயில், 8 சதவிகித மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேறிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை, 40 சதவிகித மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேற இருப்பதாகச் சொல்கிறது.விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. தமிழகத்தில், 2000-2010 வரையுள்ள புள்ளி விவரங்களின்படி, ஏறக்குறைய 2 லட்சம் ஹெக்டேர் நெல் பயிரிடும் பரப்பு குறைந்துள்ளது. விவசாய நிலங்கள், வீட்டுமனைகள் ஆவதைத் தடுக்க வேண்டும். இதற்கென தேசிய கொள்கைகள் உருவாக்கப்பட்டு, உரிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். விளைவிக்கும் பொருளுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் காலம் வரவேண்டும்என்றார்.நமது நெல்லைக் காப்போம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தட்டிமேடு ஜெயராமன் கூறுகையில், “தமிழகத்தில் இருந்த 40,000 நீர் ஆதாரங்களில் 75 சதவிகித குளங்கள் ஆக்கிரமிப்பின் காரணமாக காணாமல் போய்விட்டன. விவசாயத்தை மீட்டெடுக்க அனைத்துக் கட்சிகளும் முன்வர வேண்டும்என்றார்.

22.12.2015 பென்சன் தார்களுக்காக எழுச்சி மிகு ஆர்பாட்டம் . 1



22.12.2015 பென்சன் தார்களுக்காக எழுச்சி மிகு ஆர்பாட்டம் . . .

தோழர்களே ! அகில இந்திய போரம் அறைகூவலுக்கு இணங்க மதுரை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் 22.12.2015  மதியம் 1 மணிக்கு தோழர் N. சீனிவாசன், D/S-AIBSNLEA  தலைமையில்  பென்சன் தார்களுக்கு 78.2 % பஞ்சப்படி உடனடியாக வழங்க கோரி, மதுரை போரம் சார்பாக எழுச்சி மிகு ஆர்பாட்டம் மிக மிக சிறப்பாக நடைபெற்றது. . 

கிட்டத்தட்ட 45 பெண்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்பாட்டத்திற்கு போரம் கன்வீனர் & D/S-BSNLEU தோழர்.S. சூரியன் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன்பின் கோரிக்கைகளை விளக்கி தோழர்கள், K.தெய்வேந்திரன், D/S-SNEA, V. பாலகுமார்,D/S-TSOA, K. முருகன்,D/S-AIBSNLOA, C. செல்வின் சத்தியராஜ், ACS-BSNLEU, L. கண்ணன், WRU, N. சோனைமுத்து,D/S-TNTCWU, V.K. பரமசிவம்,AIBSNLEA அட்வைசர் A.செல்லப்பாண்டியன்,C/S-TEPU, N.C. ஆதீஸ்வரன்,D/S-AIBDPA, G.R. தர்மராஜ், D/S- AIBSNLPWA ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

Tuesday, 22 December 2015

21-12-2015 திண்டுக்கலில் நடைபெற்ற Forum கூட்டம் . . .

அருமைத் தோழர்களே! 21-12-2015 அன்று மாலை திண்டுக்கலில் மதுரை மாவட்ட  Forum கூட்டம்  தோழர் சந்திரகுமார் ,SNEA தலைமையில் நடைபெற்றது  . . . 
தோழர். J.ஜோதிநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார், தோழர் S. ஜான்போர்ஜியா கூட்டத்தின் நோக்கம், கோரிக்கைகள் குறித்து உரையாற்றினார். கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு தோழர்கள் வளச்சிபனிகள் குறித்து தங்களது அனுபவங்களை எடுத்துக் கூறினார்கள். . .

இறுதியாக, மதுரை மாவட்ட Forum கன்வீனர் தோழர்.S சூரியன் 22-12.2015 அன்று நாடு முழுவதும் நாம் நடத்த உள்ள  ஆர்பாட்டம், பென்சன்தார்களுக்கான 78.2% பஞ்சப்படியை உடனடியாக வழங்கக் கோரி நடைபெறுவதில் அனைவரும் சக்தியாக கலந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும், எதிர்வரும் 01.01.2016 முதல் 100 நாட்கள் நாம் கடைபிடிக்க வேண்டிய  " புன்னகையுடன் சேவை " திட்டத்தின் அவசியம் குறித்தும் விளக்க உரை நிகழ்த்தினார். தோழர் A.குருசாமி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

Sunday, 20 December 2015

தேவேந்திர குல வேளாளர் இடஒதுக்கீடு பாதுகாப்போம்...

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சனிக்கிழமை மதுரையில் தேவேந்திர குல வேளாளர் இடஒதுக்கீடு பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் தலைமையேற்று உரையாற்றினார். இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தியாகி இமானுவேல் பேரவை பொதுச் செயலாளர் பூ.சந்திரபோசு, மத்திய-மாநில எஸ்.சி. - எஸ்.டி. அரசு ஊழியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் வி.ராஜேந்திர சோழன், மத்திய-மாநில எஸ்.சி. - எஸ்.டி. அரசு ஊழியர் சங்கத்தின் மாநில அமைப்பாளர் எஸ்.கருப்பையா, தீ..மு. மாநிலத் தலைவர் பி.சம்பத் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.- முதலாளித்துவத்தின் சுரண்டல் வேட்டைக்கு பட்டியல் இன மக்களை பலியாக்க விடோம்!தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மதுரையில் டிசம்பர் 19 சனிக்கிழமை, தேவேந்திர குல வேளாளர் இட ஒதுக்கீடு பாதுகாப்பு மாநாடு, பேரெழுச்சியுடன் நடைபெற்றது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:பிராமணியமும், முதலாளித்துவமும் தேச வளர்ச்சிக்கு விரோதிகள் என்று சுட்டிக்காட்டினார் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கார். அந்த எதிரிகள் இன்று வரை வீழ்த்தப்படாததால் மிக ஆபத்தான நிலைகளை நாடு எதிர் கொண்டு வருகிறது.தேச விடுதலையின் போது இருந்த இந்திய முதலாளிகளின் சொத்து மதிப்புதற்போது பல நூறு மடங்கு உயர்ந்துள்ளது. செல்வச் செழிப்பு விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரின் பக்கம் எந்த அளவிற்கு குவிந்து மேடாகி வருகிறதோ, அந்த அளவிற்கு மறுபுறத்தில் பற்றாக்குறை என்கிற பள்ளம் உருவாகியே தீரும். இந்திய மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய தேச விடுதலை 67 ஆண்டுகளைக் கடந்த பின்பும் பற்றாக்குறையும், ஏழ்மையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.உயிர் வாழ்க்கைக்காக மனித மாண்புகள் தொடர்ந்து சிதைக்கப் படுகிறது. `ஒரு வாக்கு ஒரு மதிப்புஎன்கிற அளவில் இந்திய மக்களிடையே அரசியல் சமத்துவம் ஏற்பட்டி ருந்தாலும், பொருளாதார தளத்தில் விடுதலையின் போதுஇருந்ததைவிட பல மடங்கு ஏற்றத் தாழ்வுகள் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சாதியின் பெயரால் சமூகத்தில் வேரூன்றியுள்ள சமூக ஏற்றத் தாழ்வுகள் மீது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் மிகக்கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
முதலாளித்துவத்தின் சுரண்டல் வேட்டை
பெருவாரியான இந்திய மக்கள் தங்களது பொருளாதாரத் தேவைகளுக்கான முயற்சிகளில் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இந்திய முதலாளித்துவம் மிக சாதுர்யமாக பிராமணியத்தையும் வளைத்து சேர்த்துக் கொண்டு மக்களிடையே நிலைபெற்றுள்ள சமூக முரண்பாடுகளை கூர்மைப்படுத்தி பெரும் சுரண்டல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு கூர்மைப்படுத்தப்படும் முரண்பாடுகள், மேல் சாதிகள் என்று கற்பிக்கப்பட்டவர்களிடம் ஆதிக்க உணர்வாக குரூரமாக வெளிப்படுகிறது. மறுபுறத்தில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் கல்வியின் விளைச்சலாக சமூக அநீதிகளுக்கு எதிரான விடுதலை உணர்வாக ஒடுக்கப்பட்ட மக்களிடம் மேலெழுகிறது.இவ்வாறு மேலெழுகிற ஜனநாயக உணர்வுகளை பாதுகாத்து, வளர்த்து, ஒடுக்குமுறைகளை முடிவுக்கு கொண்டுவரும் அரசியல் உறுதிப்பாடு இடதுசாரிகளை தவிர்த்து அரசியல் இயக்கங்களிடம் இல்லாத காரணத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் பாடுகள் வேதனையளிக்கும் விதத்தில் தொடர்கிறது.
இடதுசாரிகளே பாதுகாப்பு
மாநில அரசுகளுக்கு தலைமையேற்கும் வாய்ப்புகள் இடதுசாரிகளுக்கு கிடைத்த மாநிலங்களில் பட்டியலின மக்களின் வாழ்க்கைத் தரம் குறிப்பிட்ட அளவுமாற்றம் அடைந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் நிலமற்ற குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலத்தில் 9 லட்சம் ஏக்கர்நிலம் பட்டியல் இனத்தவருக்கே வழங்கப்பட்டது. தற்போது திரிபுரா மாநிலத்தில் கல்வி சராசரி 95 சதவீதம். ஆனால் அம்மாநிலத்தில் பட்டியல் இனத்தவரின் கல்வி சராசரி 97 சதவீதம்.இத்தகைய பார்வையும் , பணியும் நிச்சயமாக இதர மாநிலங்களில் மேற்கொள்ளப்படவில்லை. பட்டியல் இனத்தவருக்கென்றே வடிவமைக்கப்பட்ட சிறப்பு திட்டங்களையும் போராடிப் பெற்ற இட ஒதுக்கீடும் முழு மனதாக செயல்படுத்தப்படவில்லை.
மத்திய அரசே மாநில அரசே.
மத்தியிலும், மாநிலங்களிலும் உள்ள பட்டியல் இனத்தவருக்கென பின்னடைவுப் காலிப்பணியிடங்களை உடனடியாக சிறப்பு பணித் தேர்வுகளின் மூலமாக நிரப்பிடு; குறிப்பாக தமிழகத்தில் உருவாகியுள்ள 26,000 பின்னடைவுக் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடு. சிறப்பு உட்கூறுத்திட்டம் என்கிறபட்டியல் இனத்தவருக்கான துணைத்திட்டத்தின் படி ஒதுக்கீடு செய்யப்படுகிற முழு தொகையினையும், மடைமாற்றம் செய்திடாமல் முழுமையாக சிறப்புத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்திடு. மத்திய அரசு கடந்த ஆண்டின் நிதிஒதுக்கீட்டில் பாதியாக குறைத்ததை இம்மாநாடு கண்டிக்கிறது. தற்போது தமிழகத்தில் 138 ஆதிதிராவிடர் கல்லுhரி விடுதிகள் செயல்படுகின்றன. இதனை இரட்டிப்பாக உயர்த்திடு. .டி.. விடுதிகள் தற்போது 17 ஆகவும், பாலிடெக்னிக் விடுதிகள் 3ஆகவும்முதுகலைப் பட்டதாரி விடுதிகள்12 ஆகவும்உள்ளன. இதனை மாவட்டத்திற்கு ஒன்று எனவிரிவுபடுத்து. சட்டக்கல்லுhரி விடுதிஒன்றுதான் உள்ளது. சட்டக்கல்லுhரி உள்ள அனைத்து இடங்களிலும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியைத் துவக்கிடு. வெளிநாடு சென்று படிப்பதற்கு 2014-2015 ஆம் ஆண்டில் ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு ரூ. 23.28 லட்சம் நிதி உதவியுடன் படித்து வருகிறார். இதனை ஆண்டுக்கு 25 மாணவர்கள் என இலக்கு வைத்து வெளிநாட்டு படிப்பிற்கு கல்வி உதவி செய்திடு.சட்டப் பட்டதாரிகளுக்கு புத்தகம்மற்றும் அறை வாடகைக்காக வழங்கப்படுகிற ரூ.50 ஆயிரத்தை பட்டியல் இனத்தில் உள்ள அனைத்து சட்டப் பட்டதாரிகளுக்கும் வழங்கிடு. அரசாணை 92ன் படியான +2 விற்கு பிந்தைய கல்விக் கட்டணம் மற்றும்  குரூப் 1 தேர்வுகளுக்கான உதவித் தொகை ரூ.50 ஆயிரத்தை விண்ணப்பித்துள்ள அனைத்து பட்டியல் இன மாணவர்களுக்கும் வழங்கு. உத்தரப்பிரதேச மாநிலத்தைப் போல்தமிழகத்தில் துணைத் திட்டத்தில் பட்டியல் இன மாணவர்களுக்கான 4 மருத்துவக் கல்லுhரிகளைத் துவங்கிடு. தொகுப்பு வீடுகள், தாட்கோ கடனுதவி, நிலமற்றவர்களுக்கு நில ஒதுக்கீடு,  தொழில் வளாகங்களில் 20 சதவீத ஒதுக்கீடு மற்றும்அனைத்து ஒப்பந்தங்களிலும் 20 சதவீத வழங்கிடு என இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
இடஒதுக்கீடு காப்போம்
நிகழ்காலத்தில் சமூகம் சமத்துவமாக இல்லாத போது அசமத்துவ ஏற்பாடுகளின் மூலமாக எதிர் காலத்தில் சமத்துவ சமூகம் படைக்க முடியும். அதன் பெயரே இட ஒதுக்கீடும். சிறப்புத் திட்டங்களும்.இத்தகைய புரிதல்களோடு சாதிய சமூகத்தின் வஞ்சனையால், நிலத்தையும், வாழ்வுரிமையையும் இழந்த தேவேந்திர குல வேளாளர் உள்ளிட்ட பட்டியல் இனமக்கள் தங்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கான போராட்டங்களை முன்னைக்காட்டிலும் வீரியத்துடன் கோரிப் பெற இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது. சாதியின் பெயரால் இழிவாக அழைக்கப்படும் நிலையில் மாற்றம் காண பள்ளர், பண்ணாடி, குடும்பன், காலாடி, கடையன், வாதிரியான், தேவேந்திர குலத்தான் ஆகிய உட்பிரிவு மக்கள் தங்கள் `தேவேந்திர குலவேளாளர்என உரிய கௌரவத்துடன்அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இம்மாநாடு முழுமனதாக அங்கீகரித்தது.

விழா விடுமுறை தேதி மாற்றம் . . .


டிசம்பர்-20, சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் !

இன்று சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்வறுமையை எதிர்த்துப் போராடுவதில் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.21 ஆம் நூற்றாண்டில் வழக்கில் உள்ள சர்வதேச உறவுக் கோட்பாடு ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறதுமேலும் எளியோர் வலியோரிடம் இருந்து உதவி கோரும் உரிமையையும் ஆதரிக்கிறது.நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி விவாதிப்பதற்கும் வறுமையை ஒழிப்பதற்கான புதிய வழிமுறைகளைக் கண்டறிவதற்குமாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Friday, 18 December 2015

BSNL-லில் மத்திய, மாநில, மாவட்ட சங்கங்களின் அறைகூவல்.


19.12.15 தேவேந்திர குல வேளாளர் இட ஒதுக்கீடு பாதுகாப்பு மாநாடு.

வரலாறு தடுமாறாது  . . . வஞ்சக அரசியல் எடுபடாது  . . .
தேவேந்திர குல வேளாளர் என்கிற அடையாளத்திற்கு பல நூற்றாண்டு வரலாறு உண்டு. சாவடிகளில், கோவில்களில் தேவேந்திர குலம்  என்றிருக்கிற பதிவுகள் அமித்ஷாவின் கருணையால் அல்ல. குருமூர்த்தியின் கண்டுபிடிப்பும் அல்ல. இவர்களின் வலையில் வீழ்ந்துள்ள " தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையின் " தங்கராஜ்  போன்றவர்கள்  பிறப்பதற்கு முன்பே உருவான அடையாளம்தான் தேவேந்திரகுலம்  என்கிற அடையாளம் . . . . . . .இட ஒதுக்கீட்டு  உரிமையையும், வன் கொடுமைத் தடுப்புச் சட்டம் என்கிற கவசத்தையும்  ஒருபோதும் எவரும் தட்டிப் பறிக்க அனுமதிக்க மாட்டோம்  . . . . .

சிறந்த , விரைந்த சேவைக்கு BSNL மதுரை தொலை தொடர்பு மாவட்டம்.


கார்ட்டூன் . . . கார்னர் . . .

கனமழை, வெள்ளத்துக்கு பிறகு பிஎஸ்என்எல் சேவைக்கு வரவேற்பு: பிப்ரவரிக்குள் 600 டவர்களை அமைக்க திட்டம்...

சென்னையில் கனமழை, வெள்ளம் ஏற்பட்டபோது பிஎஸ்என்எல் நிறு வன செல்போன் சேவை தடையின்றி செயல்பட்டதால் மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. அதனை மேலும் வலிமையாக்க வரும் பிப்ரவரி இறுதிக்குள் தமிழகத்தில் 600 டவர்களை அமைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பெய்த கன மழையால் பெரும் வெள்ளம் ஏற் பட்டு மின் விநியோகம் நிறுத்தப் பட்டதால் பெரும்பாலான தனியார் செல்போன் நிறுவனங்கள் தங்களின் சேவையை முறையாக அளிக்க முடியாமல் திணறின. அப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லேண்ட் லைன், செல்போன் சேவை தடை யின்றி செயல்பட்டதால் பொதுமக்க ளுக்கு பெருமளவில் உதவியது.
இது தொடர்பாக பிஎஸ்என்எல் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “வெள்ள சம்பவத்துக்குப் பிறகு பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நம்பிக்கையை மேலும் வலிமை யாக்க கூடுதலாக 600 டவர்களை தமிழகம் முழுவதும் பிப்ரவரி இறு திக்குள் அமைப்பதற்கு பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 350 டவர்களை அமைப்பதற்கான சாதனங்கள் சென்னை வந்துள்ளன. சேவை களின் தரத்தை உயர்த்துவதிலும் பிஎஸ்என்எல் கவனம் செலுத்தவுள் ளதுஎன்றார்.வெள்ளத்தின்போது லேண்ட் லைன் சேவையிலும் பிஎஸ்என்எல் சாதித்துக் காட்டியதால், பிஎஸ்என்எல் லேண்ட்லைன் இணைப்பை துண்டித்திருந்த பலர் மீண்டும் சேவை வேண்டி விண்ணப்பித்துள்ளனர். பில் கட்டாமல் சேவை துண்டிக்கப்பட்டவர்கள், விருப்பமின்றி சேவைகளை திரும்ப ஒப்படைத்தவர்கள் போன்றவர்கள் பழைய எண் கொண்ட லேண்ட்லைன் இணைப்பை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. இணைப்பு பெற டிசம்பர் 16 முதல் 31 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.சென்னையில் இந்த சேவையை பெற அண்ணா சாலை, நந்தனம், கெல்லிஸ், கோடம்பாக்கம், கிண்டி தொழிற்பேட்டை வளாகம், பூக்கடை, அண்ணா நகர் ஆகிய இடங்களில் உள்ள பிஎஸ்என்எல் இணைப்பகங்களை அணுகலாம்.--- நன்றி இந்து