Thursday 28 May 2015

மதுரையில் உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் . . .

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மோட்டார் ஆப்ரேட்டர், துப்புரவுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.15 ஆயிரத்தை அகவிலைப்படியுடன் வழங்கக்கோரி மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி- உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் ( சிஐடியு) சார்பில் மே 25 அன்று வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை பெத்தானியாபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் கே.தங்கவேல் பாண்டியன் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றியத் தலைவர் நல்.மூர்த்தி முன்னிலை வகித்தார். மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை, சிஐடியு மாநிலச் செயலாளர் வீ.பிச்சை, புறநகர் மாவட்டச் செயலாளர் பொன்.கிருஷ்ணன், மாவட்டத் தலைவர் கே.அரவிந்தன், பொருளாளர் வி.பிச்சைராஜன், கே.தர்மலிங்கம், எம்.சேதுராமு,பி.முத்துராஜா ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments: