Friday, 15 May 2015

‘சட்டமும் நீதித்துறையும் சுரண்டும் வர்க்கங்களுக்கே சேவை செய்கின்றன’

பல்லாண்டுகளுக்கு முன்பே நீதித்துறையில் வர்க்கச் சார்பு இருக்கிறது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் E.M.S..நம்பூதிரிபாட் சுட்டிக்காட்டினார். 1967ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது E.M.S., “மிடுக்கான உடை அணிந்த, பானை வயிறு கொண்ட பணக்கார மனிதருக்கும், பக்கிரிபோல் உடையணிந்த, படிக்காத, ஒரு ஏழை மனிதனுக்கும் இடையே ஒரு வழக்கில் ஆதாரங்கள் சரி சமமாக நிற்கும் போது நீதிபதியானவர் அந்தப் பணக்கார மனிதருக்குஆதரவாகவே தீர்ப்பினை எழுதுவார்என்று குறிப்பிட்டார். மேலும், “நீதித்துறை என்பது தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும், உழைக்கும் வர்க்கங்களின் இதர பிரிவினருக்கும் எதிராகவே நிறுத்தப்பட்டுள்ளதுஎன்றும் .எம்.எஸ். குறிப்பிட்டார்.
சட்டமும் நீதித்துறை எனும் கட்டமைப்பும் அடிப்படையில் சுரண்டும் வர்க்கங்களுக்கே சேவை செய்கிறதுஎன்றும் .எம்.எஸ். கூறினார். நீதித்துறை கட்டமைப்பு பற்றிய இந்த உண்மையைக் கூறியதற்காக கேரள உயர்நீதிமன்றம் தோழர் .எம்.எஸ். மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது.அவருக்கு ரூ.1000 அபராதமும் விதித்தது. அபராதம் மட்டுமின்றி ஒரு மாத காலம் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது. கேரள உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தோழர் E.M.S. அவர்களுக்காக வி.கே.கிருஷ்ணமேனன் ஆஜராகி வாதாடினார்.அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹிதயத்துல்லா தலைமையிலான பெஞ்ச், கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினையே உறுதி செய்தது; ஆனால், அபராதத்தொகையை ரூ.50 ஆகக் குறைத்தது; ஒரு வார காலம் சிறைத்தண்டனை என்றும் உத்தரவிட்டது. அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த பிரபல வழக்கு, நீதித்துறையின் உயர்மன்றங்கள் அவற்றின் வர்க்க இயல்பைப் பற்றிய உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றன என்பதை பளிச்செனக் காட்டியது.இந்த வழக்கில் பல நீதிமான்களும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை விமர்சித்தனர். .எம்.எஸ். முன்வைத்த விமர்சனத்தில் நீதிபதிகள் மீதான காழ்ப்புணர்ச்சியோ அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட நீதிபதி மீதான தனிப்பட்ட விமர்சனமோ அல்லது ஒரு குறிப்பிட்ட தீர்ப்பு குறித்த குற்றச்சாட்டோ இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர்.இந்த வழக்கில், இன்னும் சொல்லப்போனால் சுதந்திரமாக கருத்துச் சொல்லும் உரிமை என்பது பறிக்கப்பட்டதாகவே விமர்சனம் எழுந்தது. பணக்காரர்களும் அதிகாரமிக்கவர்களும் நீதியின் மாமன்றங்களில் தங்களுக்கான வழிகளை தேடிப்பெற்றுக் கொள்ள முடிகிறது என்பதை நாம்பார்க்கிறபோது, அன்றைக்கு தோழர் .எம்.எஸ். நீதித்துறை கட்டமைப்பு குறித்து குறிப்பிட்ட அம்சங்களை இப்போது நினைவுகூர வேண்டிய தேவை உள்ளது.

No comments: