Tuesday, 8 December 2015

உலக ஆக்கி லீக் 33 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்ற இந்திய அணி.

உலக ஆக்கி லீக் போட்டியில் நெதர்லாந்தை தோற்கடித்த இந்திய அணி 33 ஆண்டு களுக்கு பிறகுசர்வதேச போட்டிகளில் வெண்கலப்பதக்கத்தை வென்றது.8 முன்னணி அணிகள் பங்கேற்ற உலக ஆக்கி லீக் இறுதி சுற்றுசத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்து வந்தது. இதன் இறுதி போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி சாம்பியன் மகுடத்தை கைப்பற்றியது.அரையிறுதியில் பெல்ஜியத்திடம் தோல்வியுற்ற இந்திய அணி, வெண்கலப்பதக்கம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் பலம் வாய்ந்த நெதர்லாந்தை எதிர்கொண்டது. தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து முன்னிலை பெற்றது.பிறகு, இந்திய வீரர்கள் வரிசையாக கோல் மழை பொழிந்ததால் வெற்றியை நெருங்கினர். கடைசி நிமிடத்தில் நெதர்லாந்து அணி கோல் அடித்து சமன் நிலைக்கு கொண்டுவந்தது.இதையடுத்து, பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்தியா வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இது போன்ற மிகப்பெரிய சர்வதேச போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்வது 33 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும்.

No comments: