Thursday, 3 December 2015

டிசம்பர்-3, டாக்டர். ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம்...

இந்திய அரசியல் சாசனத்தில் மிக உயர்ந்த ஆளுமையாக கருதப்பட்ட மற்றும் நாட்டின் முதல் குடிமகன் என கௌரவமாக போற்றப்பட்டகுடியரசு தலைவர்பதவியை ஏற்ற சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர், ‘டாக்டர் ராஜேந்திர பிரசாத்ஆவார். இந்திய குடியரசு தலைவர்கள் வரலாற்றில், அப்பதவியை இரண்டுமுறை அலங்கரித்த  குடியரசு தலைவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு. இவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதானபாரத ரத்னாவிருது வழங்கப்பட்டது. சுதந்திர போராட்ட வீரராகவும், இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய குழுக்களில் ஒருவராகவும் பணியாற்றியவர்  டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆவார். 
கல்வி
டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள்1907 ஆம் ஆண்டு, “கொல்கத்தா பிரிசிடன்சி கல்லூரியில்பொருளியல் துறையில் சேர்ந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர், எம். முதுகலை பட்டபடிப்பில் முதல் மாணவனாக தேர்ச்சிப்பெற்றார். பின்னர், சட்டக் கல்விப் பயின்று, முதல் மாணவனாகத் தேர்ச்சிப்பெற்று தங்கப் பதக்கத்தையும் வென்ற அவர், சட்டத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.
விடுதலைப் போராட்டத்தில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பங்கு
1911 ஆம் ஆண்டு, கொல்கத்தாவில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றிய அவர், 1916 ஆம் ஆண்டு பாட்னாவிற்கு இடம்பெயர்ந்து, பீகார் மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கான உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். தன்னுடைய வழக்கறிஞர் பணியைத் துறந்து, மகாத்மா காந்தியின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு ஒத்துழையாமை இயக்கத்திலும் சேர்ந்தார். மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், 1942 ல்வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்கலந்துகொண்டு கைதுசெய்யப்பட்டு மூன்றாண்டு சிறை தண்டனையும் பெற்றார்.
முதல் குடியரசு தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத்
வெள்ளையனே வெளியேறுஇயக்கத்தில் கைது செய்யப்பட்டு, ஜூன் 15, 1945  ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள்,  1946 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவைத் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டரை ஆண்டுகளுக்கு பின், 1950 ஆம் ஆண்டு இந்தியா முழு குடியரசு நாடாக மாறியது. 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் குடியரசு தலைவராகப் பதவியேற்ற டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1950 முதல் 1964 வரை, இரண்டு ஆண்டுகள் குடியரசு தலைவராக தன்னுடைய பணியை சிறப்பாக செய்தார். இந்திய குடியரசு தலைவர்கள் வரலாற்றில் அப்பதவியை இரண்டுமுறை அலங்கரித்த  குடியரசுத் தலைவர் என்ற பெருமையும் பெற்றார்.
இறப்பு
1962 ஆம் ஆண்டு தன்னுடைய குடியரசு தலைவர் பதவியை நிறைவு செய்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள், 1963 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி காலமானார். இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதானபாரத ரத்னாவிருதை மே 13, 1962 ஆம் ஆண்டில்  வழங்கி யது.

No comments: