Wednesday, 23 November 2016
கர்நாடக இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவு ...
புகழ்பெற்ற கர்நாடகஇசைமேதை பாலமுரளி கிருஷ்ணா செவ்வாய்க்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 86.கடந்த சில மாதங்களாக, உடல் நலக்குறைவால் பாலமுரளி கிருஷ்ணாஅவதிப்பட்டு வந்த நிலையில், சென்னை ஆர்.கே. சாலையிலுள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது.பால முரளிகிருஷ்ணா, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மங்களப்பள்ளி என்ற இடத்தில் 1930 ஆம்ஆண்டு பிறந்தவர். தாய் சூர்ய காந்தம்மாள், தந்தை பட்டாபி ராமய்யா. இருவருமே இசைக் கருவிகளைவாசிப்பதில் தேர்ந்தவர்கள்.இதனால், பாலமுரளி கிருஷ்ணாவுக்கு இயல்பாகவே இசையில் ஆர்வம் ஏற் பட்டது. ஐந்து வயதிலேயே ராகத்தைக் கண்டுபிடிக்கும் ஞானமும், தாள லயமும், ஏழு வயதில் கச்சேரி செய்யும் அளவுக்கான திறமையும் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு அமைந்தது. முரளி கிருஷ்ணா என்பதுதான் இவரின் இயற் பெயர். 8 வயதில் முரளி கிருஷ்ணாவின் முதல் கச்சேரியைக் கேட்டுவிட்டு ‘ஹரிகதா’ புகழ் முசுநுரி சூரிய நாராயண மூர்த்தி பாகவதர்தான், ‘பால’ என்ற அடைமொழியைச் சேர்த்தார்.15 வயதிற்குள் 72 மேள கர்த்தாக்களை ஆளும் திறமையும், அவற்றை பயன் படுத்தி கிருதிகளை உருவாக்கும் அசாத்தியமும் அவருக்கு வாய்த்தது. தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் கீர்த் தனை, பாடல்கள், வர்ணம், ஜாவலி, தில்லானா என அவர் உருவாக்கிய இசைப் படைப்புகள் மட்டும் 400-க்கும் அதிகம். அன்னாருக்கு நமது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தக் கேள்விக்கு இது விடையில்லையே!--- அறிவுக்கடல்
‘இந்தக் கேள்விக்கு இது விடையில்லையே...’ என்றால், இத்தாலிக்கார சோனியாவை ஆளவைக்கப் பார்க்கிறீர்களா என்கிறார்கள். நாம் எப்போது அப்படிச் சொன்னோம்? ‘நான் உழைத்துச் சம்பாதித்த என் பணத்தை செல்லத்தக்கதாக்க, அதாவது செலவு செய்ய உகந்ததாக்க நான் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டும் என்றால் என் உழைப்புக்கு என்ன மரியாதை?’ என்பது மட்டும்தான் கேள்வி. ‘நான் வைத்திருப்பதுதான் கறுப்புப் பணமா?’ என்பதுதான் ஐயம்.வங்கியில் வாங்கி ஏமாற்றிய ரூ.9 ஆயிரம் கோடியுடன் மல்லையா இங்கிலாந்துக்குச் சென்றுவிட்டார். அங்குபோய் இந்திய ரூபாய்செல்லுமா? அப்படியானால், அவரது கறுப்புப் பணம் பணமாகவா இருக்கும்? ஆக, மிகமிகப் பெரும்பகுதி கறுப்புப்பணம் என்பது பணமாக - இந்தியப் பணமாக இருப்பதில்லை. சொத்தாகவோ, வெளிநாட்டு வங்கிகளில் டாலராகவோதான் உள்ளது.
அது சொத்தாக மாறும்வரைதான் கறுப்புப்பணமாக உள்ளது. சொத்தை வாங்கச் செலவு செய்யப்பட்டு சொத்துக்கு உரியவர் வழியாக மீண்டும் புழக்கத்திற்கு வரும்போது அது கறுப்புப் பணமாக இருப்பதில்லை.உதாரணமாக, ஒருவர் தவறான வழியில் ஈட்டிய பணத்தில் ஒரு புதிய வீடு வாங்குகிறார். அந்த வீட்டைக் கட்டி விற்றவர், கட்டிடம்கட்டிய கொத்தனாருக்கும், சித்தாளுக்கும் அதிலிருந்து கூலி தந்தால் அந்தத் தொழிலாளியின் கையில் இருப்பது கறுப்புப்பணமா? இப்போது கைப்பற்றவேண்டியது எதனை? அந்த வீட்டையா, அல்லது அந்தத்தொழிலாளியின் கையிலிருக்கிற பணத்தையா?ஆனால், மோடி அரசு தற்போது செய்வது என்ன? கொத்தனாரையும் சித்தாளையும் வரிசையில் நிறுத்தியதோடு, கையில் மையும் வைத்துவிட்டு, ஓடிப்போன மல்லையாவின் கடனையும் தள்ளுபடி செய்துள்ளது. தாக்குதல் துல்லியமானதாகத்தான் இருக்கிறது, ஆனால் இலக்கு எளிய மக்களாக இருக்கிறார்கள்!1978ல் ரூ.1000 நோட்டுக்கள் தடைசெய்யப்பட்டபோது, அது எளிய மக்களின்கையில் இருந்த நோட்டு அல்ல.
1993ல் எல்ஐசி பணியில் சேர்ந்தபோது என் துவக்கஅடிப்படை ஊதியமே ரூ.980-தான். நடுத்தர வர்க்கம் என்றழைக்கப்பட்ட அரசுஊழியர்களின் ஊதியமே அவ்வளவுதான் என்றால் அதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்னால் ஆயிரம் ரூபாய் நோட்டைப்பயன்படுத்தியவர்கள் பெரும்பணக்காரர்களாகத்தான் இருப்பார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால், இன்றைய நிலை அதுவல்ல.ரூ.700 கூலி பெறும் ஒரு கட்டிடத் தொழிலாளி வார இறுதியில் பெறும் ரூ.4200ல் 8 ரூ.500 நோட்டுக்களும், இரண்டு ரூ.100 நோட்டும்தான் தரப்படுகின்றன. என்ன சம்பாதித்தாலும் கூலித் தொழிலாளர்களின் கூலியில் பெரும்பகுதி அடுத்த நாளே கடைகளுக்கு வந்துவிடும். அப்படிச் செலவு செய்ய முடியாமல், தான் உழைத்து ஈட்டிய கூலியைச் செலவு செய்ய இயலாமல் தவிக்கிறார்கள்.
மாற்றித்தர, ஒரு ரூ.1000 நோட்டுக்குப் பதில் 10 ரூ.100 நோட்டுக்களும், ஒரு ரூ.500 நோட்டுக்குப் பதில் 5 ரூ.100 நோட்டுக்களும் தேவை என்பது டீக்கடைக்காரருக்கும் தெரிந்த கணக்குத்தான். நம்மை ஆளும் டீக்கடைக்காரருக்கு ஏன் தெரியவில்லை?உண்மையில் இது ஏதோ தெரியாமல், தவறுதலாகச் செய்யப்பட்டதல்ல! வெளிநாட்டு கறுப்புப்பணம், ஆளுக்கு ரூ.15லட்சம் என்று விடாமல் கத்திக்கொண்டிருப்பவர்களை அடக்க, ஏதோ நடக்கிறது என்று தோற்றம் ஏற்படுத்த, ஊசி போடுமாறு மருத்துவரை வற்புறுத்தும் நோயாளிக்கு வெறும் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஊசிமூலம் ஏற்றி நம்ப வைக்கிற மருத்துவர் போல, நம்மைநம்ப வைக்க முயற்சிக்கிறார்கள்.
