Saturday 30 May 2015

மே 30 - தோழர் கே.ரமணி நினைவு நாள்...

ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த தோழர் கே.ரமணி தொழிலாளிவர்க்கம் போற்றும் தலைவராக மலர்ந்தார். 
இன்று தொழிலாளிவர்க்கம் பெற்றிருக்கும் உரிமைகளைக் கட்டிக்காக்க தோழர்ரமணி போன்ற தலைவர்
கள் செய்த தியாகம்அளப்பரியது.பள்ளிக்கூடம் செல்வதற்கு வாய்ப்பில்லாத தோழர்ரமணி தொழிலாளர் 
தலைவராக உயர்ந்து, பல போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர். நாட்டின் விடுதலைப்போராட்ட
இயக்க நீரோட்டத்தில் பங்கேற்ற அவர் பிரிட்டிஷ்மற்றும் காங்கிரஸ் ஆட்சியாளர்களின் கொடியஅடக்கு
முறைகளைச் சந்தித்தவர். ஏழு ஆண்டு சிறை வாழ்க்கை,மூன்று ஆண்டு தலைமறைவு வாழ்க்கை என
 அத்தனைஅடக்குமுறைகளையும் இன்முகத்துடன் ஏற்றவர்.
தொழிற்சங்க இயக்கத்திலும், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட்கட்சியிலும் அதன்பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் உயர்ந்த பொறுப்புக்களை ஏற்று திறம்பட பணிபுரிந்தவர்.பஞ்சாலைத் தொழிலாளர் களுக்காக 50 காலம்பாடுபட்டவர் தோழர் கே.ரமணி. நாடாளுமன்ற உறுப்பினராக,சட்டமன்ற உறுப்பினராக திறம்பட
 செயலாற்றியுள்ளார். நாடாளுமன்ற, சட்டமன்றப் பணியின்போதுதமிழகத்தின் தொழில் வளர்ச்சி, 
தொழிலாளர் நலன், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறுபிரச்சனைகளை எழுப்பியுள்ளார்.தோழர் ரமணி
யின் அர்ப்பணிப்புமிக்க அரசியல் வாழ்வு தொழிலாளர்இயக்கத்தில் பங்கேற்று பாடுபடும் அனைவருக்கும்
 உத்வேகத்தைத் தரும். தோழர் கே.ரமணி நினனைவை போற்றுவோம்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

தோழர் ரமணி அவர்களின் நினைவினைப் போற்றுவோம்