அருமைத் தோழர்களே 1 உலகம் எங்கும் மே .1 அன்று உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதனது ஒரு பகுதியாக நமது மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் நமது BSNLEU சங்க கொடியை ஏற்றி உற்சகமாக விழாவை நடத்தி உள்ளனர். முத்தாய்பாக மதுரை பொதுமேலாளர் அலுவலகத்தில் கொடியேற்று விழா அனைத்திலிருந்தும் மாறுபட்டு மிகவும் சக்தியாக, சிறப்பாக நடைபெற்றது. நிகழ்சிக்கு தோழர்.L.செல்வராஜன் தலைமை வகுத்தார். மேமாதம் பணிநிறைவு செய்ய உள்ள நமது முன்னணி உறுப்பினர் தோழர்.A.முபாரக், நமது சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டச் செயலர் தோழர்.எஸ். சூரியன் மேதினம் குறித்தும், கடமைகள் குறித்தும் எடுத்துரைத்தார். இந்நாளில் அனைவரும் எடுக்க வேண்டிய உறுதி மொழி குறித்தும் எடுத்தியம்பினார்.
அதன்பின் தோழர்.எ. முபாரக் தனது ஈகை உணர்வால் பொது மேலாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டு இருக்கும் ஒப்பந்த ஊழியர்கள்,மற்றும் மனமகிழ் மன்ற "கிளப் பாய்" ஆகியோருக்கு புத்தாடை+ஒருநாள் சம்பளம்+ மதிய உணவு ஆகியவற்றை அன்பளிப்பாக, மாவட்ட செயலர், தோழர்.எஸ். சூரியன் கையால் வழங்க பட்டது, தோழர். முபாரக் செய்த உதவி அனைவரின் பாராட்டை பெற்றது... மே தின வாழ்த்துக்களுடன், D/S-BSNLEU.



















No comments:
Post a Comment