வலித்தால் ஏதோ சிகிச்சை நடக்கிறது என்று நம்பி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏராளமானவர்கள் மெய்ப்பித்து வருகிறார்கள். நாட்டுக்காகத் தியாகம் செய்ய வேண்டும், ராணுவ வீரர்கள் தியாகம் செய்யவில்லையா, மோடிக்கு பதில் யார்.... என்று ஏராளமான வக்காலத்து இல்லாத வக்கீல்கள் வாதம்புரிந்து கொண்டிருக்கிறார்கள். அந்த ராணுவ வீரர்களின் மனைவி, தந்தை போன்றோரும் வரிசையில்தான் நிற்கிறார்கள், அவர்களுக்கும் இதே தொகைதான், இதே மைதான் என்பதை மறந்து விடாதீர்கள்.
எப்போதுமே வெட்கப்பட வேண்டிய செய்திகளைப் பெருமையுடன் பேசுவது பாஜக பரிவாரங்களின் வழக்கம். தங்களதுஆட்சியில் கார்கிலில் ஊடுருவி விட்டார்கள்என்று வெட்கப்படுவதற்கு பதில், விரட்டி விட்டதாகப் பெருமை பேசியவர்கள்! இன்றும் மக்களைச் சிரமப்படுத்தியதையும் பெருமையாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மக்களின் எந்தக் குரலுக்கும் மோடி பதிலளிக்கவில்லை. ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகள் அவரவரின் கற்பனைத்திறனுக்கேற்ப பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே கேள்விக்குத் தொடர்பில்லாத பதில்கள்!
நாட்டிலேயே தலைசிறந்த ஊராட்சி ஒரு கம்யூனிஸ்ட் கிராமம்...
கங்காதேவி பள்ளி நாட்டின் முன்மாதிரியான ஊராட்சியாக திகழ்கிறது. சிறந்த கிராம ஊராட்சி நிர்வாகத்திற்காக தேசிய மற்றும் சர்வதேச அளவிலும் விருதுகளை பெற்ற புகழுக்கு உரியது. குடிநீர் இணைப்பு ஊராட்சியில் உள்ள அத்துணை குடும்பத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. 100 சதவீத கல்வியறிவு மற்றும் எழுத்தறிவு பெற்ற ஊராட்சி, கழிவறைகள், நீர்தேக்கங்கள் பராமரிப்பில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி, இலவச வை-பை வசதி ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. தற்போது இந்த ஊராட்சியின் தலைவராக ராஜமௌலி உள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே கங்காதேவி பள்ளி ஊராட்சியை வளமிக்க தன்னிறைவு பெற்ற பசுமையான பூமியாக மாற்றியது...
Tuesday, 22 November 2016
நமது BSNLலில் நேரடி நியமன JE தேர்வு முடிவுகள்...
அருமைத் தோழர்களே ! கடந்த 25.09.2016 முதல் 29.09.2016 வரை நமது BSNLலில்நேரடி நியமன
JE க்கள் தேர்வுகள் நடத்தப்பட்டன. வெளி சந்தையில், விண்ணப்பங்கள்
கோரப்பட்டு, லட்ச கணக்கான இளைஞர்கள்
நாடு முழுவதும் தேர்வு எழுதினர். அதனை தொடர்ந்து 21.11.2016, அன்று நமது BSNL டெல்லி தலைமையகம் நாடு
முழுவதுக்குமான தேர்வு முடிவுகளை வெளியிட்டது.
நமது தமிழ் மாநிலத்தில் மொத்த
காலி இடங்கள் - 198.
(OC-105, OBC-53, SC-38, ST-2).
தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் நமது மதுரை மாவட்ட BSNLEU சங்கத்தின் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்... தேர்வு முடிவுகள் காண இங்கே கிளிக் செய்யவும்.
C&D ஊழியர்களுக்கு நவம்பர் சம்பளம் முன்பணம்...
