Sunday, 3 May 2015

சிறுமி இறந்தது கடவுளின் விருப்பம்? பஞ்சாப் அமைச்சர்.


சண்டிகார்: ''ஓடும் பஸ்சில், பாலியல் தொல்லைக்கு ஆளாகி, சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், கடவுளின் விருப்பம்,'' என, பஞ்சாப் கல்வி அமைச்சர் சுர்ஜித் சிங் ராக்ரா கூறியது, சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளதுபலாத்கார முயற்சி:
பஞ்சாபில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான அகாலி தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மோகா மாவட்டத்தில், சமீபத்தில் ஒரு பெண், தன், 14 வயது மகளுடன், பஸ்சில் சென்றார். பஸ்சில் இருந்த நடத்துனர் மற்றும் சிலர், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். அதற்கு, சிறுமியின் தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், சிறுமியை யும், அவரின் தாயாரை யும் பஸ்சில் இருந்து துாக்கி வீசியது. இதில், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த பஸ், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் குடும்பத்தினருக்கு சொந்தமானது. இந்த விவகாரம், பஞ்சாபில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று, முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன இந்நிலையில், பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் சுர்ஜித் சிங் ராக்ரா கூறியதாவதுசிறுமிக்கு நிகழ்ந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆனால், இது, கடவுளின் விருப்பம். இயற்கை மற்றும் கடவுளின் விருப்பத்தை யாரும் தடுக்க முடியாது. விபத்துகளை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்மறியல்அமைச்சரின் பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, சிறுமி யின் இறப்புக்கு நியாயம் கேட்டு, எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சியினர், முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் உருவ பொம்மையை எரித்து, போராட்டம் நடத்தினர். 'சிறுமியின் குடும்பத்துக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தினர். சிறுமியின் உடல், தொடர்ந்து மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையிலேயே வைக்கப்பட்டுள்ளது. 'நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம். என் மகள் இறப்புக்கு காரணமான, பஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான முதல்வரின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என, சிறுமியின் தந்தை கூறியுள்ளார். இதனால், பஞ்சாபில் பதற்றமான சூழல் நிலவுகிறது

No comments: