Friday 11 December 2015

டிசம்பர் -11, தோழர் K.G.போஸ் நினைவு தினம்...

நான் இந்த உலகில் உயிர் வாழ விரும்பிகின்றேன். இங்கு நடக்கும் சகல அநீதிகளையும் எதிர்த்து அவற்றுடன் எந்த வித சமரசமும் செய்து கொள்ளாமல் தொடர்ந்து போராட விரும்புகின்றேன். இந்தப் போராட்டத்தில் நான் தனி மனிதன் இல்லை. என்னுடன் ஆயிரம் ஆயிரம் தோழர்கள் இருக்கின்றனர். அவர்களே என் உத்வேகத்தின் ஜீவ ஊற்றுக்கள்...தோழர் K. G. போஸின் கடைசிக் கடிதத்திலிருந்து...
நமது அன்பிற்குரிய தலைவர் கே.ஜி.போஸ் நம்மை விட்டு பிரிந்து 41 ஆண்டுகள் உருண்டோடி விட்டன . நமது BSNL நிறுவனத்தை காக்கும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது  மிக சாலச் சிறந்ததாகும்.நிறுவன பாதுகாப்பு மற்றும் ஊழியர் நலன் பாதுகாப்புகளை தொடர்ந்து KGB வழியில் முன்செல்வோம்...
BSNL-யைபாதுகாப்போம்...
BSNLEU-வைவளர்ப்போம்...ஊழியர்நலன்பேணுவோம்...
11-12-15 KGB நினைவு நாளில் சூளுரை ஏற்போம். . .
----என்றும் தோழமையுடன் ...எஸ்.சூரியன்---மாவட்டசெயலர். 

No comments: