Tuesday, 5 May 2015

மோடி அரசின் கொள்கைகள் மக்களுக்கு பயனளிக்காது. . .

நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கொள்கைகள் மக்களுக்கு பயனளிக்காது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்சீதாராம்யெச்சூரிதெரிவித்தார்.
பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். யெச்சூரி மேலும் கூறியதாவது:
 நரேந்திர மோடி அரசின் "இந்தியாவில் தயாரிப்போம்' என்ற கோஷம் சரியல்ல. அது "இந்தியாவால், இந்தியாவுக்காக தயாரிப்போம்'' என்று இருக்க வேண்டும். மத்திய அரசின் கொள்கைகள் எதுவும் பொதுமக்களுக்கு பயனளிக்காது. அதற்கான காரணங்களைஎன்னால்கூறமுடியும்
 அதிக அளவில் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக மத்திய அரசு சலுகைகளை அளிக்கிறது. அதேபோல், இந்தியப் பெருநிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்யவும் அரசு சலுகைகளை அளிக்கிறது.
 இதற்கான காரணம் என்னவென்று இப்போதைய அரசு கூறுவதும், முந்தைய மன்மோகன் சிங் அரசு கூறியதும் ஒன்றுதான். "அதிக அளவிலான முதலீடுகளால் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்பட்டு, அதன் மூலம் பொருளாதாரம் அதிக அளவில் வளர்ச்சி காணும்' என்பதே அந்தக் காரணம். ஆனால், இந்தக் கருத்தில் பெரிய குறைபாடு உள்ளது
 நமது வளங்கள் கொள்ளை போகக் கூடாது: அவர்கள் கூறுவது போல் முதலீடுகள் வந்தாலும் கூட, உற்பத்தித் துறைக்கு அந்த முதலீடுகள் வந்தால்தான் அது அர்த்தமுள்ளதாக இருக்கும். முதலீடுகள் என்பவை, இந்தியாவில் உற்பத்தித் திறன்களை அதிகரிக்காமல், நமது வளங்களைக் கொள்ளையடிக்கவும், நிறுவனங்கள் தங்கள் லாபத்தை அதிகரித்துக் கொள்வதற்கும் செய்யப்படுபவையாகஇருக்கக்கூடாது.
 தற்போது உலக அளவில் பொருளாதாரம் தேக்க நிலையில் உள்ளது. கடந்த ஆண்டில் நமது ஏற்றுமதி 26 சதவீதம் சரிந்தது
 அரசின் கொள்கைகளின் விளைவாகவும், வளர்ந்து வரும் வேலைவாய்ப்பின்மையாலும் மக்களின் வாங்கும் திறன் சரிந்து வருகிறது.
 எனவே, நமது மக்களை பொருளாதார ரீதியில் வலுவானவர்களாக மாற்றாத வரை, அதிக முதலீடு என்பது அதிக வளர்ச்சியை ஏற்படுத்தாது. மிகப்பெரும் அளவில் அரசே முதலீடுகளைச் செய்வதன் மூலமே நமது மக்களை பொருளாதார ரீதியில் வலுவானவர்களாகமாற்றமுடியும்
 வெளிநாட்டு மூலதனத்துக்கும், பெருநிறுவனங்களின் முதலீடுகளுக்கும் மிகப்பெரிய அளவில் வரிச்சலுகைகள் அளிக்கப்படுவது தவறு. அது மிகப்பெரிய தொகையாகும். சுமார் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும். நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி, ஒவ்வோர் ஆண்டும் நிதி மசோதாவில் முடிவு செய்வதன்படி அந்த வரிகளை அரசு வசூலிக்க வேண்டும்.
 இந்த வரிகளை வசூலித்து, அவற்றை சமூக, பொருளாதார உள்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்ய வேண்டும். அதாவது, சுகாதாரம், கல்வி, சாலைகள், கால்வாய்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்பட வேண்டும்.
 வேலைவாய்ப்பு: இவ்வாறு செய்வது மிகப்பெரிய அளவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதன் மூலம் வேலைவாய்ப்பு பெறும் இளைஞர்கள் பெறும் ஊதியத்தால், வீட்டு நுகர்வு அதிகரிக்கும். இதனால் இந்திய உற்பத்தித் துறையும் தொழில்துறையும்செழிப்படையும்.
 பாஜகவின் தேர்தல் பிரசாரமானது மக்களிடையே பல்வேறு விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியது. ஆனால், அவற்றை நிறைவேற்றுவதற்கான எந்த செயல்திட்டத்தையும் மத்திய அரசால் அமல்படுத்த முடியவில்லை என்றார் யெச்சூரி.... தீக்கதிர் 

No comments: