சென்னையில் கனமழை, வெள்ளம் ஏற்பட்டபோது பிஎஸ்என்எல் நிறு வன செல்போன் சேவை தடையின்றி செயல்பட்டதால் மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. அதனை மேலும் வலிமையாக்க வரும் பிப்ரவரி இறுதிக்குள் தமிழகத்தில் 600 டவர்களை அமைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பெய்த கன மழையால் பெரும் வெள்ளம் ஏற் பட்டு மின் விநியோகம் நிறுத்தப் பட்டதால் பெரும்பாலான தனியார் செல்போன் நிறுவனங்கள் தங்களின் சேவையை முறையாக அளிக்க முடியாமல் திணறின. அப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லேண்ட் லைன், செல்போன் சேவை தடை யின்றி செயல்பட்டதால் பொதுமக்க ளுக்கு பெருமளவில் உதவியது.
இது தொடர்பாக பிஎஸ்என்எல் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “வெள்ள சம்பவத்துக்குப் பிறகு பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நம்பிக்கையை மேலும் வலிமை யாக்க கூடுதலாக 600 டவர்களை தமிழகம் முழுவதும் பிப்ரவரி இறு திக்குள் அமைப்பதற்கு பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 350 டவர்களை அமைப்பதற்கான சாதனங்கள் சென்னை வந்துள்ளன. சேவை களின் தரத்தை உயர்த்துவதிலும் பிஎஸ்என்எல் கவனம் செலுத்தவுள் ளது” என்றார்.வெள்ளத்தின்போது லேண்ட் லைன் சேவையிலும் பிஎஸ்என்எல் சாதித்துக் காட்டியதால், பிஎஸ்என்எல் லேண்ட்லைன் இணைப்பை துண்டித்திருந்த பலர் மீண்டும் சேவை வேண்டி விண்ணப்பித்துள்ளனர். பில் கட்டாமல் சேவை துண்டிக்கப்பட்டவர்கள், விருப்பமின்றி சேவைகளை திரும்ப ஒப்படைத்தவர்கள் போன்றவர்கள் பழைய எண் கொண்ட லேண்ட்லைன் இணைப்பை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. இணைப்பு பெற டிசம்பர் 16 முதல் 31 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.சென்னையில் இந்த சேவையை பெற அண்ணா சாலை, நந்தனம், கெல்லிஸ், கோடம்பாக்கம், கிண்டி தொழிற்பேட்டை வளாகம், பூக்கடை, அண்ணா நகர் ஆகிய இடங்களில் உள்ள பிஎஸ்என்எல் இணைப்பகங்களை அணுகலாம்.--- நன்றி இந்து
No comments:
Post a Comment