சிதம்பரம் அண்ணாமலைப் பல்க லைக் கழக விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்கவேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சிதம்பரம் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் சேலம் மாவட் டத்தை சேர்ந்த மாணவி சுருதி மருத்து வம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பல்கலைக்கழக நூலகத்திற்கு சென்றவர் இரவுநெடுநேரமாகியும் விடுதிக்கு திரும்ப வில்லை. எனவே, அவரது செல்பேசியில் தொடர்பு கொண்டபோது அனைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி யடைந்த சக மாணவிகள் பல்கலைக்கழக நிர்வாகம், காவல் துறை,மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில், அடுத்த நாள் அதி காலை 5 மணிக்கு பல் மருத்துவக் கல்லூரி அருகே உள்ள கார் ஷெட்டில் மாணவி சுருதி மயக்க நிலையில் கிடந் துள்ளார். அவரது தலை,கழுத்தில் பலத்தகாயமும், ஆடைகள் கிழிந்தி ருந்தது. இந்நிலையில், மீட்கப்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.பின்னர், மயக்கம் தெளிந்தபோது மாணவியிடம் விசாரணை செய்ததில், நூலகத்திற்கு சென்று விடுதிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தபோது இரண்டு பேர் தலையில் கட்டையால் பலமாக அடித்தவுடன் மயங்கி விழுந்ததாகவும், கையில்இருந்த செல்போன்,தங்கசெயினை பறித்துக்கொண்டு கொடுமைப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவத் திற்கு கடும் கண்டனம் தெரிவித்தும் மாணவிகளுக்கு உரிய பாதுகப்பு வழங்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தின் தலை மையில், மாணவியின் பெற்றோர்களும், சக மாணவிகளும் மருத்துவக் கல் லூரியை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் பிரதாப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அளித்த வாக்குறுதியை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.இது குறித்து இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சுனில்குமார் கூறுகையில், இது போன்ற சம்பவம் அடிக்கடி நடக்கிறது. மாணவிகளுக்கு கல்லூரிக்குள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும், புறகாவல்நிலையம் அமைக்கவேண்டும் என்றார்.பொறுப்பற்ற காவல்துறை மாணவியை காணவில்லை என்று சகமாணவிகள் அருகில் உள்ள அண்ணாமலைநகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து ள்ளனர். அதற்கு காவல் துறையினர் ஏளனமான முறையில் இரவு இருந்து விட்டு காலை வந்துவிடுவார் என்று நகைப்புடன் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment