தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் மே 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.ஏழாவது ஊதியக் குழு நடவடிக்கைகளை விரைவு படுத்துவது, ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தும் வரை இடைக்கால நிவாரணம் வழங்குதல், அஞ்சல் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 6-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் நாடு தழுவிய அளவில் அஞ்சல் துறை ஊழியர்கள் காலவறையற்ற போராட்டம் நடத்த உள்ளனர்.ஊழியர்கள், அலுவலர்கள் என துறையின் பெரும்பாலானோர் பங்கேற்க உள்ளதாக அகில இந்திய அஞ்சல் துறை ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் போராட்டம் காரணமாக வரும் 6-ஆம் தேதி முதல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் அஞ்சல் சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் அஞ்சல் அலுவலகங்கள் இயங்காது என்று தெரிகிறது.இந்தியாவில் அஞ்சல் துறையில் 4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வரும் நிலையில் இந்தப் போராட்டம் மிகப் பெரிய அளவில் அமையும் என ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.அஞ்சல் ஊழியர்கள் போராட்டம் வெற்றிபெற நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.
No comments:
Post a Comment