அருமைத் தோழர்களே ! 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய
அரசின் அறிவிப்புக்குப் பின் நாட்டு மக்கள் அனைவரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் நவம்பர் மாதச்சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பட்டுவாடா அரசுக்குப் பெரும்
சவாலாக உள்ளது. ஏறத்தாழ 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 58 லட்சம் ஓய்வூ
தியர்களுக்குமாக1 கோடிப்பேருக்கு இம்மாதம் சம்பளப் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.
எனவே... இடைக்கால ஏற்பாடாக மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் ரூ.10,000/=
சம்பள முன்பணமாக கொடுப்பதற்கு மத்தியஅரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை நிதி அமைச்சகம் 17/11/2016 அன்று அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நமது சங்கமும் சம்பள முன்பணம் CASH பணமாகப் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது. அதன் அடிப்படையில் நமது நிர்வாகம் அதற்கான உத்தரவு வெளியிட்டுள்ளது .
மீதமுள்ள சம்பளம் வழக்கம்போல் வங்கிக்கணக்கில் போடப்படும். சம்பள முன்பணம்
அதிகாரிகளுக்கு கிடையாது.சம்பள முன்பணம் வேண்டாம் என்று விரும்பும் ஊழியர்கள்
மட்டும் சம்பந்தப்பட்ட சம்பளப் பட்டுவாடா அதிகாரியிடம்
தங்களது விருப்பத்தை எழுத்துமூலமாக தெரிவிக்க வேண்டும்.
BHARAT SANCHAR NIGAM LIMITED
[ A Government of India Enterprise ]
Office of
the Chief General Manager,
Tamilnadu
Circle, New Administrative Building (4th Floor- B Wing),
No.16,
Greams Road, Chennai-600 006.
[ERP HCM-Payroll Section]
To
The PGMs/Sr.GMs/GMs of All SSAs,
BSNL,
Tamil Nadu Circle.
No. ERP/HCM-Payroll/Genl/2016-17/37 dated at Chennai-600 006, the 21-11-2016
Sub: Salary Advance
for the month of November 2016 to be paid to Non- Executives - Regarding.
*****
Please
find attached a copy of letter No.25(30)/E.Coord/2016 dated 17.11.2016 of
Department of Expenditure for information and necessary action.
Employees, who do not wish to receive the cash pay-out of the part
salary advance amounting to Rs. 10,000/- (Rupees ten thousand) may give their
option in the enclosed proforma to their respective Drawing & Disbursing
Officer by 21st November
2016. In that case, their salary will be credited to their account on
the last working day of November 2016, as usual. In case no option is received
by the said date, it will be presumed that the employee has opted for cash
pay-out and the payment thereof will be disbursed in cash accordingly.
Sd/-
Principal General Manager(Finance),
O/o Chief
General Manager,
Tamilnadu
Circle,
Chennai-600
006.
Monday, 21 November 2016
25-11-16 BSNL அனைத்து சங்கங்களின் தர்ணா . . .
அருமைத் தோழர்களே ! நமது BSNL நிறுவனத்தில் உள்ள 65000 டவர்களை தனியாக பிரித்து, தனிக்கம்பெனியாக்கி அடுத்த கட்டமாக தனியார் கையில் ஒப்படைக்கும் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை ஏற்கனவே, இந்திய நாடு முழுமைக்கும் முதற்கட்டமாக கடந்த 27-10-16 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மத்திய அரசு நமது BSNL பொதுத்துறையை அழிக்க நினைக்கும் திட்டத்திற்கு எதிராக 2-ம் கட்டமாக இந்திய நாடு முழுவதும் எதிர்வரும் 25-11-16 அன்று தார்னா நடத்திட அனைத்து மத்திய சங்கங்கள் சார்பாக அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை தல்லாகுளம் லெவல்-4 வளாகத்தில் 25-11-16 காலை 10 மணி முதல் நடைபெற உள்ள தர்ணா போராட்டத்தில் சங்க பேதம் இன்றி, கேடர் பேதம் இன்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
Saturday, 19 November 2016
BSNLEU சங்கத்தின்மனபூர்வமான வாழ்த்துக்கள்...
அருமைத் தோழர்களே ! நமது மதுரையிலிருந்து JAO பயிற்சி முடித்த கீழ் கண்ட 9 தோழர்களுக்கு JAO நியமனம் செய்யப்பட்டுள்ளது...
1. G. SHANMUGARAJ - NGL
2. R. JOTHIVEL - TVL
3. M. THAKEER - TVL
4. S. INDRA ASOKAN - TR-CMTS
5. K.P. INDHUMATHI - TR-CMTS
6. K. MURUGESAN - TR-SSA
7. A. KARTHIKEYAN - TT
8. M. AKALYA - VGR
9. M. RAVIKUMAR - STP-MA
அநீதி களைய ஆர்ப்பரித்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள்...
தமிழ்நாடு BSNL. தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 11 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களுக்கு உடனடியாக பணி வழங்கக் கோரியும் ஊழியர்களின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெள்ளியன்று (நவ. 18) நடைபெற்றது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 10 பேர் பெண்கள். உயர்நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப 2009ம் ஆண்டு மே மாதம் முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப் பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குதல், BSNL. கார்ப்பரேட் அலுவலக உத்தரவுப்படி ESI,EPF விதிகளை கறாராக அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக் கைகளும் முன்வைக்கப்பட்டன.
BSNL. ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கமும் இணைந்து சென்னையில் தலைமை பொது மேலாளர் அலுவலக வாயிலில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின .மாநிலத் தலைவர் S.செல்லப்பா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய துணைச் செயலாளர் பழனிச்சாமி, மாநில தலைவர் M.முருகையா, மாநிலச் செயலாளர் C.வினோத்குமார், ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் A.பாபு ராதாகிருஷ்ணன், நமது மாவட்டத்திலிருந்து தோழர்.எஸ். சூரியன், தோழர்.சி. செல்வின் சத்தியராஜ், தோழர்.என். சோணைமுத்து ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர்.போராட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஊழியர் சங்க நிர்வாகிகள், ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். நமது மதுரை மாவட்டத்தை சார்பாக 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தொலைத் தொடர்புத் துறையில் மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இங்கு பழைய நிறுவனத்திடம் ஒப்பந்தம் முடிந்தவுடன் புதிய நிறுவனத்திற்கு ஒப் பந்தம் மாறும்.ஆனால் பழைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் புதிய ஒப்பந்த நிறுவனத்திடம் தொடர்ந்து வேலை செய்து வருவார்கள். இதுதான் பல்லாண்டு காலமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறை.இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்தது. அக்டோபர் 1ம் தேதி முதல் பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் ஒப்பந்தம் எடுத்திருந்தது. தொலைத் தொடர்புத் துறை நிர்வாகம், ஊழியர் சங்கத்திடம் அந்த தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் இருப்பார்கள் என உறுதி அளித்தது.
ஆனால் புதிய ஒப்பந்த நிறுவனம் சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில், கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த தேசமணி, பாரதி, மங்கா, பூங்கொடி, கலா, ஜெயா, வரலட்சுமி, அமுதா, ஜெனிபர், தாரா, ஆசிர்வாதம் உள் ளிட்ட தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து விட்டது எனவே, அநீதி களைய 18-11-16 காலை முதல் நடைபெற்ற போராட்டத்திற்கு பின் மாநில நிர்வாகம் நமது தலைவர்களை அழைத்து பேசியது. அதன் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 11 பேருக்கும் மீண்டும் பணி வழங்க மாநில நிர்வாகம் ஏற்றுக்கொண்டுதான் அடிப்படையில் மாலையில் போராட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றது.
Subscribe to:
Posts (Atom)











