Wednesday 13 May 2015

12.05.15 -ஆண்டிபட்டியில் அருமையான உடன்பாடு . . .

அருமைத் தோழர்களே ! ஆண்டிபட்டியில் உதவி கோட்ட பொறியாளர் புதிதாக பொறுப்பேற்ற பிறகு அணுகு முறையில் ஏற்பட்ட வித்தியாசத்தை களைய வேண்டுமென நமது சங்க நிர்வாகிகள் பேட்டிகண்ட ஓரிரு தினங்களி லேயே பிரச்சனையை ஸ்தல மட்ட அதிகாரியின் அணுகு முறையில், ஆவேசமான நமது கிளச்சங்கம் 13.05.15 அன்று ஆர்ப்பாட்டம் என அறைகூவல் விடுத்தது. செய்தி அறிந்த உடன் SNEA மாவட்டச் செயலரும், மாவட்டத்தலைவரும் நமது மாவட்டச் செயலரை அலைபேசியில் தொடர்பு கொண்டனர். SNEA மாவட்டச் சங்கத்தின் உடனடி தலையிட்டை நமது மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.
அதன் அடிப்படையில் 12.05.15 அன்று ஆண்டிபட்டி தொலைபேசியகத்தில், நமது BSNLEU + SNEA இரு சங்க நிர்வாகிகளும். முன்னணி தோழர்களுமாக கீழ்கண்டடோர்  தோழர்கள், M.சந்திரசேகர்,SNEA, M.பாஸ்கரன்,SNEA, V.தங்கமணி, SNEA, S.சூரியன்,BSNLEU, P.  சந்திரசேகர், BSNLEU, T.K.சீனிவாசன்,BSNLEU, P.தேசிங்கு,BSNLEU, A.தமிழ்வாணன்,BSNLEU, J.மைக்கேல் சிரில்ராஜ்,BSNLEU,N.முத்துரத்தினம்,BSNLEU,J.ஜேம்ஸ்,BSNLEU,A.அற்புதராஜ்,BSNLEU,  மற்றும்
N. தங்கப்பன் ,BSNLEU   ஆகியோர் கிட்டத்தட்ட ஒரு 3 மணி நேரம் மனம்திறந்த பேச்சு வார்த்தையை  நடத்தி அருமை யான, ஒரு சுமுக உடன்பாட்டை எட்டியது என்பது மிக மிக பாராட்டுக்குரியது.ஆண்டிபட்டியில் பணிபுரியும் அனைவரும் எந்த கருத்து வித்தியாசம் இல்லாமல் BSNL வளர்ச்சிக்கு இணைந்த செயல்பாட்டை அமலாக்குவது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 13.05.15 அன்று நடக்க விருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம்ரத்து செய்யப்பட்டது.  நல்ல உடன்பாடு காண ஒத்துழைத்த அனைவருக்கும் நமது நன்றியும், பாராட்டுக்களும். . . .என்றும் தோழமையுடன், எஸ். சூரியன், D/S-BSNLEU.

No comments: