Wednesday, 27 May 2015

அரசு பள்ளியை பாதுகாக்கக் கோரி மாணவர்கள் சைக்கிள் பிரச்சாரம்

அரசுப் பள்ளிகளை பாதுகாக்கக் கோரியும், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மதுரை, இராமநாதபுரத்தில் சைக்கிள் பிரச்சாரம் நடைபெற்றது.மாணவர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி முன்பிருந்து பிரச்சாரம் துவங்கியது. சைக்கிள் பிரச்சாரத்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன் துவக்கி வைத்துப் பேசினார். மாநில துணைத்தலைவர் வீ.மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் .செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் கே.முத்து, வேல்தேவா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர் மாவட்டச் செயலாளர் கோபிநாத், மாவட்ட பொருளாளர் குரோணி ஆகியோர்உட்பட பலர் பங்கேற்றனர். இராமநாதபுரம்மாணவர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்டக்குழு சார்பில் பார்த்திபனூரில் இருந்து பரமக்குடி வரை 15க்கும் மேற்பட்ட இடங்களில் சைக்கிள் பிரச்சாரம் நடைபெற்றது.பார்த்திபனூரில் துவங்கிய பிரச்சாரத்தை சங்க மாநில துணைத்தலைவர் மாரியப்பன் கொடியசைத்து துவக்கிவைத்தார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார். மேலப்பெருங்கரை, கொத்தங்குளம் ,வடக்கூர், கமுதக்குடி , எமனேஸ்வரம், பரமக்குடி நகர் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. மாநில துணைச்செயலாளர் தி.ராஜா, மாவட்டச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் மாவட்ட நிர்வாகி எம்.ராஜ்குமார், மாவட்ட நிர்வாகிகள் முருகானந்தம், மகேந்திரபாண்டி, இராஜமார்த்தாண்டம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆதிரெத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments: