நல்ல, ஆரோக்கியமான உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உலகளாவிய லட்சியம் ஒருபுறம் இருக்க, 194.6 மில்லியன் மக்கள் இந்தியாவில் போதிய உணவு இன்றி வாடுகின்றனர் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது இந்திய மக்கள் தொகையில் 15%-க்கும் மேற்பட்ட மக்கள் போதிய உணவின்றி தவித்து வருகின்றனர். உலகிலேயே இது அதிகமானதாகும். சீனாவை விடவும் இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு கட்சியும் பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி என்ற ஜோடனை மொழியைப் பிரச்சாரம் செய்தே ஆட்சியைப் பிடிக்கின்றனர். ஆனால் உயர் பொருளாதார வளர்ச்சி ஒருபோதும் உணவுப் பற்றாக்குறையை தீர்ப்பதில்லை என்பதையே இந்த ஐ.நா. அறிவிப்பு காட்டுகிறது."உயர் பொருளாதார வளர்ச்சி அதிகப்பேர்களுக்கான உணவு நுகர்வாக மாற்றம் அடைவதில்லை, நல்ல, ஆரோக்கியமான உணவு என்பதை இங்கு விட்டுவிட்டால் கூட உணவே கிடைக்காதவர்கள் எண்ணிக்கையே அதிகமாகி வருகிறது. அதாவது ஒட்டுமொத்த வளர்ச்சியில் ஏழைகள், வறியோர்கள் பயனடை வதில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது” என்று 'உலகில் உணவு பாதுகாப்பின்மை நிலைமைகள்' என்ற அறிக்கை கூறுகிறது.மேலும், “வளரும் நாடுகளில் கிராமப்புற பகுதிகளில் ஊட்டச்சத்து குறைவுள்ளவர்கள் அதிக விகிதத்தில் உள்ளனர். எனவே விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களை ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் உட்பட்ட அங்கமாக இணைத்து செயல்பட சிந்திக்க வேண்டும். இந்தியாவில் ஊட்டச்சத்து குறைவைக் களைந்ததில் 36% முன்னேற்றம் உள்ளது. அதாவது 1990-92களை ஒப்பிடும் போது. உலகில் மொத்தம் 79 கோடிக்கும் மேற்பட்டோர் உணவுப்பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடுடையோர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகள் 62% உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தெற்காசிய பகுதி 5 ஆண்டுகளுக்கு முன்னதாக எடைகுறைவான குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகமுள்ள பகுதியாக இருந்தது. ஆனால் இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது தெற்காசிய நாடுகளின் எடைகுறைவான குழந்தைகளின் எண்ணிக்கை 1990-ம் ஆண்டில் 49.2% ஆக இருந்தது. 2013-ல் 30% ஆக குறைந்துள்ளது.எடைகுறைவுக்கு வெறும் கலோரிகள், புரோட்டீன்கள் குறைபாடு மட்டுமே காரணம் இல்லை. சுகாதாரமின்மை, நோய், சுத்தமான தண்ணீர் இன்மை. ஆகியவற்றால் ஊட்டச்சத்தை உள்வாங்குவதில் உடல் வலுவிழந்து விடுகிறது. மேலும் சில காரணிகளாவன: பொருட்களின் விலை உயர்வு, உணவு மற்றும் எரிபொருட்களின் அதிகமாகிக் கொண்டிருக்கும் விலைகள், வேலைவாய்ப்பின்மை ஆகியவையும் உணவுப்பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணிகள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, 29 May 2015
மோடி ஆட்சியின் லட்சணம் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிர்ச்சித் தகவல்.
பிரதமர் நரேந்திர மோடியின்ஓராண்டு ஆட்சியில் எந்த வேலை வாய்ப்பும் ஏற்படுத்தப்படவில்லை; உற்பத்தி அதிகரிக்கவில்லை; எந்த ஏற்றுமதி ஆர்டர்களும் கிடைக்கவில்லை என கார்ப்பரேட் நிறுவனங்களே ஒப்புக் கொண்டிருப்பதாக பிசினஸ் லைன் மற்றும் பிசினஸ் டுடே உள்ளிட்ட வணிகப் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.இது தொடர்பாகபிசினஸ் டுடே மற்றும் பிசினஸ் லைன் இதழ்கள் வெளியிட்ட செய்திகளில் கூறியுள்ளதாவது:மோடியின் திட்டங்களான `மேக் இன் இந்தியா’ என்றழைக்கப்படும் இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் திட்டம் மற்றும் இந்தியத் திறமை( ஸ்கில் இந்தியா ஆகியவை எந்த முதலீட்டையும் கொண்டு வரவில்லை என்பதோடு, வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதிலும் அது தோல்விக்கான அறிகுறிகளையே காட்டுகிறது.சமீபத்திய தொழிலாளர் அமைப் பின் ஆய்வு, “வேலைகளை உருவாக்கு வதில் மிகவும் மந்தமான போக்கே காணப்படுகிறது. பெரிய அளவில் வேலை வர்ய்ப்புகளை உருவாக்கும் உற்பத்தித் துறை யிலும் கட்டுமானத்துறையிலும், சுரங்கத்
தொழிற் சாலைகளிலும் வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளதால் அவற்றால் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை.” அன்டல் இன்டர்நேஷனல் இந்தியா என்ற கார்ப்பரேட் கம்பெனியின் அதிபர் ஜோசப் தேவசியா வேலைகளைஉருவாக்குவது இன்னும் நிறைவேறாத கன வாகவே உள்ளது என்று குறிப்பிடு கிறார்.ஜே கே டயர் இண்டஸ்ட்ரீஸ் என்றஇந்திய மற்றும் மெக்சிகோ கம்பெனி களின் அதிபர் விஜய் தேஷ்பாண்டே, மேக் இன் இந்தியா பிரச்சாரம் வெறும்அரசியல் வித்தையாக இருக்கக்கூடாது எனத் தெரிவித்தார்.இன்னொரு பக்கம் குளோபல் மேன்பவர் குழுமம் என்ற, வேலைக்கு ஆள் எடுக்கும்பன்னாட்டுக் கம்பெனியின் கணக்கெடுப்பின்படி, 58 விழுக்காடு வேலைக்கு ஆள் கிடைக்காமல் தவிப்பதாகவும் கூறுகின்றனர். இதில் 38 விழுக்காடு திறன்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.இந்த மேன்பவர் குழுமத்தின் இயக்குநரும் தலைவருமான ஸ்ரீகாந்த் ரெங்கராஜன், வேலை வாய்ப்பு உருவாக்குவதில் ஏராளமான எதிர்ப்பார்ப்புகள் உள்ளன என்று கூறியுள்ளனார்.டட்சே போர்சே என்ற நிறுவனத் தின் ஆய்வு அறிக்கை, நாட்டின் உற்பத்தி யும் ஏற்றுமதிக்கான ஆர்டர்களும் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய நிலை எப்படி இருந்ததோ அதே நிலைக்கு சென்று விட்டதாக கூறியுள்ளது, எம்என்ஐ என்ற வியாபாரம் குறித்த அளவீடுகளை காட்டும் அமைப்பு,கடந்த ஏப்ரலில் 63.9 பங்கு சந்தை வளர்ச்சி 2.5 விழுக்காடாக குறைந்து விட்டது என்று கூறியுள்ளது.கடந்த 2004 லிருந்தே உற்பத்தியானது மிகவும் குறைந்துவிட்டது என அதன் அறிக்கை கூறியுள்ளது. கம்பெனிகளின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி ஆர்டர்கள் குறைந்துவருகின்றன. தற்போதைய மே மாதத் தில் 57.1 சதவீதமாக குறைந்து விட்டது.ஏற்றுமதி ஆர்டர்கள் கடந்த 2013லிருந் தது போன்று
53.6 விழுக்காடாக குறைந்து விட்டது. எனவே மேக் இன் இந்தியா தோல்வி அடைந்து விட்டது என அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
27.05.15 பழனியில் நடைபெற்ற பாராட்டு விழா ...
அருமைத் தோழர்களே ! நமது BSNLEU பழனி கிளை சார்பாக, இம்மாதம் பணிநிறைவு பெறும் தோழர். A. மாரிமுத்து, TM-க்கு 27.05.15 அன்று பழனியில் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்சிகள் ...
இனிய விழாவை நடத்திய பழனி கிளைக்கு நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களை உரித்தாக்குகின்றோம்.---என்றும் தோழமையுடன், எஸ். சூரியன், D/S-BSNLEU.ஜூன்-10 சென்னை CGM (o)-ல் இணைந்த தார்ணா...
அருமைத் தோழர்களே ! ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைகளுக்காக எதிர்வரும் ஜூன்-10 அன்று சென்னை CGM அலுவலகத்தில் இணைந்த பெருந்திரள் தார்ணா நடத்திட மாநில சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன .... விபரம் காண இங்கே கிளிக் செய்யவும்.
Thursday, 28 May 2015
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதில்லை: மன்மோகன் சிங்.
அரசு அதிகாரத்தை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தியதில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில், அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனின் சொல்படி நடக்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மன்மோகன் சிங் மிரட்டினார் என்று இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ள நிலையில், இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.
இதுதொடர்பாக தில்லியில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு சார்பில் புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டில் அவர் பேசியதாவது:
என்னையோ, எனது குடும்பத்தினரையோ அல்லது நண்பர்களையோ வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு அதிகாரத்தை ஒருபோதும் நான் தவறாக பயன்படுத்தியது இல்லை. மக்களின் கவனத்தை தேவையில்லாத விவகாரங்களை நோக்கி திசை திருப்ப வேண்டும் என்று பாஜக அரசு விரும்புகிறது. அதற்காகவே, ஊழல் குறித்து பாஜக அரசு திரும்பத் திரும்ப பேசி வருகிறது.
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது எதிர்த்த திட்டங்களை தற்போது தங்களின் திட்டம் என்று தெரிவித்து, புதிய பெயரில் விளம்பரப்படுத்தி வருகிறது பாஜக அரசு. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் திட்டத்தைத்தான் "இந்தியாவில் உருவாக்குவோம்' என்ற பெயரில் மோடி அரசு செயல்படுத்தியுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியில் கொள்கை முடக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மறுக்கிறேன்.
நாங்கள் ஆட்சியில் இருந்து விலகியபோது, உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் 2ஆவது நாடாக இந்தியா இருந்தது. ஆனால் தற்போதைய ஆட்சியின் கீழ், பொருளாதார நிலை பலவீனமாக இருக்கிறது.
மதவாதத்தை ஊக்குவிக்கிறது பாஜக அரசு: அதிகபட்ச பாகுபாடு, மதவாதம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக வரலாற்றை மோடி அரசு மாற்றி எழுதுகிறது. எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குகிறது.
ஜனநாயக அமைப்புகளுக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி வேகத்தை விரைவுபடுத்துகிறோம் என்ற போர்வையில், அரசின் ஒட்டுமொத்த கட்டமைப்புக்கும் பாதிப்பு ஏற்படுத்தப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரமானது, பாஜக அரசு தெரிவிப்பதுபோல் சிறப்பானதாக இல்லை. கிராமப்புறங்களில் இருப்போர் கடும் துன்பத்தில் உள்ளனர். இதேபோல், நாட்டில் முதலீடுகள் அதிகரிக்கவில்லை. ஏற்றுமதி அளவு குறைந்து கொண்டிருக்கிறது. விவசாயப் பொருள்களின் உற்பத்தி குறைந்து வருவதால் விவசாயிகள் துன்பத்தில் உள்ளனர் என்றார் மன்மோகன் சிங்.
மதுரையில் உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் . . .
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மோட்டார் ஆப்ரேட்டர், துப்புரவுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.15 ஆயிரத்தை அகவிலைப்படியுடன் வழங்கக்கோரி மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி- உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் ( சிஐடியு) சார்பில் மே 25 அன்று வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை பெத்தானியாபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் கே.தங்கவேல் பாண்டியன் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றியத் தலைவர் நல்.மூர்த்தி முன்னிலை வகித்தார். மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை, சிஐடியு மாநிலச் செயலாளர் வீ.பிச்சை, புறநகர் மாவட்டச் செயலாளர் பொன்.கிருஷ்ணன், மாவட்டத் தலைவர் கே.அரவிந்தன், பொருளாளர் வி.பிச்சைராஜன், கே.தர்மலிங்கம், எம்.சேதுராமு,பி.முத்துராஜா ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஜூன் -8 TO ஜூலை -7வரை 1 மாத தொடர் இயக்கம்.
அருமைத் தோழர்களே ! நமது BSNL தரை வழி தொலை பேசி இரவு 9 முதல் காலை 7 மணி வரை இலவச வசதியை மக்கள் மத்தியில், ஜூன் -8 TO ஜூலை -7 வரை 1 மாத தொடர் இயக்கமாக அனைத்து மட்டங்களிலும் FORUM சார்பாக நடத்த அறைகூவல் விடுக்கப் பட்டுள்ளது. .... மாநில சங்க சுற்றறிக்கை காண இங்கே கிளிக் செய்யவும்.
Wednesday, 27 May 2015
செப். 2 வேலை நிறுத்தம் - மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல்.
புதுதில்லியில் செவ்வாயன்று நடைபெற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சிறப்பு மாநாட்டில் சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென் எம்.பி., உரையாற்றினார்.
மத்திய அரசின் தொழிலாளர் நல விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து வரும் செப்டம்பர் 2 அன்று அகில இந்திய வேலை நிறுத்தம் நடத்திட மத்தியத் தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.சிஐடியு, ஏஐடியுசி உட்பட 13 மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்புகளின் சம்மேளனங்கள் பங்கேற்ற தொழிற் சங்கங்களின் சிறப்பு மாநாடு 26.05.15 செவ்வாய்க்கிழமை புதுதில்லி, மாவலங்கார் அரங்கில் நடைபெற்றது.சிஐடியு அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்மநாபன், பொதுச் செயலாளர் தபன்சென் எம்.பி, ஏஐடியுசி பொதுச் செயலாளர் குருதாஸ் தாஸ் குப்தா எம்.பி., உட்பட மத்திய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் இச்சிறப்பு மாநாட்டில் பங்கேற்றார்கள். குறைந்தபட்ச ஊதியம் 15 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் மற்றும் சமூக நலத்திட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என்கிற தங்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்பதுடன் தற்போது தொழிலாளர் நலன்களுக்கு விரோதமான முறையில் தொழிலாளர் சட்டங்களை மாற்றும் முயற்சிகளிலும் இறங்கியுள்ளது.இதனைக் கண்டித்து வரும் செப்டம்பர் 2 அன்று அகில இந்திய அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதென்று சிறப்பு மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.
26-05-2015 அன்று 11 மத்திய தொழிற்சங்கங்கள் பங்கேற்ற இக் கருத்தரங்கில் நமது BSNLEU சங்கம் சார்பாக நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு , தலைவர் தோழர் பல்பீர் சிங் மற்றும் துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி ஆகியோர் பங்கேற்றனர் .மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கினை எதிர்த்தும் , கார்பரேட்களுக்கு ஆதரவான மத்திய அரசின் போக்கை கண்டித்தும் வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் செய்வது என முடிவு அக் கருத்தரங்கில் எடுக்கப்பட்டு உள்ளது . நமது சங்கம் அம் முடிவை இதய பூர்வமாக ஏற்று கொண்டு உள்ளது .
Subscribe to:
Posts (Atom)













