Thursday 7 May 2015

கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் ! பிறந்த தினம் மே- 7.

ஜன கண மன பாடலை இயற்றிய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம் மே 7. கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர்.மகாகவி ரவீந்திரநாத் தாகூர்!
தாகூர்... வங்கம் ஈன்றெடுத்த இணையற்ற புதல்வர். இளம் வயதில் எண்ணற்ற கலாசாரங்களின் சங்கமம் நிகழ்ந்த வீட்டில் பிறந்து வளர்ந்ததால், அவரின் சிந்தனை எண்ணற்ற தளங்களைத் தொட்டது.இங்கிலாந்திற்கு சட்டம் படிக்கப் போய், அதன் மீது மனம் ஒட்டாமல் திரும்பினார். ஏகத்துக்கும் பயணம் செய்வதில் விருப்பம் கொண்ட இவர் ஒரு நாள் நதியின் மீது படகினில் போய்க்கொண்டிருந்தார். அப்பொழுது விளக்குகள் வீசிய காற்றில் அணைந்துபோயின. நதியின் சலனமற்ற தன்மையை பார்த்துக்கொண்டே ஸ்தம்பித்து நின்றார். அங்கேதான் தாகூர், மகாகவி தாகூர் ஆனார்.வீட்டின் நிர்வாகத்தை கையில் எடுத்துக்கொண்ட தாகூர், கல்விமுறை குழந்தைகளின் மீது வன்முறையை கையாள்வதாக உணர்ந்தார். இயற்கையானச் சூழலில் பிள்ளைகள் கற்கவேண்டும் என விரும்பினார். அமைதியின் உறைவிடம் என பொருள் தரும் சாந்தி நிகேதனை உருவாக்கினார். அதில் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார். ஆங்கிலேய அரசிடம் எந்த சூழலிலும் கையேந்த மாட்டேன் என சொல்லி இந்தியர்களின் நிதியுதவியிலேயே அப்பள்ளியை நடத்தினார்அற்புதமான பல கவிதைகள் எழுதினார். அவரின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டதால் மேற்கின் கவனம் பதிந்து கீதாஞ்சலி நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது. ஆசியாவின் முதல் நோபல் பரிசு இவருக்கே கிடைத்ததுஆங்கிலேய அரசின் ஜாலியான்வாலாபாக் படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தன்னுடைய சர் பட்டத்தை துறந்தார்.தான் இயற்றிய பாடல்களுக்குத் தானே இசையும் அமைத்திருந்தார். அவை ரவீந்திர சங்கீதம் எனும் பெயரில் இன்றும் பாடப்படுகின்றன. நல்ல ஓவியர், நாவலாசிரியர், சிறுகதை வல்லுநர், நாடக ஆசிரியர் என எண்ணற்ற முகங்கள் இவருக்குஇந்தியாவின் 'ஜன கண மண' மற்றும் வங்காள தேசத்தின் 'அமர் சோனார் பங்களா' எனும் இரண்டு தேசிய கீதங்களுக்கு ஆசிரியர் இவர் ஒருவரே.

No comments: